posted 15th December 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- தமிழ், பிரகாஷிற்கு விபூதி நெற்றியில் பூசிவிட்டு போன பின்பு கணேஷன் ஏற்றிய ஊசி மருந்தினால் பிரகாஷிற்கு வலிப்பு வந்தது. இது தமிழினால்தான் என்று எல்லார் முன்னிலையிலும் வாதிட்ட கணேஷ்.
- மீனா தனது கணவனை எப்படி எல்லாம் கவனி்க்கின்றாள் தமிழ் என்று நேரடியாகப் பார்த்ததினால் தமிழின் பக்கம் சாட்சியாக இருந்தா. ஆனால், தமிழ், பிரகாஷினை sponge பண்ணிய அந்தத் துவாயில் ஏதாவது மருந்து கலந்துள்ளதா என்ற சந்தேகமும் இப்போது எழுகின்றது.
- உயிருக்குப் போராடி மீண்டு வந்த பிரகாஷினை காப்பாற்ற டாக்டர் கீர்த்தி தமிழினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதினால் ஏற்படப் போகும் ஆச்சரியத்தினைக் கொடுக்கவுள்ள மாற்றங்கள்.
- அண்ணன் கணேஷனையே நம்பி இருக்கும் மீனாவை நம்ப வைத்து கெடுக்கும் கணேஷன். எப்படியும் தனது கட்டுப்பாட்டினுள் பிரகாஷின் உடல் நிலையினை வைத்துக் கொள்ளப் பாடுபடும் கணேஷன்.
- வீடு தேடி வந்து கெட்ட செய்தியாக அறிவித்த குடுகுடுப்புக் காரன். அம்முவின் இரத்த உறவுக்கு ஆபத்து வந்துள்ளதைச் சொன்னான். அதாவது, பிரகாஷிற்குத்தான் இந்த ஆபத்து.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 13.12.2025
பிரகாஷிற்கு ஆபத்து என்று இரத்த உறவான அம்முவிற்கு குடுகுடுப்புக் காரனினால் அறிவிக்கப்பட்டது. பிரகாஷிற்கு எதிரியாக உள்ளவன் கணேஷன்தான். அதுமட்டுமல்லாமல், உயிராபத்து பிரகாஷிற்கு வரவிடமாட்டான் கணேஷன். ஏனென்றால், கணேஷினின் திட்டமே ஜடமாக பிரகாஷ் இருக்க வேண்டும் என்பதுதான். உயிரிருக்க வேண்டும், ஆனால், உயிர் போகக் கூடாது எனபதில் கணேஷன் மிகவும் கவனமாக இருக்கின்றான்.
அப்படி என்றால், இது தமிழினாலா உண்டாகியது என்ற சந்தேகம் எழுகின்றது? அதாவது, தமிழ் ஒத்தடம் பிடித்த அந்த தண்ணீரில் ஏதாவது மூச்சுத் திணறும் மருந்து கலந்துள்ளதா? இதைக் கலந்தது இரண்டு பேரில் ஒருவர் அல்லது இருவரும்தான். அவர்கள், வெண்பா அல்லது சம்யூத்தா அல்லது இருவரும். ஏனென்றால், தமிழ் முகத்தினையும் துடைத்தா அந்த ஈரத் துவாயினால்.
அதுமட்டுமல்லாமல், கணேஷனும் அதன் பின்பு மருந்தினை salineற்குள் ஏற்றி விட்டுச் சென்றான். ஆனால், கணேஷனின் டாக்டர் கூறிய படி கன நாட்களுக்குப் பின்பு அந்த மருந்தினைக் கலந்ததினால் பிரகாஷிற்கு வலிப்பு ஏற்பட்டதென்ற ஒரு கூற்றும் உண்டு.
ஆனால், டாக்டர் கீர்த்தியின் படி இவ்வளவு காலமாகக் கொடுக்கப்பட்ட மருந்துகள் அனைத்தும் சரியானவைகள் அல்ல, அதுவும் குறிப்பாகச் சொன்னால், அவை slow poison என்றும் சொல்லலாம் என்று கூறியதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
குடுகுடுப்பைக் காரன் சொல்லிய ஜக்கம்மாவின் கூற்றின்படி, அதாவது, காப்பாற்று தாயே என்றது, சில சமயம், தான் அண்ணனுடன் கதைக்காமல் ஏங்கிக் கொண்டிருப்பது போல, தனது அண்ணன் பிரகாஷும் தன்னுடன் கதைக்காத ஏக்கம் இருக்கலாம் என்று அம்மு கூறியதிலும் விஷயம் இருக்கலாம் என்றும் நினைக்கத் தோன்றுகின்றது.
கீர்த்தியும், தமிழும் கதைத்ததின் படி, வெளியில் இருக்கும் எதிரிகள் வைத்தியசாலையில் உள்ளவர்களின் உதவியுடன் இதனைச் செய்யலாம் என்றது ஒருபக்கம் இருக்க, தமிழுக்கு கணேஷன் மேலே இந்த அளவிற்கான சந்தேகம் வரவில்லை. ஏனென்றால், கணேஷன்தான் எல்லாவற்றிற்கும் சூத்திரதாரி என்பது இன்னமும் தமிழுக்குத் தெரியவில்லை என்பதுதான்.
தேனுவும், தாய் அம்முவாகவிள்ள ஹசீனாவும் பிரகாஷைப் பார்க்க வந்த போது இடைமறித்து கொடூரமாகப் பேசிய கணேஷனின் அராஜகத்தினைப் பார்த்த மீனா, தேனுவையும், அவவின் அம்மாவையும் பார்க்க அனுமதித்தா.
ஆனால், முத்தம்மாவுடன் பிரகாஷைப் பார்க்க வந்தது, அம்முவே. இவ்வளவிற்கு அம்மு risk எடுக்கக் கூடாததுதான். ஆனால், மீனா, பிரகாஷுடன் கதைத்துக் கொண்டுருந்த சமயம், கணேஷன் பிரகாஷின் அறைக்கு அந்த வாசலில் வரும்போது, கணேஷன் கண்களை மூடித் திறந்ததினை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அப்போ கணேஷன் உண்மையாக நடிக்கின்றாரா என்றும் எண்ணத் தோன்றுகின்றது.
இவ்வளவிற்கு பிரகாஷ் risk எடுப்பதற்குக் காரணம் யார் தன்னை இந்தக் கதிக்கு ஆளாக்கியது என்று கண்டு பிடிப்பதற்காகத்தான். இப்படி இருந்தால்தான் ஒவ்வொருவரும் தனது அறையினுள் வந்து என்னென்னவெல்லாம் கதைக்கின்றார்கள் என்று அறிந்து கொள்ளுவதற்காகவும் இருக்கலாமல்லவா?
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channelலினில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!