posted 13th May 2026
இந்த Serial Review & Analysisஇனி்ல் நீங்கள் பார்க்கப்போவது;
- உடனிருப்பவர்களின் வார்த்தைகளின் மதி்ப்பானது எப்பவும் சக்தியில் குறைந்ததுதான் – தெரியாதவர்களின் வார்த்தைகளுடன் ஒத்துப் பார்க்கையிலே
- மீனாவின் வார்த்தைகளின் வலிமையினால் வீட்டை விட்டு வெளியில் சென்ற அம்மு. கெஞ்சிப்பார்த்த அம்முவால், அண்ணி மீனாவின் கண்டனத்தினை மேவ முடியவில்லை.
- கணேஷனின் தொடர்ச்சியான துர்மார்க்க வழிகளினால் சிக்கித்தவிக்கும் அம்முவின் குடும்பம்.
- பிரகாஷ் இருக்குக் கூடாதென்பதில் கவனமாக இருக்கும் கணேஷன்.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
Varisu - வாரிசு - 12.05.2026 - பிறரின் கதைகளுக்கு வீட்டிலும் மவுசு
தமிழ் சொன்ன சந்தோஷமான செய்தியினைக் கேட்டு மகிழ்ந்து கொண்டு அம்முவும், தேனுவும் இருக்கையிலே, அம்முவின் அண்ணனின் செய்தி அதனை விட மிகவும் சந்தோஷத்தினைக் கொடுத்தது.
ஆனால், இந்தச் சந்தோஷத்தினை நிரந்தரமாக தக்க வைக்க முடியாத நிலையினில், சிபீயின் நடவடிக்கையானது தமிழைச் சந்தித்து விட்டு போகையிலே, சிபீயின் behaviorரிலிருந்து தமிழ் உணர்ந்து வியந்து கொண்டிருக்கையிலே, மீனா, அம்முவின் அண்ணி, அம்முவைச் சந்தித்து தகாத வார்த்தைகளினால் திட்டித் தீர்த்து விட்டதானது அம்முவின் இதயத்தினை உடைத்தெறிந்தது.
அப்பா எங்கிருக்கின்றார் என்று தமிழிடம் அறிந்து கொண்டு புறப்பட்ட சிபீ, தனது தகப்பன் பிரகாஷைத் தேடிக் கொண்டு எதுவிதமான தாமதமில்லாமல் விரைந்தோடினான். அவ்வாறு சிபீ போகையிலே சிபீக்குக் கிடைத்த போன் கோளானது, செல்வரத்தினத்திடமிருந்து சிபீயின் தகப்பன் பிரகாஷைக் காப்பாற்றும்படியும், எனது பெயரினைக் கேட்கக் கூடாதென்றும் உறுதியாக அந்தக் குரல் கூறியதினை திடமாக நம்பினான் சிபீ.
உயிருடன் இருப்பவர்களின் வாய் வார்த்தைகளானது பெலவீனமாகின்றது. யாரோ கண்ணுக்குத் தெரியாத குரலின் சக்தியானதுதான் கேட்பவருக்கு உண்மையெனத் தோன்றும். இதுதான் வாழ்க்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிஜம் என்பது.
இப்படியான வார்த்தையின் முரண்பாட்டினால் மீ்ண்டும் தமிழுக்கும், சிபீக்கும் இடையில் விரிசல் துளிர்ப்பதற்கு சந்தர்ப்பம் அதிகமாக இருப்பதாகவும் தெரிகின்றது.
இப்படியாக மீண்டும் மீண்டும் தனது தகப்பனின் மீதான உண்மை நிலையினை சிபீக்கு விளங்கப்படுத்தி, விளங்கப்படுத்தி களைத்த நிலையினில் தமிழ். சிபீக்கோ தமிழ் பொய் சொல்ல மாட்டாள் என்று தெரிந்திருந்தும், இந்த விஷயத்தில் சிபீ தமிழை விளங்க மாட்டேன் புரிந்து கொள்ள மாட்டேன் என்று அடம்பிடிப்பதில் என்னதான் நியாயம் இருக்கின்றது?
வார்த்தைகள், தமிழின் வாழ்க்கையினை சின்னாபின்னமாக மாற்றிக் கொண்டிருப்பதையே வாழ்க்கையாகக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழ் தனது வாழ்க்கைப் போராட்டத்தினைத் தொடருகின்றாள்.
கணேஷனின் அரசியல் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கின்றது. அதுவும், செல்வரத்தினத்தின் மேலாகப் போடப்பட்டுக் கொண்டிருக்கும் பிழைகளானது மேலும், மேலும் குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இவற்றினை நிரூபிப்பதற்கும் உண்மைகள் தெரிந்திருந்தும் வெளியில் சொல்ல முடியாமல் இன்னமும் ஏன் ஒருவரும் முன் வரவில்லை என்பதுமல்லலாமல் காத்துக் கொண்டிருக்க வேண்டிய நிலையானது தமிழுக்கும், பிரகாஷிற்கும் ஏன் என்பதானது இப்போதைக்கு மறைக்கப்பட்டுள்ளது.
மீனாவின் ஆக்றோஷமான திட்டலுக்கு எந்த பெண்தான் அடங்கிப்போய் இருப்பாள். உணர்வில்லாமல்தான் வாழுவாள். பாசத்துக்குக் கட்டுப்பட்டவள் அம்மு. தனது அண்ணன் பிரகாஷின் உயிருக்குத் தன்னால்தான் ஆபத்து வந்துவிடுமோ என்று தனது அண்ணி, மீனாவின் சொற்களைத் தாங்க முடியாமல் இருந்தும், அண்ணியின் நியாயமற்ற நிலைப்பாடுகளை நாசூக்காக மீனாவிடம் கூறியும், அண்ணனின் சௌகரியம்தான் முக்கியம் என்று முன்னுரிமை கொடுத்து வீட்டினை விட்டு வெளிக்கிட்டு விட்டா அம்மு.
ஒருவிதமான உறவில்லாதவ ஹசீனா. தேடி வந்தா அம்முவை. பூட்டாமல் திறந்த நிலையினில் இருந்த வீட்டினைக் கண்டதும் ஆதங்கத்தில் தமிழுக்குச் செய்தியினைக் கொடுத்தா.
ஒருவர் வாழ்க்கையில் நொந்தால் இப்படித்தான் அம்மு மாதிரி அல்லோலகல்லோலப் பட வேண்டி வரும் என்பது இதில் கண்கூடாக விளங்குகின்றது. எல்லோரும் வதைப்பார்கள், ஏறி மிதிப்பார்கள். கசப்பென்றால் என்ன என்று வந்தவர், போனவர் எல்லாம் அடிக்கடி காட்டுவார்கள். ஆனால், அவர்களின் வாழ்க்கையோ ஒட்டுணியினை விடக் கேவலமாகத்தான் இருக்கும் என்பதனை உணராமல் அம்முவையோ வறுத்தெடுக்கின்றார்கள்.
செல்வரத்தினத்தின் மீதான பழி துடைக்கமுடியாத வாழ்க்கையினை இவர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். இவருக்கு ஏற்பட்ட விபத்தினால் எப்படித்தான் அவரது நினைவுகள் கலைந்தனவோ அப்படியான ஒரு விபத்தானது மீண்டும் ஏற்பட்டால் ரத்தினத்திற்கு மீண்டும் நினைவுகள் வரலாம். ஆனால், அது எப்போதுதான் நடைபெறும்?
கணேஷன் செல்வரத்தினத்தினைத் தேடி ஆட்களை அனுப்பி ரத்தினத்தினைப் பிடித்தாலும், அவரின் மூளைக் குளப்பத்தினால் அவரின் பெயரானது இப்போது நல்லதம்பியாகவல்லவா இருக்கின்றது. இதனால், செல்வரத்தினம் இவர்களிடம் அகப்பட வாய்ப்புகள் குறைவாக இருக்கின்றது.
கணேஷனுக்கோ மூளைக் குளப்பமாகவும் வரலாம், செல்வரத்தினத்தின் கதைகளினால்.
மீனாவின் திட்டலினால் வீட்டினை விட்டு அம்மு எங்குதான் போவா? கோவிலினில்தான் தஞ்சம் போக வாய்ப்புகள் உண்டு.
மீனாதான் அம்முவைத் திட்டி துரத்தி விட்டா என்று ஜனாம்மா அறிந்தால் ஜனாம்மா மீனாவின் மேலே கோபம் கொள்ளுவா என்றா நினைக்கின்றீர்கள்? அப்படி நடப்பதற்கு சந்தர்பமானது கம்மியாகத்தான் இருக்கின்றது.
எமது Reel Review channel லினைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்? உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!