posted 12th December 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- Food Festival முடிந்ததும் தமிழுக்கும், சிபீக்குமான சண்டை தொடங்கியது இருவருக்குள்ளும். இதனைத் திட்டம் போட்டு ஆரம்பித்ததே தமிழ்தான். அதனை பொலிஸின் கண்ணுக்கும் பட வைத்தாள். தனது மனைவி என்று சிபீயின் வாயாலே சொல்லவும் வைத்தாள். இதுதான் தமிழ்.
- பாயாசத்தினுள் விஷத்தினைக் கலந்தாள் வெண்பா. இதனை அவள் நினைத்தபடி சம்யூத்தாவின் மேலே பழி விழும்படியான திட்டத்தினையும் போட்டாள்.
- சம்யூத்தாவும் பாயாசத்தினுள் விஷத்தினைக் கலக்க வந்தவள்தான். சிபீயினைக் கண்டதும், விஷ போத்தலினில் இருந்து ஒரு சில துளிகள் பாயாசத்தினுள் விழுந்தது. அதுவும் அவளுக்குத் தெரியாது.
- மனிதரைக் கொல்வதனால் ஜனாம்மாவின் பெயரினைக் கெடுக்க நினைக்கும் வெண்பாவின் மனம் மிகவும் கொடூரமானதாகத் தெரிகின்றது.
- சம்யூத்தா, ஒரு சில ஊழியர்களுக்கு பணத்தினைக் கொடுத்து ஜனாம்மாவின் Factory யில் குளப்பத்தினை உண்டாக்குகின்றாள்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 11.12.2025
Festivalலானது நிறைவேறி முடிந்ததான் தாமதம், தமிழுக்கும், சிபீக்குமான கலகம் ஆரம்பமானது. எதிராக வந்த பிரச்சினைகளைச் சமாளித்தாள், தமிழ். ஆனால், நஞ்சு கலக்கப்பட்ட விஷயம் சிபீ்க்குத் தெரிந்தும் அதனைக் பற்றி ஒன்றும் தமிழுக்குச் சொல்லவில்லை. தமிழும் நடைபெற்ற அரச உத்தியோகத்தர்களின் ஆட்டத்தினைப் பற்றி சிபியிடம் சொல்லவில்லை. தமிழ் சொன்னாலும் சிபீ அதனை appreciate பண்ண மாட்டான். ஆனால், சிபீ கௌரவத்தில் தமிழிடம் சொல்லக் கூடாதென்று இருப்பான்.
பிடிக்காத கல்யாணம். உடனே பிடித்துவிடும் என்று என்னென்று எதிர்பார்க்க முடியும்?
நல்லவிதமாக நடந்தேறிய Festival லானது பலவிதமான முன்னேற்றங்களை உருவாக்கியுள்ளது. இதனால் நன்றி கூறினாள் தமிழ், வினோத்திடம். இந்த விஷயத்தினைப் பகிர்ந்து கொண்டாள் தமிழ் சிபீயிடம். எதிர்பார்த்தது போன்று அவனும் தமிழை வாழ்த்தவில்லை.
கொஞ்சம் கொஞ்சமாக வேலையினைத் தமிழிடம் பழகுகின்றாள் வெண்பா. ஏனென்றால், எல்லாம் பழகி முடிய, தான் ஜனாம்மாவின் சாம்றாஜ்ஜியத்தினையே கைப்பற்றுவதற்காக. ஆனால், தமிழ் அவ்வளவிற்கு வேலந்தியல்ல. எல்லாரினையும் விட, எல்லாவற்றிலேயும் ஜனாம்மாவை விட மிகவும் sharpஆனவள் தமிழ்.
ஜனாம்மாவிற்கு மன்னிக்கும் குணம் இருக்கின்றது. ஆனால், தமிழுக்கு அல்லவே. அடித்துத் தட்டிவிட்டு விட்டு போய்க் கொண்டேயிருப்பாள். நல்லவருக்கு நல்லவள். கெட்டவருக்கு அவர்களை விடக் கெட்டவள். அவள்தான் தமிழ்.
முக்கியமான presentationரினை ஆயத்தப்படுத்தும்படி ஜனாம்மா தமிழிடம் ஒரு பொறுப்பினைக் கொடுத்தா. இதனை எப்படி எல்லாம் குளப்பலாம் என்று திட்டம் தீட்டினாள் சம்யூத்தா.
ஒரு விதமான வேலையும் இல்லாமல் இருந்து கொண்டிருக்கும் சம்யூத்தா கேடுதல்களைச் செய்வதனை விட அவளுக்கு வேறொன்றும் இல்லை. ஆனால், சிபீ அவளைத்தான் மிகவும் நம்பிக் கொண்டு இடைக்கிடை எச்சரித்துக் கொண்டிருக்கின்றான். இது இவனுக்குத் தேவைதானா?
மாமனார் பிரகாஷைப் பார்க்கச் சென்ற தமிழ் அவருடன் இன்றைய நிலவரத்தினைச் சொல்வதுமல்லாமல், நிகச் சூட்டு வென்னீரால் அவரைத் துடைத்து, நீறும் வைத்துவிட்டு, தனது மாமியார், மீனாவைப் பற்றியும் சொல்லிக் கொண்டு, தனது வேலையினைப் பற்றி எல்லாம் சொல்லி விட்டு வேலைக்குப் புறப்படுகின்றாள். எப்படியாவது, எப்போவாவது மாமனார் உண்மையாக விழித்தெழும்புவார் என்ற அசையாத நம்பிக்கை அவளுக்கு.
ஆனால், கணேஷனோ பிரகாஷை இதே நிலையினில் வைத்திருக்க வேண்டும், அவர் சாகவும் கூடாது, உயிருடன் எழும்பவும் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு ஒரு மருந்தினை ஊசி மூலம் ஏற்றிக் கொண்டிருக்கின்றான். இவனின் விஷயமும், விஷம் நிறைந்த எண்ணமும் இன்னமும் ஒருவருக்கும் தெரியவில்லை. எல்லாவற்றினையும் பிடிக்கும் ஜனாம்மாவால் கூட இவனைப் பிடிக்க முடியவில்லை. இவனுக்கு எவ்வளவு கிறிமினல் புத்தி. அதற்கேற்றது போலத்தான், வெண்பாவை வளர்த்திருக்கின்றான். குடும்பம் விளங்கிடும்.
தமிழோ மாமனாரை மீட்டெடுக்க எவ்வளவோ முயற்சிகளை எடுக்கின்றாள். மீனாவுக்கோ தமிழைப் பிடிக்காதுதான். ஆனால், அவள் தன் புருஷன் பிரகாஷை எப்படி எல்லாம் பார்க்கின்றாள் என்று நேராகவே அவதானித்ததினால், தமிழின் மேல் மீனாவுக்கு ஒரு நம்பிக்கையும், அன்பும் மலருகின்றது. இந்தக் கணமே மீனா, முத்தம்மா தமிழைப் பற்றி சொன்னதினை நினைக்க மாட்டாவா? நினைப்பா.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channelலினில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!