posted 15th September 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- சிபீ மாறிவிட்டார் என்று தமிழ் சொன்னதினைக் கேட்ட ஜனாம்மா. சிபீயின் உள் மனதினை அளந்திடாமல் மேலோட்டமாக நம்பிக் கொண்டிருக்கும் தமிழ். எல்லாவற்றினையும் அலைசி ஆராயும் தமிழின் மனம் ஊசலாடுகையில், தேனுவின் வீழ்ச்சியில் தப்பில்லையே!
- சிபீயின் நல்ல குணங்களை மட்டும் தெரிந்து கொண்ட தமிழ் ஜனாம்மாவிடம் அவற்றினைச் சொல்லுகளின்றாள். இதுதான் தமிழ் சிபீ என்று சொல்லுகையில் தமிழை நெகிழ வைத்த ஜனாம்மா சொன்ன வார்த்தைகள்.
- தமிழின் அம்மாவை அத்தை என்று தமிழிடம் சிபீ, தானே சொன்னானா? அல்லது கடவுள் அவனையும் அறியாமல் சொல்ல வைத்தாரா? எதிர்காலத்தில் அத்தைதானே என்பது தமிழை ஏமாற்றுவதற்கு சிபீ சொன்னவை. அவை தமிழை தன் வலையினில் விழுத்தி வெளியில் துரத்துவதற்கு பாவித்த அம்(ன்)புகள். அன்புகள் அல்ல.
- ஏற்கனவே நான் கூறியவை, பிரகாஷின் கொலை முயற்சியின் சூத்திரதாரி கணேஷன்தான் என்று. அது இங்கு கண்கூடாகத் தெரிகின்றது. ஆடு தலையினைக் கொடுத்ததாம், என்னத்திற்கோ.
- தகப்பனின் விபத்தினை நேராகவே கண்டவன் சிபீ. அதனை விட, தான்தான் அதற்குக் காரணம் என்று அவனுடைய மனதினில் ஆழப்பதிந்த அந்தக் கொடூர காட்சி.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 10.09.2025
சிபீ பிறப்பிலேயே நல்லவன். அவனின் குணமானது அடிக்கடி அவனையும் அறியாமல் வெளியே வருகின்றது. அதில் ஒன்றுதான், குடிகாரக் குடும்பத் தலைவனின் றோட்டிற்கு வந்த மனைவி மீதான கொடூரத் தாண்டவம்.
குடித்தவன் தனது தாலி கட்டிய மனைவியை றோட்டினிலே வைத்து அடித்துத் தள்ளுகின்றான். ஆனால், அடிகளையும் வாங்கிக் கொண்டு அடங்கி, அழுது கொண்டிருக்கும், மனைவி.
தலையினை சபையின் முன்னால் குனிந்து, சபையினரின் சாட்சியாக, கைகளைக் குமித்து, வணங்கித் தாலியினை ஏற்றுக் கொண்டவள் அவள். அதற்குக் காரணமாக, குடும்பத்தினையே அவள், தெய்வம் இருக்கும் கோயிலாக மனதினில் ஏற்றுக் கொண்டு, கணவனை தன் தெய்வம் என்று தன் கண்முன்னே நிறுத்தியவளாய் மண மேடையில் குந்துகின்றாள் யாரோ பெற்ற பிள்ளையானவள் பய பக்தியோடு. இதுதான் தன் குடும்பம் இனி என்று மனதினில் ஏற்றுக் கொண்டு தாலியினை ஏற்றுக் கொள்ளுகின்றாள்.
அப்படி வருபவள், புருஷனின் அடிகளுக்கும், மாமியாரின் கொடுமைகளுக்கும், மற்ற உறவுகளின் தொல்லைகளுக்கும் அடிமையாக விற்கப்பட்டவள் அல்ல மனைவி என்பவள்.
அந்த தத்துவத்தினை அறிந்தவனாய் இந்த நிகழ்ச்சியினைக் கண்ட சிபீ கோபமடைந்தவனாய் அடிக்கும் புருஷனுக்கு ஆதரவாகவும், சிபீக்கு எதிராகவும் வக்காலத்து வாங்கும் மனைவியினைப் பார்த்து பெருமிதம் கொள்ளுகின்றான்.
அந்தப் பெண்ணில் இரக்கம் கொண்ட சிபீ அவளுக்கு ஒரு வேலையையும் ஜனாம்மாவின் கொம்பனியில் கொடுக்கின்றான். இதுதான் சிபீயின் உண்மையான இரக்கக் குணம். அதற்காக, தமிழினை பழி வாங்கும் திட்டத்தில் இருந்து பின்வாங்குவான் என்றில்லை. ஆனால், இந்தத் திட்டமானது தமிழுக்குத் தெரிய வந்தால், அதுதான், சிபீ தமிழினை அவன் வாழ்க்கையிலே கதைத்த கடைசி நாளாக இருக்கும். அதன் பின்பு, தான்தான் முறை மாமன், தமிழின் அம்மாதான் உண்மையான அத்தை என்று தலை கீழாக நின்று கொண்டு ஒரு முனிவருக்குப் பக்கத்திலிருந்து கொண்டு தவம் செய்தாலும் தமிழ் சிபீக்குக் கிடைக்க வாய்ப்பே இல்லை. அவன் தமிழ் என்ற அத்தியாயம் ஒன்று அவன் வாழ்க்கையின் புத்தகத்தில் இருந்ததற்குரிய தடயமே அதன் பிறகு இருக்காது.
வாழ்க்கையில் இப்படியாக குடிகாரனின் ஒரு குடும்பத்திற்கு உதவி செய்துவிட்டான் என்றதற்காக, தமிழை உண்மையாகக் காதலிக்கின்றான் என்றல்ல. அதற்கு உதாரணமாக, தமிழுக்காக cleaning in chargeஜினை வேலையினை விட்டுத் தூக்கியதும் சிபீயின் நடிப்புத்தான் என்று இங்கு தோன்றுகின்றது.
சிபீயின் நடவடிக்கைகளானது, தமிழுக்கு காதல் விவகாரத்தினை, அதாவது, தான் காதல் செய்வது அவளுக்குப் பிடிக்காததினால், சிபீயினுடைய ஆக்கினை தாங்காமல், தமிழ் தானாகவே வீட்டை விட்டுப் போய்விடனும், போயே ஆவாள் என்பதுதான். இது ஒருவகையில் ஒரு safeஆன approach என்று தோன்றுகின்றது. அதாவது, நோகாமல் ஊசி குத்துவது போல் என்றும் சொல்லலாம்.
தனது விளையாட்டுக் குணத்தினால்தான் தன் தகப்பனார் பிரகாஷ், விபத்தில் சிக்கி இந்த நிலையினில் இருக்கின்றார் என்று அவன் மனதினில் ஆழப் பதிந்துள்ளது. இந்த வலியானது, மனதினில் ஏற்படுத்தப்பட்ட ஆறாத காயம், சிபீயை சமுதாயத்திலிருந்து ஒதுங்க வைத்துள்ளது. இதற்குக்குரிய முக்கியமான குற்றவாளி கணேஷன்தான். இதனை ஏற்கனவே எதிர்வு கூறிவிட்டேன்.
வாழ்க்கையில் நாங்கள் செய்யும் தவறுகள் அவற்றினைத் தெரிந்தோ அல்லது தெரியாமல் செய்கின்றோமோ அவையெல்லாம் இங்கு கடவுளின் கணக்குப் புத்தகத்தில் பிறிம்பு பிறிம்பாக எழுதி வைக்கப்படும். இவை அனைத்தும் ஒரு கட்டம் எங்கள் வாழ்க்கையில் திரும்பி எம்மை நோக்கி வரும். அதற்குரிய வட்டி குட்டி எல்லாம் சேர்ந்து வரும்.
கணேஷனுக்கும் குடும்பம் இருக்கின்றதுதானே! அதுவும், பிள்ளை குட்டிகளுடன்தானே குப்பை கொட்டிக் கொண்டிருக்கின்றான். மாற்றான் பிள்ளைக்கு விளைவித்த நன்மை, தீமை அனைத்திற்கும் பதில் சொல்லும் இடத்தில் கணேஷனும், அவன் குடும்பமும் இருக்கின்றது. நாம் செய்வன எல்லாம் நம்மோடு மட்டும் நிற்கும் என்றல்ல, மாறாக, நம் பரம்பரைக்குமே குறைவின்று செல்லும். அதிலிருந்து தப்பவும் முடியாது, அவற்றினைத் தவிர்க்கவும் இயலாது.
இந்தச் சிறிய வயதினில், சிபீ மன நோயாளியாகி விடக் கூடாது என்பதற்காக, சிபீ லண்டன் மாநகருக்கு அனுப்பப் படுகின்றான். குடும்பத்தினைப் பிரிந்த வாழும் வாழ்க்கையினைக்கு யார் காரணம்? கணேஷன்தானே!
கணேஷனுக்கு கடவுளுடனான கணக்கு ஏறிக் கொண்டே போகின்றது.
உண்மையான அத்தை, தமிழின் அம்மா என்று தெரியாத சிபீ, வாழ்கையினை விளையாட்டாக எடுத்துக் கொள்ளுகின்றான். தமிழ் அனுபவித்த வலியின் வலியையும், வலியினால் ஏற்படும் கொடிமையினையும் அனுபவிக்க தன்னைத் தயாராகிக் கொண்டிருக்கும் நேரம் வந்து கொண்டிருக்கின்றது. சிபீ Readyஆக இருக்கணும், warm up பண்ணி ஆயத்தமாக இருக்கலாம் சிபீ, எல்லாவற்றினையும் தாங்க வேண்டுமல்லாவா?
கணேஷா, are you ready to suffer? திருந்துங்க சார். இல்லையென்றால், காலம் திருத்தல் வேலையினைக் கையில் எடுத்தால் நீங்கள் தாங்க மாட்டீர்கள்.
இனி choice உங்களுடையது.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!