posted 10th January 2026
இந்த Serial Review & Analysisஇனி்ல் நீங்கள் பார்க்கப்போவது;
- சிவதானு ஐயாவைச் சமாளிக்க, சிபீ அவர் வீட்டினிலே நிற்கும் போதே அந்த நம்பிக்கையினைச் சம்பாதிக்க மூலதனமாக்கப்பட்ட சிபீ.
- கமத்தொழில் என்றால் இலேசான தொழில் அல்ல என்பதனை, கமக்காரரின் நெற்றி வெயர்வையானது கனமிக்கது என்பதனை சிபீ உணர வேண்டும், அதற்கு உயிர் கொடுக்க வேண்டும் என்பதனையே சிபீயிடம் தமிழ் எதிர் பார்க்கின்றாள்.
- ஜனாம்மாவும், தமிழும் சிபீயின் கஷ்டத்தினைப் பார்க்கின்றனர். மனதால் அழுகின்றனர். பிள்ளை கசக்கின்றது என்றாலும் வருத்தம் குணமாக வேண்டுமென்றால் கசப்பு மருந்தினைக் கொடுப்பது போலதான் இப்போது சிபீயின் நிலைமையும்.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 09.01.2026
சிபீ கஷ்டப்படுவதைக் கண்டு இரகசியமாகக் கண்கலங்கி நின்றாள் தமிழ். அதனை ஜனாம்மா அவதானித்ததுமல்லாமல், ஜனாம்மாவாலும் சிபீ கஷ்டப்படுவதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தட்டிக் கொடுத்து ஊருக்கே போய விடலாம் என்று மனமுடைந்த நிலையில் ஜனாம்மா தமிழிடம் சொன்னாலும், தமிழ் அதனை ஒத்துக் கொள்ளவதாக இல்லை. காரணம், சிபீயை நல்ல ஒரு புருஷனாக மாற்ற வேண்டும் என்ற ஒரு பிடிவாதம்தான் தமிழுக்கு.
A/Cக்குக் கீழே இருந்தால் மட்டும் ஒருவன் நல்ல மனிதனாக வாழ முடியாது. அடிமட்டத்தில் உள்ளவர்களும் மனிதர்களே என்ற உணர்வானது சிபீயின் மனதினில் வேரூன்ற வேண்டும் என்பதுதான் தமிழின் குறிக்கோளில் ஒன்று.
சிபீ, சும்மா, சொன்னதற்காக வயலில் இறங்கி வேலை செய்தால் மட்டும் போதாது. மாறாக, அந்த உணர்வானது மனதினில் ஒன்றாகக் கலக்க வேண்டும். அப்போதுதான் அவ்வாறான மக்களின் வலியினை ஒரு மனிதனால் ஏற்றுக் கொள்ள முடியும். அவனால், மாறவும் முடியும். இதைத்தான் தமிழும் சிபீயிடம் எதிர் பார்க்கின்றாள்.
பிறந்ததிலிருந்து மெத்தையில் படுத்து A/Cயினில் உறங்கி, dining tableளிலே இருந்து விதம் விதமான உணவினை உண்ட சிபீக்கு, இப்போது கிராமத்தில், வெறுந்தரையில் ஓலைப்பாய் போட்டு, பூச்சிக் கடியினுள், இயற்கையான காற்றினில் உறங்கி, களியுடன், கருவாட்டினைக் கடித்து எல்லோருக்குமான ஒரே உணவினை தரையிலிருந்து சப்பாணி கொட்டிக் கொண்டு உண்டு, ஆற்று நீரினை அருந்தி, பம்பால் அடிக்கும் தண்ணீரில் குளித்து, வியர்வை நிலத்தில் விளும் இயற்கையுடன் ஒன்றாய்க் கலந்த வாழ்க்கையானது, இந்த மூன்று நாட்களில் சிபீக்குப் பழகிவிடும் என்பது கற்பனைகளில் மட்டுமே சாத்தியமாகலாம். ஆனால், அது நிட்சயமாக நடக்கும் என்றும், சிபீ அதற்குப் பழக்கமாவார் என்றும் திடமாக நம்பி துணிந்து இறங்கி உள்ளாள் தமிழ்.
ஆரம்பத்திலிருந்து சிபீயை எப்படியாவது திருத்தலாம் என்று மிகவும் பாடுபடுகின்றாள் ஒரு மனைவியாக தமிழ் இங்கு. ஆனால், தன் மீதான பழி அதுதான், துரோகம் என்ற மிகவும் பாரதூரமான பழியினை அகற்ற தமிழ் ஒரு முயற்சியும் எடுப்பதாகத் தெரியவில்லை. ஏனென்றால், அவள்தான் துரோகமே செய்யவில்லையே!
ஆண்களோ சிலசமயம் வரும் பிரச்சனைகளால் உடனே உடைந்துபோய் விடுவார்கள், சிபீயைப் போல. ஆனால், பெண்களோ இலேசாக உடைய மாட்டார்கள், தமிழைப் போல. சிபீ என்னதான் சொன்னாலும், அவளை எப்படித் திட்டினாலும், தமிழோ அவற்றையெல்லாம் கணக்கெடுக்காமல் போய்க் கொண்டே இருப்பது மிகவும் திறமையான குணம் என்றுதான் சொல்லலாம்.
சிவதானு ஐயா கலாநிதி பட்டத்தினை அமெரிக்காவில் கமத்தொழிலில் பகுதியில் பெற்றவராய் தனது மக்களுக்காக வேஷ்டி, ஷேட்டுடன் கமத்தில் இறங்கி ஒரு பெருமையும் இல்லாமல் வேலை செய்கின்றார், சக தொழிலாளிகளுடனும் சேர்ந்து. அந்த மட்டத்திற்கு சிபீயைக் கொணர வேண்டும் என்றுதான் தமிழ் நினைக்கின்றாள். ஆனால், இதற்கு கமத்தில் இறங்கி கஷ்டப்பட்டுத்தான் வேலை செய்து வாழ்க்கையின் work experience இனைப் பெற வேண்டுமென்றில்லை. மாறாக, அதனை ஒருவர் மனதினில் உணர்ந்தாலே போதும். அம்மனிதன் மாணிக்கமாகவே ஒளிர்விடுவான்.
சிபீ எப்படி சிவதானு ஐயாவை ஒரு கமக்காரனாக நினைக்கையில், ஒரு பாடத்தினை நினைவு கூரலாம். எப்பவும், ஒருவர் கண்ணாடி மறைப்பிற்கு உள்பக்கம் நின்று கொண்டு அவரிடம் வரும் வாடிக்கையாளரைக், கண்ணாடியில் எதிர்ப்பக்கமாக இருப்பவரைக் குறைவாக எடை போடக் கூடாது. இங்கு சிவதானு ஐயாவையும், சிபீயையும் ஒருவருக்கொருவர் எதிர் பக்கமாக நினைத்துப் பாருங்கள்.
ஆவின் சாணத்தின் நன்மைகளை இனி சிபீ அறிந்து அதில் நிபுணத்துவம் செய்வான் சிபீ. எமது மூதாதையரின் காலத்தில் இதன் வழக்கு நிறைவாக இருந்தது தெரியாமலில்லை.
ஜனாம்மா நொந்தாலும், தமிழ் நொந்து போகாமல் ஜனாம்மாவைக் காப்பாற்றிக் கொண்டு இருக்கின்றாள். இதுதான் விளங்கிக் கொள்ளும் வாழ்க்கை என்பது.
தமிழை யார் இவ என்று சிவதானு ஐயா கேட்கையிலே, உங்கள் சொந்தமா என்று மேலோட்டமாக கேட்டாலும், அதன் உண்மையினைப் புரியாத ஜனாம்மா இ்ல்லை, அதற்கும் மேல் என்று கூறியது எவ்வளவோ பெரிய விஷயம் என்று நினைக்கத் தோன்றுகின்றது. இதுதான் நம்பிக்கை என்பது.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channelலினில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!