Varisu - வாரிசு - 08.09.2025

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!

  • சிபீ, தமிழின் மொத்தக் குடும்பமே outdoorsக்கு நிரந்தரமாக வந்து விட்டனர் என்றதும், தாயின் கதையினைக் கேட்காமலே அவர்களைத் தேடி outdoorsக்கு ஓடி விட்டான். நேற்று இதனைச் சொன்னேன்தானே!
  • சிபீ, தமிழின் தாயினை, அதாவது, அத்தையினைக் கண்டதும் அவனுக்கு ஏதோ உள்ளுணர்வு மீண்டும் விழித்ததனை உணர்ந்தான். அது மட்டுமல்லாமல், தமிழின் தாய், ஜெயறானி, சிபீயைத் தொட்ட போது, தான் தூக்கி வளர்த்த பிள்ளை இவன் இவ்வளவு வளர்ந்திற்றானே என்று அந்த உணர்வினில் மெய்சிலிர்த்து நின்றா.
  • உண்மையினை ஜனாம்மாவுக்கும், சிபீயுக்கும் மறைக்க வேண்டிய இறுக்கமான, அத்துடன் வெகுவும் சிக்கலான விஷயமாக இருக்கின்றது.
  • கணேஷனதும், மீனாவினதும் திட்டமோ தமிழை ஓடோட வீட்டை விட்டுத் துரத்த வேண்டும் என்பதுதான். இதனை சேதுவை வைத்துக் கொண்டு திட்டம் தீட்டியதுதான் பிழையாகின்றது.
  • தாய், ஜெயறானி, அழைக்கப்பட்டா சிபீக்காக. ஆனால், தள்ளி வைக்கப்பட்டா ஜனாம்மாவிற்காக. இது சிக்கலோ சிக்கலாக உள்ளதே.
  • சிபீ உண்மையாகத் தமிழை விரும்புகின்றானா? நம்புவோம். Positiveவாகத் think பண்ணுவோம், நன்மையே பயக்கும். ஆனால், என் மனம் கொஞ்சம் தடுமாறுகின்றதே!

எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.

நன்றி.

வாரிசு - Varisu - 08.09.2025

தமிழின் தாய், ஜெயறானியின் கை சிபீயில் பட்டவுடன், இருவருக்கும் மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. ஏன் என்று தெரியாத நிலையில் சிபீ, ஏனென்று தெரிந்தவவாக ஜெயா.
தூக்கி வளர்த்த பாசம் இப்போது தொட்டு விளையாடுது. அதுவும், சொல்ல முடியாத உணர்வுகள் திண்டாடுது. கூப்பிட வாயிருந்தும், அண்மையில் ஆள் இருந்தும் உரிமையுடன் அரவணைக்க முடியாத இக்கட்டான சூழ்நிலை. கொடுமையிலும் கொடுமை இது.

வீட்டின் எல்லா பொருட்களையும் ஜனாம்மா கொண்டு வரச் சொல்லி எல்லாமே ஜனாம்மாவின் வீட்டிற்குக் கொண்டு வரப் பட்டாயிற்று.

மீனாவின் ஆசை நிராசையாகி விட்டது. கனவுகள் தகர்க்கப்பட்டன. கணேஷனால் இனிப் போடும் திட்டங்கள் ஒரு முடிவுக்கு வருமா?

ஜனாம்மாவின் சொத்தினிலே ஜனாம்மாவுடன் இருப்பவர்கள் அதாவது பூமிக்கும் பாரமாகவும் இருப்பதோடுமல்லாமல், ஜனாம்மாவுக்கு இடைஞ்சலாகவும், அத்துடன், முழுச் சொத்தினிலேயும் கண் வைத்துக் கொண்டிருப்பது றொம்பக் கூடாது.

இவர்கள்தான் இங்கு ஜனாம்மாவிற்கே சட்டங்களைப் பேசுகின்றார்கள், யார் இங்கு இருக்க வேண்டும், யார் இருக்கக் கூடாதென்று. வேடிக்கையாக அல்லவா இருக்கின்றது.

இவர்களுக்கு ஜனாம்மா கொடுத்த பதில், சரியான நேரத்தில் கொடுக்கப்பட்டது. அது அவர்களுக்கான காலக்கேடு போன்றிருந்தது. இது தனது வீடு என்றும், இதில் யார் இருக்க வேண்டும், யார் இருக்கக் கூடாது என்று முடிவு செய்யும் உரிமை தனக்கு மட்டும்தான் என்று எவ்வளவு அறுத்துறுத்துச் சொன்னா ஜனாம்மா. அப்படித்தான் இருக்க வேண்டும்.

வாழ்க்கையில், வளைஞ்சு போகும் நேரம், வளைய வேண்டும், விறைத்திருக்கும் நேரம் விறைத்தே ஆக வேண்டும். வளைய வேண்டிய நேரம் விறைத்தும், விறைத்துப் போக வேண்டிய நேரம் வளைந்தால் – சுத்த wasteதான்.

பிறந்து வளர்ந்த வீட்டினிலே இந்தனை வருடங்களின் பின்பு, தமிழின் அம்மா கால் பதிக்கையிலே எப்படி இருக்கும்? இருக்கும் மிச்ச உணர்வுகளும் செத்திருக்காது? இது இன்னொரு விதத்தில் கொடுமைதான். எனக்கு விளங்குகின்றது, இன்னமும் தமிழின் அம்மா போல எத்தனை உயிர்கள் தவித்துக் கொண்டிருப்பதும், அவர்களின் முனகல் என் காதில் றீங்காரம் செய்வது கேட்கின்றது.

ஏக்கமான இந்த வாழ்க்கை, மிஞ்சிப் போனால் இந்த ஏக்கர் நிலத்தின் ஒரு ஓரத்தில் இருக்கக் கிடைத்துள்ளது. மாடியில் இருந்த வாழ்க்கை, இப்போ மாட்டுத் தொழுவத்தில் வாழக் கிடைக்கின்றது. நெஞ்சில் உதைத்த பிள்ளையால், தொப்பிள் கொடியினை அறுத்தெறிந்த தாய். இப்போ அயலில் இருந்த பார்க்கின்றது – நெருப்பில் விழுந்த புழுவாய்த் துடிக்கின்றது. அப்பவும் வெறுக்கவில்லை தாயை அவள், இப்பவும் வறுக்கவில்லை. பொறுமையுடன் வாழுகின்றாள், பூகம்பம் பொங்குகையில். அப்போ ஏதோ விதிவசம், வயசின் உணர்வுகள் நல்வழி காட்டத் தவறின. பொறுப்பேற்றுக் கொண்டது சந்தர்ப்ப சூழ்நிலைகள்.

பிரகாஷின் உயிர் ஏன் இன்னமும் ஏங்கிக் கொண்டு இருக்கின்றது, தன்னால் துரத்தப்பட்ட உடன் பிறப்பு எங்கே, என்ன செய்கின்றது என்று கூடத் தெரியாமல் ஏக்கத்தில் நெஞ்சுக் கூட்டினிலே அடங்கிப் போய் இருக்கின்றது. கணேஷன் என்னதான் செய்தாலும், எவ்வகையான நஞ்சினை பிரகாஷின் உடலினுள் செலுத்தினாலும், பிரகாஷின் உயிர் அவர் உடலினை விட்டுப் போகவே போகாது. படைத்தவன், மேலே இருந்து கணேஷனின் எல்லா செய்கைகளையும் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கின்றான்.

கணேஷனால், பிரகாஷின் ஒரு பங்கு உயிரினையும் ஒன்றும் செய்ய இயலாது. காலம் கெதியில் கூடும். அப்போ அந்தத் தெய்வம் இறங்கும் – தமிழின் அம்மா எப்போ பிரகாஷைத் தொடுகின்றாவோ அப்போ அந்த உயிர் சக்தி பெறும்.

முத்தம்மாவின் யோசனை ஜனாம்மாவிற்கும், சிபீயுக்கும் ஒழித்தோடி விளையாடாமல், ஒருவருக்காவது இந்த உண்மையினைச் சொல்ல வேண்டும் என்பதுதான். அதுவும் அவவின் யோசனை முக்கியமாக சிபீக்குத்தான் சொல்ல வேண்டும் என்பதுதான். ஏனென்றால், சிபீ இப்போ தமிழின் குடும்பத்துடன் நல்ல அந்நியோன்யமாக இருக்கின்றான். அத்துடன், சிபீ, தமிழினை காதல் பண்ணுகின்றான். அதனால், சிபீக்கு ஒரு understanding இருக்கும் என்பது எனது அபிப்பராயம்.

சிபீ எழுந்தோடி தமிழின் outdoorsக்கு வந்தாச்சு. அத்துடன், தமிழின் குடும்பத்துடன் றொம்ப நெருக்கமாகவும், அன்பாகவும் பழகத் தொடங்கி விட்டான்.

கணேஷன் அன் கோ ஒன்றுமே செய்ய இயலாதவாறு lock பண்ணி வைத்துள்ளா ஜனாம்மா. ஆனால், கணேஷனோ, மீனாவோ அல்லது சில் வண்டுகளோ சும்மா இருக்க மாட்டினம். எப்பவும் ஏதோ குடைச்சல் கொடுக்காமல் இருக்க மாட்டார்கள் தமிழுக்கு.

வெண்பாவின் பிரச்சனை வேறு. தமிழைத் தனக்குப் போட்டியாக உள்ள வி்ல்லி என்று கணக்குப் போட்டு விட்டாள். வர்ஷனிக்கு தனது அறை காலியாகி விட்டது, தமிழ் போய் வி்ட்டாள் என்பதனை விட அவவுக்கு ஒன்றும் தேவையி்ல்லை.

நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.

மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.

வணக்கம்!

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00