posted 8th January 2026
இன்றைய Serial Review & Analysisஆனது 06ஆம் திகதியிலிருந்து 08ஆம் திகதி வரையுள்ள Serial Review & Analysis களை உள்ளடக்கியுள்ளது.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 06 - 08.01.2026
வர்ஷினியின் வாழ்க்கையில் வைக்கக் கூடாத இடத்தில் வைத்த காலினால் ஏற்பட்ட அழுக்கு இப்பவும் காலில் ஒட்டுக் கொண்டிருப்பதினால், வர்ஷினி, ஜனாம்மாவிடம் திருடும் அளவிற்கு வந்து விட்டாள்.
தமிழ், அவளது அண்ணியின் இஸ்தானத்தில் இருப்பதனால், சிபீ, வர்ஷினியை தமிழுடன் சேர வேண்டாமென்று சொல்லியும் தமிழ் வர்ஷினிக்கு உதவுவதற்காகச் சென்றாள். ஆனால், சிபீக்கோ இவர்களின் நடவடிக்கையிலே சந்தேகம் ஏற்பட்டிருக்கையிலே தமிழையும், வர்ஷினியையும் பின் தொடர்ந்தான். வர்ஷினியிடம் இருந்து உண்மையினையும் அறிந்தான். எந்த விஷயத்திலும், தமிழ் இப்படியான sensitiveவான விஷயங்களை அவளாக ஒருநாளும் யாருக்கும் சொல்லவே மாட்டாள்.
இதற்கிடையில், வெண்பா தன்னாலான ஒரு பிரச்சினையினை உருவாக்கி இருக்கின்றாள். அதனைத் தனது தகப்பனிடம் சொல்லி சந்தோஷமும் பட்டாள். இப்படி தனது பிள்ளையினை உசுப்பேற்றி விட்டு, அவனது பிள்ளை வாழ்க்கையின் அழிவிற்குள் போகின்றாள் என்று ஒரு தகப்பனே அதற்கு ஆதரவாக இருப்பானாக இருந்தால், இவன் அந்தப் பிள்ளைக்கு உண்மையான தகப்பானாக இருக்கவும் முடியாது, அதுமட்டுமல்லாமல், இவன் அந்தப் பிள்ளையினைப் பெற்றிருக்காமல் இருந்திருந்தால் அவனுக்கும், அவளுக்கும் நலமாக இருந்திருக்கும் என்று நினைக்கவும் தோன்றுகின்றது.
வில்லங்கத்தினை ஆரம்பித்து வைத்தவன் சிபீ. 25 வருட கால வியாபார ஒப்பந்தத்தினையே அசட்டையாகக் கையாண்டதினால், சிவதானு ஐயா தன்னுடன் உள்ள வியாபார ஒப்பந்தத்தினை இரத்துச் செய்து விட்டதனை, அசால்ட்டாக ஜனாம்மாவிடமே சொன்கின்றான் என்றால், சிபீக்கு எந்தளவிற்கு கலப்பை பிடித்து வாழும் மக்களின் அருமை பெருமை ஒன்றும் தெரியாதவனாகவும், அவர்களின் கஷ்ட, நஷ்டங்களை உணராதவனுமாக இருக்கின்றான் என்று வியப்பில் ஆழ்வதினை விட என்னதான் செய்ய முடியும்.
சிவதானு ஐயா எடுத்த முடிவிலிருந்து ஒருநாளும் பின்வாங்கும் பழக்கம் அவரிடம் இல்லை. விலக்கி விட்டவன் சிபீ. அவன்தான் இதனை நிவர்த்தி செய்ய வேண்டும். பணத்திமிரின் உச்சத்தில் இருப்பவன் சிபீ. அதுவும் ஜனாம்மாவின் செல்வத்தினை அனுபவிக்கும் சிபீ. இத்தனைக்கும் இதில் சிபீ ஒரு சதமும் அவனாக உழைத்து இந்த செல்வத்தினை செந்தளிக்க விடவில்லை.
ஆனால், ஜனாம்மாவோ இந்த சொத்தை எல்லாம் ஒவ்வொரு சதமாக தன் உழைப்பாலே சேர்த்து இவ்வளவு உயரத்திற்கு வந்து நிற்கும் அவவோ, முற்றிய நெற்கதிர் போன்று தலை குனிந்து பண்பாக நிற்கையிலே, சுற்றவர உள்ள புல்லுகள் மேலோங்கி ஆடுவதனை ஏற்றுக் கொள்ள முடியாதே.
சிபீயும், சிவதானு ஐயாவின் ஊருக்குச் சென்று அவரை அவரின் தோட்டத்திலே சந்தித்தான். சிபீயின் முதலாளி என்ற திமிரும், தினாவெட்டும் சிவதானு ஐயா முன்னிலையில் எடுபடவில்லை. இது வியாபாரம் மட்டும் இல்லை என்று உணரக் கூடிய நிலையிலோ அல்லது விளங்கக்கூடிய தன்மையிலோ சிபீ இல்லை என்று தெளிவாகத் தெரிகின்றது.
ஜனாம்மா இனி சிவதானு ஐயாவிடம் தன்னால் கேட்க முடியாது என்ற நிலையில், தமிழ் அதன் பொறுப்பினை ஏற்றுக் கொண்டாள். தமிழுக்கோ ஜனாம்மாவையும், சிபீயையும் சமாளித்தே ஆக வேண்டும். சிபீயை முதலில் அனுப்பி வைத்தனர், சிவதானு ஐயாவிடம். அதனைத் தொடர்ந்து தமிழும், ஜனாம்மாவும் சென்றனர். காரணம் சிபீயால் சிவதானு ஐயாவைச் சமாளித்து வெற்றி பெற முடியாது என்பதனால்தான்.
தமிழைக் கண்டதும் சிவதானு ஐயாவின் மனம் குளிர்ந்தாலும், அவரின் சிபீ மீதான வெறுப்பும், நம்பிக்கையின்மையும் முற்றாக விலகியதாக இல்லை.
இவ்வாறான சம்பாஷனையிலே, தமிழ் அந்தக் கணமே முடிவொன்றினை எடுத்தாள். சிவதானு ஐயாவின் மூன்று நாட்களில் நடைபெறவுள்ள அவரது பேத்தி தாமரையின் நிட்சயதார்த்தம். இந்த 3 நாட்களை தமிழ் தனது பக்கமாக பாவித்தாள். அதாவது, சிபீயில் இந்த 3 நாட்களில் சிவதானு ஐயாவிற்கு நம்பிக்கை வருமானால், சிவதானு ஐயா தங்களுக்குடனான வியாபார ஒப்பந்தமானது அரங்கேற வேண்டும் என்பதுதான்.
இறுதியில் ஒத்துக் கொண்டிருக்கும் சிவதானு ஐயா அவர்களின் பேத்தியின் முகத்திலோ கல்யாணக் களை தெரியவில்லை. அவளிடம் மனதாலே வாட்டம்தான் அவள் முகத்தில் தெரிந்தது. காரணம், தாமரை வேறு யாருடனோ காதலில் சிக்கி இருக்கின்றாளோ என்பதுதான். இதனை தமிழ் அவதானித்தாள். இந்தப் பல்லவியினை பிறகு வைப்போம். இப்போது சிபீயின் பாட்டைக் கவனிப்போம் என்று கொஞ்சம் விட்டுப் பிடித்தாள் தமிழ்.
கமத்திலே சிபீ வேலை செய்ய வேண்டும் என்பதுதான் இந்த 3 நாட்களுக்கான tasks. தமிழுக்கோ சிபீயின் மேலே நம்பிக்கை இருக்கின்றது என்று உண்மையாக நினைத்தாளோ என்னவோ அவள் அப்படியே கூறினாள். சிபீக்கான முதல் taskகே சிபீக்கு மிகவும் அருவருப்பாக இருந்தது. மனதால் கஷ்டப்பட்டான்.
தாமரைக்கு பேசியுள்ள உறவுக் காரனான பாண்டியனைப் பற்றிய அறிமுகத்தில், சிவதானு ஐயா மிகவும் எழுப்பமாகக் கூறுகையில், பாண்டியனின் முகபாவனையினை சிபீ அவதானித்தது போலத் தோன்றினாலும், அதனை தமிழ் அவதானித்தாள். எங்கேயோ பிழை இருக்கின்றது போல அவளுக்குத் தோன்றியது.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channelலினில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!