Varisu - வாரிசு - 03 -06.02.2026

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இன்றைய Serial Review & Analysisஆனது 03ஆம் திகதி தொடக்கம் 06ஆம் திகதிகள் வரையிலான Serial Review & Analysisகளை உள்ளடக்கியுள்ளது.

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!

சிபீயின் வேண்டுதலுக்காகவும், ஜனாம்மாவின் நலனுக்காகவும், தமிழ் சிபீயின் ஒப்பந்தத்திற்கு ஒத்துக் கொண்டாள். ஆனால், இதிலும் தான் ஜனாம்மாவை ஏமாற்றுகின்றோம் என்று தமிழின் மனமோ உறுத்திக் கொண்டிருக்கின்றதை உணரக்கூடியதாக இருக்கின்றது. இதனை சிபீ நினைக்கலாம் தான் எல்லாரையும், குறிப்பாக, ஜனாம்மாவை நம்ப வைக்கின்றான் என்று. ஆனால், சிபீயினதும், தமிழினதும் நடிப்பினை கேடீயும், சேதுவும் நம்பாத நிலையினில் ஜனாம்மா என்னென்று நம்புவா என்பதில்தான் சந்தேகமே.

ஆனால், கணேஷனின் குடும்பமும், சம்யூத்தாவும், பிறேமும் மிகவும் வெறுப்புடனும், எரிச்சலுடனும் சிபீயினதும், தமிழினதும் நெருக்கத்தினை பார்த்து புகைந்து கொண்டிருக்கின்றார்கள். இத்தனைக்கும், சம்யூத்தாவும், பிறேமும் கதைத்துக் கொண்டிருந்ததை ஒருவர் வீடியோ பண்ணியதை இவர்கள் காணாமல் கோபத்தில் வாய்க்கு வருவதெல்லாம் கதைத்த பதிவானது என்ன விளைவுகளை உண்டாக்கும் என்பதில்தான் இனி பிரச்சினையே இருக்கின்றது. இந்த வீடீயோவினை எடுத்தது வெண்பாவாக இருக்கலாம் என்றும் நினைக்கத் தோன்றுகின்றது.

Varisu - வாரிசு - 03 -06.02.2026

பிரகாஷோ மிகவும் சந்தோஷமாக அவருடைய மருமகள்களால் கவனிக்கப்படுகின்றார். நல்ல உணவுகளை உண்டு, எல்லோருடைய கலகலப்புக்களையும் பார்த்து இரசித்துக் கொண்டிருப்பதால், பிரகாஷ் இப்போது தான் இழந்த 20 வருட காலங்களில் விடுபட்டனவற்றினை தமிழும், தேனுவும் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்ற பூரிப்பில் இருக்கின்றார்.

பிராகாஷின் அறையினுள் ஒருவரின் பின் ஒருவராக வந்து கொண்டிருக்கின்றார்கள். அங்கே அவரவர் தங்களது உள்ளத்தில் உள்ளனவற்றினை எல்லாம் சுதந்திரமாகச் சொல்கின்றார்கள். ஏனென்றால், பிரகாஷ்தான் அறிவு நினைவு இல்லாமல் இருக்கின்றார் என்ற நினைப்பினிலே. இதனால், எல்லாவற்றினையும் பிரகாஷும் அவதானித்துக் கொண்டிருக்கின்றார் என்று கடுகளவும் இவர்கள் கற்பனை கூடச் செய்யாத நிலையினில் ஒப்புவிக்கின்றனர்.

இப்படி நடக்கையிலேதான், கணேஷனின் குடும்பமும் ஒருவர் பின் ஒருவராக வருவதற்குச் சந்தர்ப்பம் உண்டு. இதனால், கணேஷனினதும், அமுதாவினதும், வெண்பாவினதும் குள்ளக் குணங்களும், அவர்களின் கள்ளத் திட்டங்கள் எல்லாமே நேரடி ஒளிப்பதிவாகிக் கொண்டிருக்கின்றது.

விடுமுறையினை சந்தோஷமாகக் கொண்டாடுவதற்கும், இதனால், ஜனாம்மாவிற்கு மனத்தினில் மாற்றம் ஒன்று உருவாகலாம் என்றும், இதனால் அவவின் மன அழுத்தமானது குறைய வாய்ப்புகள் உண்டு என்று டாக்டர் கூறியதினை வைத்துத்தான் முக்கிய காரணமாக இந்த விடுமுறை இருந்தது என்று கூறலாம். ஆனால், அது அப்படியல்ல, ஜனாம்மாவைப் பொறுத்தவரை, அவவின் குறிக்கோளானது, என்ன விதத்திலும் சிபீயையும், தமிழையும் ஒன்றாக வாழ வைப்பதுவே!

இதற்காக, இங்கு வந்திருக்கையிலே சிபீயே தானாக camp fireறினை உருவாக்குவோமா என்ற அபிப்பிராயத்தினை அனைவரிடமும் கேட்டான். அதற்கு எல்லோரும் வரவேற்புக் கொடுத்தனர். தமிழினதும், சிபீயினதும் நடிப்பானது றொம்ப களைகட்டியது. ஆனால், அதுவே அப்பட்டமாக போலியானது என்று ஜனாம்மாவிடமும், கேடீ, சேதுவிடமும் அம்பலமாகி விட்டது. ஆனால், ஜனாம்மாவோ, இவர்கள் நடிக்கும் அளவிற்கு நடிக்கட்டும். அவர்களின் அந்த நடிப்பினையே உண்மையாக்கி விடுவதாக திடசங்கர்ப்பம் பூண்டா.

இதற்கிடையில், சம்யூத்தாவும், பிறேமும் தங்களது பலவிதமான திட்டங்களை தமிழுக்கும், சிபீக்கும் இடையில் புகுத்தினார்கள். ஆனால், இவற்றினை தமிழும், சிபீயும் உணர்ந்ததாக இல்லை. இவற்றினைத் தாண்டி சிபீயும், தமிழும் நெருக்கமாக இருந்தார்கள். ஆனால், சம்யூத்தாவிடம் சிபீயும், தமிழும் தாங்கள் இருவரும் நடிக்கின்றோம் என்றும், ஜனாம்மாவின் நலனுக்காவே எல்லாம் என்று கூறினாலும், தமிழோ, எப்படி சம்யூத்தா, தமிழ் கல்யாணம் பண்ணிய புதிதில், தானும், சிபீயும் எப்படி அறையினுள் நெருக்கமாக இருந்தார்கள் என்று மிகவும் அசிங்கமாகச் சொன்னாளோ, அந்த அத்தியாயத்தினை இப்போது தொடங்கினாள் தமிழ்.

இப்படி இருக்கையில் அங்குள்ள ஒரு சிறிய கடையினில் ஒரு சில ஆபரணங்களைப் பார்த்து இரசிப்பதும், வாங்குவதுமாக இருக்கையிலேதான், அந்தக் கடையின் வெளியே மக்களின் அலறல் சத்தம் கேட்டது. அதனை விசாரித்த ஜனாம்மா, அரச ஊழியர்களின் அதிகாரத் தோறணையில், காலாகாலமாக இந்த வாழ்வாதாரத்தினை நம்பி வாழும் மலைவாழ் மக்களின் வியாபாரக் கடைகள், சாலை விஸ்தரிப்பிற்காக அகற்றப்பட வேண்டும் என்ற கட்டளையானது கோட்டினால் பிறப்பிக்கப் பட்டிருந்ததனை அறிந்து கொண்டா.

இதனைத் தடுக்கும் முகமாக, தமிழிடம் தங்களது சட்டத்தரணியைத் தொடர்பு கொண்டு கோட்டினில் stay வாங்கும்படியாக ஜனாம்மா பணித்தா. அதற்கான கோட்டிற்குச் செலவாகும் எல்லாவற்றினையும் தாங்கள் பொறுப்பெடுக்க வேண்டும் என்று ஜனாம்மா தமிழிடம் கேட்டுக் கொண்டா. ஜனாம்மாவைக் கையெடுத்து கும்பிட்ட மலைவாழ் மக்களை அவர்களது தெய்வத்திற்குரிய விழாவினில் கலந்து கொள்ள வேண்டும் என்று அம்மக்கள் கேட்டுக் கொண்டனர்.

விழாவும் ஆரம்பமானது. அங்கு சாமியாடி பூஜையினை விட்டு இறங்கி வந்தார். நேராகச் சிபீயிடமே வந்தார். சிபீயிடம் அந்த சாமியாடி கட்டளை ஒன்றினைப் போட்டது. தனக்குரிய கொண்டைப்பூவையும், மலைத்தேனையும் கொண்டு வரும்படி. ஒன்றுமே விளங்காமல் விளித்துக் கொண்டிருந்த சிபீக்குக் கை கொடுத்தாள் தமிழ். இருவருமாக மலைத்தேனையும், கொண்டைப் பூவினையும் எடுத்துவர கேவிலை விட்டு வெளிக்கிட்டனர்.

வழமைபோல, அங்குதான் வில்லங்கங்கள் இருக்கின்றனரே, சம்யூத்தா, பிறேம், வெண்பா, அமுதா, கணேஷன் அகியோர். இவர்களின் ஆட்டத்தினையும் இனிப் பார்ப்போம். தெய்வத்தின் தீர்ப்பினையும் காண்போம்.

நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.

மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)