posted 7th December 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- எந்த மாட்டை எப்படி கறக்க வேண்டும் என்று நன்கு தெரிந்தவளாய் தமிழ்.
- அவரவர் வழியில் போய்தான் அவரவரைக் சரிசெய்ய வேண்டும்.
- சம்யூத்தாவுடன் ஓட வெளிக்கிட்ட சிபீக்கு, விமான நிலையத்தில் ஏற்கனவே ஆப்பினை வைத்து விட்டு, சரி நீங்கள் போகலாம் என்று பூரணமான சுதந்திரம் கொடுத்த மாதிரி கெடு வைத்த தமிழ்.
- சிபீயினை மீட்டு வந்தாலும் சாமிக்கு வைத்த கோவில் தேங்காய் அழுகிய நிலையினில். கடவுளுக்கே பிடிக்கவில்லை என்று சிபீ்க்குச் சார்பாக நின்ற கணேஷன்.
- சொத்தினைக் காட்டி சுழளற்றி அடித்த ஜனாம்மா.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 02.12.2025
ஷாமை உள்ளிளுத்தாள் தமிழ், இவள்தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்று நீட்டிச் சொன்னாள் தமிழ். ஒன்றுமே கதைக்க முடியாமல் திக்காடின ஷியாம். இது உனக்குத் தேவைதானா ஷியாம் என்று கேட்டும் வெட்கமில்லாமல் சிபீயை காலைச் சுற்றிய பாம்பாக இருந்தாள் சம்யூத்தா. ஏனென்றால், சொத்துக்காகத்தான். ஆனால், இப்பதான் தெரிகின்றுதானே சிபீ சொத்து வேண்டாம் என்று சொல்லி விட்டான். இனி ஏன் இவன் என்று எப்படி ஓடலாம் என்ற திட்டத்துடன் சிந்தனையில் ஆழ்ந்த ஷியாம்.
விமான நிலையத்தில் எல்லார் முன்னிலையிலும் ஷியாமை மரியாதையீனப் படுத்திய தமிழ். ஒருவிதமான guilty உணர்வுகளும் இல்லாமல் இருக்கும் சம்யூத்தா. இதற்கெல்லாம் காரணம் சிபீதான். ஆனால், சம்யூத்தாவுக்கு ஒரு sense இருக்க வேண்டாமா? ஆனால், ஷியாம் சிபீயை விட்டு விலகுவாளா? இல்லை என்றுதான் தோன்றுகின்றது. ஏனென்றால், சொத்து இல்லாவிட்டாலும், சிபீயுடன் இருந்து சுருட்டலாம் என்று ஒரு சந்தர்ப்பம் கை கூடி இருக்கின்றதுதானே! ஆகையினால், சிபீயுடன் ஒட்டிக் கொண்டிதான் திரிவாள்.
SPக்குப் போன் பண்ணி ஒரு உதவியினைக் கேட்டாள் தமிழ். அவரின் உதவியுடன் விமான நிலையத்தினை விட்டுப் போக விடாமல் தடுத்தாள். சிபீயை சொன்ன மாதிரி கோவிலுக்குக் கூட்டிச் சென்றாள்.
தாய் மீனா கேட்ட கேள்விகளுக்கு சிபீயினால் சரியான பதில்களினைச் சொல்ல முடியவில்லை. தனக்கு விருப்பமில்லை என்பதுதான். இது உண்மையாகத் தமிழில் விருப்பம் இல்லையா? அல்லது, தமிழைப் பழிவாங்குவதில் உள்ள நோக்கமா? அத்துடன் சிபீயுடன் ஒத்தோதும் கணேஷன். அவனது குள்ளத்தனமான உள் நோக்கத்தினைக் கூட கிரகித்துக் கொள்ள முடியாமல் இருக்கும் சிபீயின் தன்மைதான் கவலைக்குரியதாக உள்ளது.
கணேஷனோ மீண்டும் மீண்டும் இந்தத் தாலி கோர்க்கும் வைபவத்தினை நிற்பாட்டுவதற்கு முயற்சிகள் செய்தாலும் அதனையும் கணக்கில் ஏற்றிக் கொள்ளும் ஜனாம்மா.
கோவிலுக்குக் கூட்டி வந்த சிபீயை தாலி பிரிச்சுக் கோக்கும் நிகழ்வுக்கு ஆயத்தப்படுத்தும்படி கூறினாலும், சிபீ மனதில்லாதிருந்தான். சிபீக்கோ காரணம் தெரியாத காரணங்களுடன் விளி்த்துக் கொண்டிருந்தான்.
நேரம் போகின்றது என்று தாலி பிரித்துக் கோர்க்கும் நிகழ்விற்கு ஆயத்தமாகும்படி ஐயர் கூறினார். ஆனால், நடந்ததோ, உடைத்த தேங்காயானது பழுதடைந்திருந்தது முக்கியமானோருக்கு சாக்காகப் போய் விட்டது. அட, இவர்களெல்லாம் பிறப்பிலே ஒரே சமயமாக இருந்தாலும் இன்னமும் கோவில் வளங்கங்களை படிக்காமலும், அவற்றினை வழக்கப்படுத்திக் கொள்ளாமலும் கறள் படிந்த மனத்துடன் இருக்கின்றார்களே. ஆனால், ஐயர் கூறினார், இதற்குரிய பரிகாரத்தினை. இதுதான், தெய்வத்தின் திட்டமுமாகும். ஐயரும் கூறினார், பரிகாரமும் அரங்கேறியது.
அதாவது, மாப்பிள்ளை துலாபாரத்தில் உற்கார வைத்து அதற்கு சமமாக பொருள்கள் கடவுளுக்குக் கொடுத்தால், சாமிக்கு இந்த கல்யாணத்திலே விருப்பமாக இருந்தால் இந்த துலாபாரம் சமமாகும். ஏனென்றால், சிபீக்கு இந்தக் கல்யாணத்திலே விருப்பமில்லாததினால்தான் இந்தப் பரிகாரம்.
அனைத்து இரத்த சம்பந்தங்களும் எல்லாரும் கையரிசி வைத்தார்கள். பக்தியுடன் வைத்தார்கள், கணேஷனும், வெண்பாவும் விருப்பமில்லாமல் வைத்தார்கள். ஆனால், அமுதா அதனைச் செய்யவேயில்லை. பொருள்களின் எடைகளோ சிபீயை விட எவ்வளவோ கூடவாக வைத்திருந்தும் துலாபாரம் அசைவதாக இல்லை.
தெய்வத்தின் விளையாட்டு புத்தி சுயாதீனமில்லாத பிள்ளை இசையில் விளையாடியது. ஐயரோ எல்லாரும் அரிசியினை வைத்தீர்களா என்றதற்கு இசை தானாவே சென்று ஒரு பிடி அரிசியினைக் கொணர்ந்து தேனுவிடம் கொடுத்தாள், அக்காவிடம் கொடுக்கும்படி. அதனால், ஜனாம்மா சொன்னா தமிழை அரிசியினைப் போடும்படி. தமிழும் இரத்த சம்பந்தம்தான் என்று முத்தம்மாவிற்கு மட்டும்தான் தெரியும். அந்தப் பிடி இல்லாமல் என்னென்று துலாபாரம் சமமாகும்?
தமிழ் கையரிசியினைப் போட்டதும் துலாபாரம் சமமானது. சாமியும் விடை கொடுத்தது, தாலி பிரித்துக் கோர்ப்பதற்கு. இதுதான் தாலியின் மகிமை.
உணர்ந்தவர்கள் பலர். உணரமாட்டோம் என்று இருப்பவரோ சிலர். இறுதியில் உணருவார்கள், அப்போ காலம் எங்கேயோ போய் விடும்.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channelலினில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!