Varisu - வாரிசு - 26.08.2025

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!

  • சேது, தகப்பன் கணேஷனும், அத்தான் சிபீயும் கதைத்துக் கொண்டிருந்ததை கேட்டான். இவங்கதானா, ஜனாம்மா, அதாவது, தமிழின் இந்த நிலைக்குக் காரணம் என்று கண்டு பிடித்தான். தமிழிடம் அதன் விபரங்களைச் சொல்லியும் வி்ட்டான்.
  • சிபீதான் tender கிடைப்பதற்கு தமிழை divert பண்ணி முட்டுக்கட்டை போட்டதனை கண்டுபிடித்து, சிபீக்கு மட்டும் தமிழ் சொல்லுவாள் என்று சொன்னது சரியாகி விட்டது. சிபீயைத் திட்டி விட்டாள்.
  • குறிஞ்சிநாதனின் குற்றவியல் அறிக்கையினை அதாவது அவனது சரித்திரத்தையே வெளிச்சத்திற்கு அனைத்து பத்திரையாளர் மத்தியில் கொண்டு வந்தாள், தமிழ்.
  • பேத்தி மாதிரி என்று தமிழைப் மினிஸ்ரடம் அறிமுகப்படுத்திய ஜனாம்மவிடம், மந்திரியையே வீடு தேடி வர வைத்து contractறினைக் ஒப்பந்தம் போட வைத்து, கிடைக்க வைத்த தமிழினைப் பாராட்டி ஆசீர் கூறினார்.
  • வீட்டிலுள்ள அனைவரும் contractகிடைத்ததனால் மண்ணைக் கவ்வினர், சேது மட்டும் மிகவும் சந்தோஷம் அடைந்தான். தமிழுக்கு முன்னால் தலை கவிழ்ந்தனர்.
  • ஜனாம்மாவும் தமிழைப் பாராட்டி கட்டி அணைத்தா. ஆனால், தமிழுக்கு அந்த கட்டி அணைப்பும், பாராட்டும் ஜனாம்மாவிடம் இருந்து கிடைத்தில் அவ்வளவு சந்தோஷம் இருக்கவில்லை என்பதனை தமிழின் முகமே காட்டிக் கொடுத்தது.
  • தமிழை எல்லாவிதத்திலும் தோற்கடித்த சிபீக்கு என்ன செய்வதென்றே புரியாமல் அங்கும், இங்கும் நடந்து கொண்டிருந்தான். கேடீ ஒரு ideaவைச் சொன்னான். ஒன்றுமே சொல்லாமல் தமிழை நீ லவ் பண்ணிரு என்பதுதான். இதற்கு சிபீ கேடீயைக் கட்டிப்பிடித்தான், சந்தோஷத்திலே. இதற்குப் பெயர்தான் கூடியிருந்து குழிபறிக்கிறதென்பது.

எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.

நன்றி.

மினிஸ்ரர் ஜனாம்மாவின் வீட்டிற்கு வந்து தமிழ் செய்த வீரச் செயல்களைச் சொல்லி, தமிழைத் தான் நீங்கள் உங்கள் சிறு வயதில் இருக்கும் போதுள்ளது போன்று பார்க்கக்கூடியதாக இருக்கின்றது என்ற புகழாரம் சூடினார். இவ்வாறு சொன்னது முக்கியமானோரில் பலருக்கு ஒரு கேள்விக் குறியாக இருக்கும். ஏனென்றால் இது ஒரு காரமான அறிக்கையாக உள்ளது.

பிரகாஷின் கனவினை நனவாக்கி விட்டாள் தமிழ். தன்னை ஜெயி்க்க வைத்து விட்டாள் தமிழ் என்று மிகவும் சந்தோஷத்தில் மிதந்தா ஜனாம்மா. கட்டி அரவணைத்தா தமிழினை. அது மட்டுமல்லாமல், இதுதான் தமிழ் என்று பெருமைப்படச் சொன்னா ஜனாம்மா. தமிழைக் கட்டி அணைத்த ஜனாம்மா சந்தோஷப் பட்டாலும், தமிழின் அகத்தினிலே சந்தோஷம் வந்ததாகத் அவளின் முகத்தினிலே வெளிப்படவில்லை. தான் tenderக்குப் பிந்திப் போனதினால் contract கிடைக்காமல் நழுவி விட்டதே என்றதும், அத்துடன், தமிழை ஜனாம்மா அவ்வளவுக்கு நம்பியிருந்ததனாலும், அவவுக்குக் கிடைத்த ஏமாற்றமும் ஜனாம்மாவால் தாங்க முடியவில்லை. அதன் வெளி்ப்பாடுதான், தமிழை அவவின் குடும்பத்தவர்கள் மத்தியில் உதாசீனம் செய்து வி்ட்டு போனதற்கான காரணமாக இங்கு தெரிகின்றது.

ஆனால், தமிழின் முயற்சியினால், 24 மணித்தியாலத்துள் அந்த contract கிடைக்க வைக்கத் தமிழால் முடியும் என்றும், அதற்கு தமிழின் உள் உணர்வுகளை தூண்டி விட்டு அவளை ஜெயிக்க வைக்க வேண்டும் என்பதற்காக ஜனாம்மா அவ்வாறு தமிழை உதாசீனம் செய்தது போலவும் behave பண்ணினா என்பதும், இதுதான் தமிழ் என்றும், மீண்டும் தன்னை நிரூபித்துள்ளாள் என்றும், தான் ஒருவரைத் தெரிவு செய்தால் அவரின் திறமையினை மட்டுமில்லை, அவர்களின் நேர்மையான குணமும், உண்மையான உழைப்பும் அவர்களிடம் உள்ளது என்பதனை வீட்டில்லுள்ளவர் மத்தியில் நிரூபிக்க வைப்பதற்காகவும் இருக்கலாம். இது ஜனாம்மாவின் அனுபவத்தால் கிடைத்த அறிவு.
சிபீதான் தனது தோல்வி்க்குக் காரணம் என்பதனைக் கண்டு பிடித்தாள் தமிழ். அதற்கு முக்கிய காரணம் சேதுதான். காரணத்தினைக் கண்டு பிடித்த தமிழ் மற்றவர்களிடம் சொல்லாமல் சிபீயிடம் மட்டும் சொல்லுவாள் என்பது சரியாகி விட்டது. தமிழ் ஆசை தீர சிபீயைத் திட்டி விட்டாள். மடையன் என்று கூடச் சொல்லி விட்டாள். கோபத்தில் கத்திய சிபீ தான் மடையன் இல்லை என்பதனைக் கூறாமல் காட்டினான். ஆனால், தமிழ் சொன்ன வார்த்தைகள், ஜனாம்மாவின் பெயர், உங்கள் அப்பாவின் கடின உழைப்பு மட்டுமல்லாமல், அவரின் நீண்டகால கனவு, அத்துடன் சிறு பிள்ளைகள், வயோதிபர், கர்ப்பிணிகள் உணவுடன் சம்பந்தமானது என்றெல்லாம் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா என்று கேட்ட கேள்விகளுக்கு சிபீயிடம் விடைகள் இல்லை.

அத்துடன், தமிழ் சொன்னது போன்று சிபீக்கு இவற்றைப் பற்றி ஒன்றும் தெரியாது என்பதனால் தனது அறியாமை, அது தனது பிழைகள்தான் என்பதனை சிபீ ஏற்றுக் கொண்டதனால், தமிழை ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். ஆனால், அவன் உள் மனம் குமுறிக் கொண்டிருந்தது.

கேடீயுடன், தமிழால் தூக்கி எறியப்பட்ட ஷியாமும் உள்ளே வந்தாள். தமிழ்தான் சிபீயைக் குளப்பி விட்டாள் என்று சிபீக்கு அண்டி வைத்தாள். இதையிட்டு மேலும் கோபம் கொண்டான் சிபீ. இவளை ஒன்றுமே செய்ய முடியாமல் உள்ளதே! இவளைக் வீட்டை விட்டு கலைக்க முடியாமல் இருக்கின்றதே என்று தமிழைப் பற்றிச் சொன்னான் சிபீ. ஒன்றும் செய்ய முடியவில்லை என்றால் இனி நீ தமிழை love பண்ணிரு என்றான், கேடீ. சந்தோஷத்தில் கேடீயைக் கட்டிப் பிடித்தான், சிபீ. இது நல்ல சகுனமாக இல்லையே! எல்லாம் செய்து பார்த்தனான், அதாவது, நேராக மோதிப் பார்த்தனான் ஒன்றும் செய்ய முடியாததால், இனி கூட இருந்து குழி பறிக்க வேண்டியதுதான். அதுதான், love பண்ணுகிற மாதிரி நடிக்க வேண்டியதுதான். இதுதான் சீபி இப்போது செய்ய உள்ளான்.

தமிழின் வார்த்தைகள் சிபீக்கு உள்ளே மயக்கத்திலிருந்த உணர்வுகள் விழித்தெழலாம். இவ்வாறு வாழ்க்கையில் உள்ளுணர்வுகள் விழித்தெழும் காலம் வந்தே தீரும். அந்த நேரம், சிலருக்கு திருந்த வாய்ப்புகளை வாழ்க்கை இடம் கொடுக்கும், சிலருக்கு காலம் காணாமல் இருக்கும். நான் என்னத்தினைக் கூறுகின்றேன் என்று அனேகமானோருக்கு விளங்காமல் இருக்கலாம், ஆனால், விளங்கும் நாள் வரும்.

இனி என்னதான் நடக்கலாம்?

  • கணேஷனுக்கும், குறிஞ்சிநாதனுக்கும் உள்ள தொடர்பினை வெளியில் கொண்டு வருவாள். இதனையும் வெளியில் சொல்ல மாட்டாள், தமிழ்.
  • என்ன வேண்டுமென்றாலும் கேளு என்று தமிழுக்கு ஜனாம்மா சொன்னது ஞாபகம் இருக்கின்றதா உங்களுக்கு? என்னத்தினைக் கேட்பாள் தமிழ்? என்னத்தினை கொடுப்பா ஜனாம்மா? கொமேன்றில் சொல்லுங்கள்.
  • வீட்டிலிருக்கும் சேது, வீட்டின் தமிழுக்கு எதிரான ஒவ்வொருவரினுடைய நிலைமைகளை தமிழுக்கு update பண்ணிக் கொண்டிருப்பான்.

நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை Description னில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.

வணக்கம்!