posted 29th January 2026
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- சிபீ, தப்புப் பண்ணி விட்டேன் என்று இரண்டு தரம் இன்றுவரை அழுதிருக்கின்றான். தமிழின் மனதினைக் குத்திக் குதறி இருக்கின்றான். அழ வைத்திருக்கின்றான். ஆனால், அவனில் மாற்றம் ஏற்பட்டதா?
- ஒருவர் இருக்கையில் அருமை தெரியாது, ஆனால், அவர் இல்லை என்றால்தான் அந்த வெற்றிடம் தெரியும். இதைத்தான் தமிழ் ஒரு நாள் இல்லை என்றதும் இவர்களின் ஆட்டம் அடங்கியது புலனாகின்றது.
- இப்பவும் சிபீ, தமிழுடன் வாழவான் என்ற எண்ணமில்லை. அதற்காக தமிழ் கெட்டுப் போ என்று ஒரு நாளும் நினைக்கவும் இல்லை.
- தமிழின் வரவில், கலங்கி நின்றவர்களில், வர்ஷினி, சேது, கேடீ, தமிழின் அத்தை ஆகியோரின் ஆதங்கம் விளங்கியது.
- ஜனாம்மாவின் வீட்டினில் 73 வீத விருப்பு வாக்குகளை தமிழ் வென்றுள்ளாள். இதில், சம்யூத்தா அடங்கவில்லை.
- தமிழைக் கண்டதும் சிபீ கூப்பிட்டும் வர மறுத்தாள். ஆனால், ஜனாம்மா தமிழை அடித்தா, அதிர்ந்து போனாள் தமிழ், உடனே கட்டியணைத்தா. இதனை உரிமை என்பதா?
Varisu - வாரிசு - 24.01.2026
- றோட்டில் ஒரு இறந்து கிடந்த இளம் பெண்ணின் உடலினைக் கண்டதும் துடி துடித்துப் போன சிபீ. ஆனாலும், தமிழ் அவ்வளவிற்கு கோளை இல்லை என்று துணிச்சலாகத் தள்ளிச் சென்றான்.
- கோவிலில் அடைக்கலமான தமிழ், தெய்வத்தின் ஸ்தானம் அடைக்கலம் தரும் என்றிருகையில், நடை சார்த்த வேண்டியதால், தமிழ் வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இது தெய்வத்தின் ஆட்டம். பின்பு தெரியும் அதன் நோக்கம்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
சிபீ இரண்டு முறை கலங்கினான் தமிழை நினைத்து. ஒரு முறை கொட்டும் மழையினில் இப்படித்தான் தன்னையே கேட்டு கேட்டு அவனது கன்னத்தில் அறைந்தவனாய் தான் தமிழுக்குத் துரோகம் செய்து விட்டேனே என்று கதறினான். அப்போது தமிழ் ஜனாம்மா வீட்டினில் தான் இருந்தாள்.
இரண்டாவது முறை இப்போது. றோட்டினிலே தமிழ் எங்கே தொலைந்து போனாய்?, தவறு செய்து விட்டேனே என்று முழங்காலில் மண்டியிட்டு அழுதான் சிபீ. ஒருதரமாவது தமிழை தன் கண்ணால் பார்த்தால் காணும் என்ற எல்லைக்குப் போய் விட்டான் சிபீ.
தமிழி்ன் சிறிய விலகலினை சிபீயால் தாங்க முடியவில்லை. தமிழை ஒருக்கால் கண்டுவிட்டால் போதும், அல்லாவிடில் தமிழின் தொலைவிற்கு தான்தான் காரணம் என்று சீவிய காலமும் வாடி வதங்கி விடுவேன் என்று இன்று உணர்ந்தான். இதற்காகத்தான் சிபீ தமிழைத் தேடினானா? அல்லது ஜனாம்மா சொல்லுவது போன்று உண்மையான அன்பினில் தேடினானா?
காலையிலே சிபீ சம்யூத்தாவுடன் ஆட வெளி்க்கிட்டான். இப்போது றோட்டினிலே நிற்கின்றான் சிபீ. இப்போது குத்தாட்டம் சிபீயினால் போடத்தான் முடியுமா? சிபீயினால் முடியாது. ஏனென்றால், சம்யூத்தாவுடன் உள்ளது, வெறும் உடல் சம்பந்தமானது. ஆனால், தமிழுடன் உள்ளதோ மனசு சம்பந்தமானது. களியாட்டமா? அல்லது கல்யாணத்தில் வந்த பந்தமா?
தமிழ் இதுவரைக்கும் சிபீயை மனவருத்தப் படுத்தக் கூடாதென்று கணவனாக மனதினுள் பூஜை செய்கின்றாள். அதனால் எந்த சமயத்திலும் தமிழ் சிபீயைக் கலங்கப் படுத்தவில்லை. ஆனால், ஒரு நேரத்திற்காவது, தமிழ், சிபீயின் முன்னால், முகத்தினைத் தொங்கப் போட்டாள் காணும் அல்லது ஒன்றும் கதைக்காமல் விட்டாள் என்றால் போதும், அப்போது தெரியும் சிபீயின் ஆட்டம் காணும் அவன் நிலைமையினை.
தமிழை வீட்டிற்குப் போய் அம்மா, சகோதரங்களைப் பார்த்து விட்டு வா என்று சிபீ சொல்லுகையில், தமிழ் உண்மையான மனைவியாக அமைதியாகச் சென்றாள் அவளின் வீட்டிற்கு. அடிக்கப் போனா தமிழின் அம்மா, அம்மு. ஆனால், அவவால் தமிழை அடிக்க முடியாது. ஆனால், இசைக்கு நீயும் அம்மாதானே என்று சொன்ன அம்மு, நீ ஏன் வீட்டைவிட்டு போனாய் என்ற கேள்விக்கு அவவே பதிலையும் சொன்னா.
அங்கு றோட்டினிலே தமிழை ஜனாம்மா அடித்த போதும், அம்மு உறுக்கிய போதும், வர்ஷி கேட்ட போதும், அத்தை மீனா அதட்டிய போதும், தமிழ், சிபீயைப் பற்றி ஒன்றும் சொல்லவேயில்லை. ஆனால், தமிழ் பொய் சொல்கின்றாள் என்று வர்ஷி கண்டு பிடித்து விட்டாள். அப்போதும் தமிழ் ஒன்றுமே சொல்லவேயில்லை.
இதனால் ஒருவருக்கும் தமிழ் ஏன் போனாள் என்ற விஷயம் தெரியாது. ஆனால், கேடீக்கும், சேதுவுக்கும் தெரியும் என்ற விஷயம் தமிழுக்கும் தெரியாது.
ஆனால், தமிழ் வீட்டினுள்ளே வந்ததும் ஒவ்வொருவரும் கதைத்த விதங்களை வைத்துப் பார்த்தால், தமிழ் 73 வீதமான விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளாள் என்று தெரிய வருகின்றது. அதாவது, வீட்டினிலே, தமிழின் மேலே 73 வீதமானோருக்கு அக்கறை உண்டு என்பதுதான். அதாவது, 73 வீதமானோரின் அன்பினை தமிழ் வென்றுள்ளாள், சம்பாதித்துள்ளாள் என்பது ஒரு நாள் தமிழ் இல்லாமல் போனதிலிருந்து தெரிகின்றது. அத்துடன், மீனா, தமிழை ஏசினாலும், எல்லார் முன்னாலும் தமிழ் இந்த வீட்டின் மருமகள் என்று கூறியது தமிழின் உள் மனதினில் சந்தோஷம் பொங்கி இருக்கும் என்று நினைக்கவும் தோன்றுகின்றது.
அண்ணன் கணேஷனை அசட்டை செய்தாள் மீனா. இனி அண்ணனின் சொல்லைக் கேட்க முடியாது என்பதுதான் இதன் அர்த்தமாக இருக்கின்றது. ஏனென்றால், கணேஷனின் கணக்கோ வேறு. தமிழை ஒதுக்கி விட்டு தன் மகள் வெண்பாவை சிபீக்கு கல்யாணம் பண்ணும் திட்டம் இருக்கின்றது என்று மீனாவுக்குத் ஏற்கனவே தெரிந்த விஷயமும்தானே.
ஜனாம்மா சொன்னது உண்மையாக இருக்குமோ என்றும் தோன்றுகின்றது. ஏனென்றால், ஜனாம்மாவிற்கு சிபீயைப் பற்றி நன்கு தெரியும் என்பதனால்தான். ஆனால், சிபீயின் மனதினில் என்ன இருக்கின்றது என்று சிபீ தமிழுக்குச் சொன்னாலும், தமிழ் அதனை நம்ப மாட்டாள். ஏனென்றால், சிபீ்க்கு இருக்கும் Ego வினிலேதான் சிபீ தன்னை வெறுப்பது போல நடிக்கின்றான் என்றும் தமிழுக்குத் தெரியும்.
ஆனால், எதனை உண்மை என்று எடுப்பது?, ஜனாம்மா சொன்னதையா? தமிழ் நினைப்பதையா?
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!