posted 19th December 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- நேற்று தமிழைப் பழிவாங்கியதற்கு விரைவில் கொடுப்பாள் பதில் தமிழ் என்பதற்கு இன்று காலை கிடைத்த சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தினாள் தமிழ்.
- மீண்டும் தமிழின் கண்களில் சிக்கித் தவித்த சிபீ.
- சிவ பூஜையினுள் ஏதோ புகுந்தது மாதிரி ஒரு mannaersம் இல்லாமல் அறையினுள் வந்த வெண்பா. தலையினுள் புழு வைத்து ஓடிய ஆடு போல ஓடினாள் வெண்பா.
- Love advice இனைத் தனது நண்பிக்குக் கொடுத்த தமிழின் தூண்டிலில் மாட்டிய சிபீ மீன்.
- பிரகாஷ் மாமாவையோ அல்லது அவருடைய பொருட்களையோ யாராவது தொட்டால் alarm அடிக்குமாறு set பண்ணியது தெரியாமல் மாட்டிக் கொண்ட கணேஷன்.
- Secret Cameraவினைப்பற்றி ஒன்றும் சொல்லாத தமிழ். Alarm அடித்த கதை இப்போ ஆரம்பம். Secret Cameraவின் பதிவினைக் காட்ட அதுவும் கணேஷனுக்கே தனிமையில் காட்டி வெருட்ட இன்னமும் நேரம் இருக்கின்றது.
- ஒன்று சேர்ப்பதே தமிழுக்கு ஜனாம்மா கொடுத்த task, பிரிப்பதற்கல்ல. எனவே, கணேஷனை வீடோயோவை வைத்து வெருட்டி அடக்கி தனது கட்டுப்பாட்டினுள் கொண்டுவரவுள்ள தமிழ்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 19.12.2025
தமிழின் கண்களை சிபீயினால் நேராகப் பார்க்க முடியாது. பார்த்தானோ அப்படியே உறைந்து விடுவான். அதாவது, சிபீ தமிழின் கட்டுப்பாட்டினுள்ளே போய் விடுவான். அந்த வினாடியின் அர்த்தத்தினை அவர்கள் இருவரும் புரிந்து கொள்ள முன்பு, வெண்பா அறையினைத் தட்டாமலே உள்ளே புகுந்தாள்.
முன்பு சிபீ கல்யாணமாகதவன். இந்த அறையானது அவனது. அதனுள் சிபீயைத் தவிர வேறு ஒருதரும் இருக்க மாட்டார்கள். ஆனால், இப்போ சிபீ கல்யாணம் முடித்து விட்டான். அந்த அறையானது இப்போது தமிழும் மனைவியாக சேர்ந்து இருக்கின்றாள். அப்போது அறையின் கதவினைத் தட்டிவிட்டு வரவேண்டும் என்ற mannersஉமா பெற்றார் சொல்லிக் கொடுக்கவில்லை வெண்பாவிற்கு. மற்றவர்களைக் கெடுப்பது எப்படி என்று சொல்லிக் கொடுப்பதற்கே அவர்களுக்கு நேரம் சரியாகி விட்டிருக்கும்.
இந்தா இன்றைக்கு ஒரு முடிவுடன் வருகின்றேன் என்று பிரகாஷின் அறையினுள் உள்ளே வந்த கணேஷன் கையும் மெய்யுமாக அகப்பட்டான். எதைத் தொட்டாலும் alarm அடிக்கும் பயம் இப்போது எல்லாருக்கும் வந்துள்ளது. அப்பவும் தமிழ் கணேஷனைக் காப்பாற்றினாள் மற்றவர்களிடம் இருந்து. Secret Cameraவினை தமிழ் தனது phoneனிலே பார்க்காமலா வந்திருப்பாள்? பார்த்திருப்பாள். ஆனால், தமிழ், கணேஷனை ஒருதருக்கும் காட்டிக் கொடுக்கவில்லை.
அந்த வீடியோவினை எல்லாருக்கும் காட்டிவிட்டு பின்பு ஜனாம்மாவிற்குக் காட்டுவதற்கு தமிழுக்கு எவ்வளவு நேரமாகும். அந்தக் கணமே கணேஷன் குடும்பமே றோட்டிற்கு போக வைக்க எவ்வளவு நேரம் செல்லும் தமிழுக்கு. அதல்ல தமிழின் வேலை. எல்லாரையும் ஒன்றிணைத்து ஒரே குடும்பமாக ஆக்க வேண்டும் என்பதுதான் ஜனாம்மாவின் வேணவாவாக இருக்கின்றது. அதைத்தான் செய்வாள் தமிழ்.
இப்போது இதனைப்பற்றி தமிழ் கணேஷனிடம் சொல்லுவாளா? சொல்லலாம். ஆனால், இப்போது சொன்னால் கணேஷன் பக்கத்தார் மிகவும் அவதானமாகி விடுவார்கள். எனவே சொல்லமாட்டாள் தமிழ். எல்லா வீடியோ ஆதாரங்களையும் திரட்டுவாள் தமிழ். ஒன்றாக எல்லாவற்றினையும் சேர்த்து கணேஷனுடன் கதைப்பாள். அத்துடன், வேறு யார் யாரெல்லாம் எதிரிகளாக இருக்கின்றார்கள் என்று எல்லாரினதும் சரித்திரங்களை எல்லாம் சேகரிப்பாள். அதன் பின்தான் ஒவ்வொருவராகத் தனிமையாகத் தமிழ் பேசுவாள்.
இப்படி தமிழ் செய்கையிலே எல்லாரையும் தனிமைப் படுத்தி பயமுற வைத்து தன் கையினுள் ஆட்டத்தினைக் கொண்டு வருவாள் தமிழ். இதனால், அனைவரும் செத்த பாம்பு போலாகி விடுவார்கள். இவர்களிடம் இருந்து மூச்சு மட்டும் உள்ளே போய் வெளியே வருமொழிய, உடம்பில் உள்ள நரம்பு மண்டலமே வேலை செய்யாமல் உடலோ அசைவற்றிருக்கும். இதுதான் இறுதியில் நடக்கும்.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channelலினில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!