posted 20th January 2026
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- சிவதானு ஐயாவின் வீட்டினில் பொங்கல் விழா அரங்கேற ஆயத்தப்படுத்தப் பட்டது. கணேஷனின் கறைபடிந்த மனமோ வெளிப்பட்டது.
- ஜனாம்மா, மீனாவை இந்த முறை பொங்கலை ஆரம்பிக்கச் சொன்னா. ஆனால், மீனா இல்லை அத்தை, என்னதான் நடக்கட்டும் நீங்கள் தான் இந்த வருடமும் பொங்க வேண்டும் என்று மறுத்துவிட்டா.
- பொங்கலை ஆரம்பிக்க இருக்கையிலே தமிழ் கையில் அரிசியுடன் வந்தாள். இந்த அரிசியைப் போடுங்கள் ஜனாம்மா என்றாள். மீனா மறுத்தாள். ஆனால், அதற்குப் பதிலினை சேது சொன்னான். வாயடைத்துப் போனாரகள் அனைவரும்.
- இவளுக்கென்னென்று புதுப்புதுதான சிந்தனைகள் என்று புலம்பியவனாய் கணேஷன்.
- பொங்கலும் கிழக்கை நோக்கியது – அம்மனின் ஆசீர் ஜனாம்மாவின் குடும்பத்திற்குச் சென்றது.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Varisu - வாரிசு - 19.01.2026
ஜனாம்மாவை உதாசீனப்படுத்திக் கொண்டிருக்கும் கணேஷனை வெல்ல விட்டுவிடுவாளா தமிழ். அத்துடன், ஜனாம்மாவைத் தலைகுனிய வைத்து விடுவாளா தமிழ். அம்மனிடம் முறையிட்டாள். அவள் மனதினிலே தோன்றியது ஒரு உத்தி. அதுவும், அம்மனால் கிடைக்கப் பெற்றது என்று உணர்ந்தவளாய், மடிப்பிச்சை எடுக்கச் சென்றாள். கிராமத்தவர் அனைவரும் மடிப்பிச்சை கொடுத்தனர்.
பாத்திரத்தில் கொணர்ந்தாள் மடிப்பிச்சை எடுத்த அரிசியினை. ஜனாம்மாவை விட்டுக் கொடுக்காத மருமகள் மீனா. மீனாவை மகிமைப்படுத்தும் மருமகள் தமிழ்.
ஜனாம்மாவை என்னவென்றாலும் நடக்கட்டும், அது நன்மையாக அல்லது தீமையாகவாவது இருக்கட்டும் நீங்கள் அரிசியினைப் போடுங்கள் என்று ஜனாம்மாவுக்குரிய மரியாதையும், உரிமையையும் விட்டுக் கொடுக்காத மீனா. மீனாவினதும், ஜனாம்மாவினதும் நொறுங்கிய மனத்தினைப் பார்த்த தமிழ் அம்மனிடம் வேண்டினாள்.
என்ன தோன்றிச்சோ அவளது மனதினில் தெரியவில்லை. அதுதான், தமிழ் வீடு வீடாகச் சென்று மடிப்பிச்சை எடுத்தாள். கிராமத்தவர்கள் மடிப்பிச்சையினை உவந்தளித்தார்கள். அந்த மடிப்பிச்சையினை நேரத்திற்குக் கோவிலுக்குக் கொண்டு வந்தாள் தமிழ்.
கொண்டு வந்த அரிசியினை கொடுத்தாள் தமிழ், இதை போடும்படி ஜனாம்மாவைப் பணித்தாள். இது எங்காலே வந்தது? என்ற கேட்டதற்கு, வழமை போல தமிழ் மௌனம் சாதித்தாள். ஆனால், சேது விடவில்லை. தான் கண்டதினை, தமிழ் செய்ததினை சபையினில் சொன்னான்.
தமிழ் மடிப்பிச்சை எடுத்தாளா? என்று ஜனாம்மா வியந்து போனா. மீனாவும் அதிர்ச்சியானா. கணேஷனுக்கோ என்னென்று இவளுக்கு மட்டும் புதுப்புதுசாக ideaகள் தோன்றுகின்றன என்று புலம்பலானான்.
பொங்கலும் ஆரம்பமாகியது. பொங்கிய மனத்துடன் வெந்து கொண்டிருப்பவர் சிலர். தமிழின் வேண்டுதலோ இந்த முறை ஜனாம்மா வைத்த பொங்கல் கிழக்கு நோக்கி பொங்க வேண்டும் என்பதுதான். இதனால், கணேஷன் ஜனாம்மாவின் மீதான துஷ்ட நினைப்பினை அவன் நீக்க வேண்டும் என்பதுதான்.
சேது, வெண்பாவையும், வர்ஷினாயையும் கூட்டிக் கொண்டு கிராமத்தினை சுற்றிக் காட்டுவதற்காக போகையிலே, அங்கு தமிழும், சிபீயும், ஜனாம்மாவால் அனுப்பப் பட்டார்கள். இதனைப் பொறுக்காமல் சம்யூத்தா தனது கெட்டுப்போன மனத்தினைப் பயன்படுத்தினாள். இவள் மனமோ அங்கு கண்ட தேனிக் கூட்டினைக் கலைத்து விடுவதுதான். கலைத்தாள். ஆனால், அவள் எதிர்பார்த்தது எது நடக்கக் கூடாது அது செம்மையாக நடைபெற்றது. வெறுத்துப் போய் தன்னையே திட்டித் தள்ளினாள்.
பொங்கலும் பொங்கியது. கிழக்கை நோக்கி இருந்தது. மனம் தாங்காமல் பொங்கியோர் மண் கவ்வினர், வெண்பாவும், கணேஷனும். ஆனால், ஜனாம்மாவிற்கோ மனம் நிறைந்தது. தமிழைக் கட்டியணைத்தா.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!