posted 17th November 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்.
- ஜனாம்மாவை மரியாதைக் குறைவாக, அடங்காமல் கதைத்த சிபீ. தாயின் சொல்லையும் கேட்கவில்லை. ஜனாம்மாவிற்கு அடங்குவதாகவும் இல்லை. மானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஜனாம்மாவின் அதட்டலுக்குப் பயந்தாலும், ஜனாம்மாவின் மானத்திற்கு முக்கியம் கொடுத்து அடங்கிப் போனாள் தமிழ்.
- இவ்வளவு நாளும் நடித்த சிபீ, இப்போ தமிழ் நடிக்கின்றாள் என்று வாய் கூசாமல் அனைவருக்கும் முன்னால் அசிங்கப் படுத்துவதற்கு என்னென்று சிபீக்கு துணிவு வந்ததோ?
- அதுமட்டுமல்லாமல், ஒரு கல்யாணத்தினால் தன் மானம் போய், இப்பவும் அனைவரும் ஏளனமாகக் கதைத்துக் கொண்டிருப்பது காணாததென்று இப்போ தமிழ் நீயும் அதனைச் செய்தால், நான் என் உயிரை விட்டு விடுவேன் என்று உண்மையாகச் சொன்னதற்கு மதிப்புக் கொடுத்தாள் தமிழ்.
- தமிழை வேண்டாம் என்றும், விருப்பமில்லை என்றும், அவள் பொய் சொல்லுகின்றாள் என்றும் பலவிதமாக தமிழைக் கேவலப்படுத்தும் சிபீயை வேண்டும் என்று எந்தப் பெண்தான் சொல்வாள்.
- ஆனால், தமிழ் எதையுமே அவள் யோசிக்கவில்லை. தனது ஆசா பாசமெல்லாம் ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து விட்டு ஜனாம்மா இந்த கல்யாணத்தினால் அவவின் வாழ்க்கையில் தலை குனியக் கூடாதென்ற ஒரே நோக்கத்தினை முன் வைத்து, ஜனாம்மாவின் சொல்லுக்கு மதிப்புக் கொடுத்து மணமேடையில் உட்கார்ந்தாள், தமிழ்.
- ஆனால், இங்கு தமிழ் சொன்னதெல்லாம் உண்மை என்று வர்ஷினியும், சேதுவும், கேடீயும் நம்புகின்றார்கள். ஆனால், பொதுவாக பொய்யினைத்தானே நம்புவார்கள். இதனால், தமிழின் சொற்கள் உண்மையெனப் புரிய வைக்க வருவார்களா யாரும்? அந்தத் தெய்வம் அருள் புரியுமா?
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
சிபீ இவ்வளவு காலமும் தமிழ் சொன்னதெல்லாம் உண்மை என்றும், அவளைப் பற்றி ஒருதரும் எதுமே சொல்லக் கூடாது என்று சொல்லுகையில், இப்போ எல்லாவற்றையும் எதிர் மாறாகக் கதைக்கின்றான் சிபீ. இந்த கல்யாணத்திற்காக ஏதோ திட்டத்துடன் செயல் படுகின்றாள் தமிழ் என்று தமிழைப் பற்றி கேவலமாக, அவள் ஒரு பெண்ணே இல்லை என்று பேசுகின்றான். ஜனாவைப் பற்றியும் அவன் பேச எவ்வளவு நேரம் செல்லும் சிபீக்கு? ஆனால், அவன் அதனை மறைத்து தமிழை மட்டும் பேசுகின்றான்.
இதெல்லாம் யாருக்காக, சம்யூத்தாவுடனான ஒப்பந்தம். ஆனால், இந்த ஒப்பந்தத்தில் உள்ள வில்லங்கங்கள் எவ்வளவு ஆபத்தானது என்ற ஒரு சிந்தையும் இல்லாமல் சம்யூத்தாவைத்தான் கல்யாணம் பண்ணுவேன் என்று அடம்பிடிக்கின்றான், சிபீ.
ஆனால், சிபீயின் கல்யாணத்தின் conditions என்ன என்று கேடீக்குத் தெரிந்திருந்தும் அதனை இந்த பிரச்சனையான நேரத்தில் கூட கேடீ வெளியே சொல்லவில்லேயே! அந்த விஷயத்தினை வெளியே சொல்லி இருந்தால் ஜனாம்மா இவ்வளவுக்குப் போயிருக்க மாட்டா. அதுமட்டுமல்லாமல், தமிழ் சொன்னது உண்மை என்று மற்றவர்களுக்கும் தெரிந்திருக்கும்தானே!
இது வரைக்கும் சம்யூத்தா ஒரு நாளும் உண்மையாக சிபீக்கு இருந்ததில்லேயே. செய்த பிழைகள் எல்லாவற்றிற்கும் சிபீயின் காலில் விழுந்து விழுந்து மன்னிப்பு கேட்க, சிபீ மன்னித்து மன்னித்து அலுத்துப் போயிருக்கும். எல்லாருக்கும் பொய்யைத்தானே குடும்பமாகச் சொல்லி இருக்கின்றார்கள். அதைக் கூட சிபீ பொருட்படுத்தாமல் உடனே பிறேம் சொன்னதையும், சம்யூத்தா சொன்னதையும் உண்மை என்று நம்புவதென்றால், ஒரேயொரு காரணம்தான். அதுதான், இந்த கல்யாணம் ஒரு பொய்யான கல்யாணம். அதுவும், இரண்டு, மூன்று மாதங்களில் விவாகரத்து செய்து விடுவது என்று.
இதில் உள்ள விவகாரத்தினை ஒன்றும் சிந்திக்காமல், ஆமா நல்லதுதான் என்று தலையாட்டி கல்யாண மேடையிலும் உட்கார்ந்து விட்டனர்.
தமிழைக் கடத்தி கொல்லச் சொல்லி விட்டு, இங்கு சொத்திற்காக சிபீயைக் கொல்லமாட்டாள் என்று என்ன நிட்சயம்? சிபீ்க்கே தெரியாமல் விஸ்கியினைக் கலந்தவள்தானே சம்யூத்தா. சிபீ தோற்றாலும் பரவாயில்லை, தமிழ் வெல்லக் கூடாது என்று செய்தவள் என்பதனை மறந்து விட்டானா, சிபீ.
தகப்பன் பிரகாஷினை அடித்து படுக்கையில் போட்டு விட்டான் கணேஷ். ஆனால், சிபீயை கல்யாணம் சம்யூத்தா பண்ணினால், அவள் சிபீயை கொலை செய்து விடுவாள். இப்படி பிரகாஷினை வைத்துப் பார்ப்பது போல செலவழிக்க மாட்டாள். பிரகாஷையும் கொன்று விடுவாள். எல்லாம் ஒரே செலவாகட்டும் என்று.
சிபீக்கோ சம்யூத்தாவைக் கல்யாணம் பண்ணி குடித்தனம் பண்ண வேண்டுமென்றில்லை. ஆனால், அவளுக்கும் அப்படி ஒன்றும் ஆசையில்லை. அவளுக்கு சொத்துகள் எல்லாம் தனக்கு வரவேண்டும் என்பதுதான் குறிக்கோளே. அத்துடன், பணக்காரன் மாதிரி இனி வாழ முடியாது, உண்மையாகவே பணக்காரன் ஆகவே வாழ வேண்டும் என்று யாருடைய சொத்திற்கு பேராசைப்படுவது கடவுளுக்கே பொறுக்காது.
சிபீயின் பொறுப்பற்ற தன்மையும், தன்னைத் தாண்டி வெகு தூரத்திற்குப் போய் விட்டான் சிபீ என்றும் உணர்ந்த ஜனாம்மா, போதும் இனி சிபீ என்று தனது கட்டுப்பாட்டிற்குள்தான் இனி இருக்க வேண்டும் என்று உறுதியாகவும், இறுதியாகவும் ஜனாம்மா சபையினில் சொன்னா, அனைவரும் அடங்கும்படியாக.
தமிழுக்கும் ஜனாம்மா சொன்னா. ஆனால், தமிழைப் பொறுத்தமட்டில், தன்னை விரும்பாதவன், சிபீயின் ஆசைக்குள் வரமாட்டேன் என்று வாக்குக் கொடுத்தவள், ஜனாம்மாவின் விருப்பத்தினை வேண்டாம் என்று தமிழ் சொல்லி விட்டாள்.
ஆனால், தமிழ் இல்லை என்று சொன்னதும் ஜனாம்மாவிற்கு பொறுக்க முடியவில்லை. தமிழும் தனது மானத்தினைக் காப்பாற்ற மாட்டாளா என்று ஜனாம்மா கேட்டதற்கு, அவளும் என்னதான் செய்வாள். ஜனாம்மாவைத் தலை குனிய விடமாட்டாள். என்ன நடந்தாலும் பறவாயில்லை என்று போய் மணமேடையிலே உட்கார்ந்து விட்டாள். தனது உயிரா உனது பிடிவாதமா சிபீ என்றதற்கு, சிபீயும் அடங்கிப் போனான்.
ஆனால், இது வாழ்க்கை. என்னதான் நடக்கப் போகின்றது?
இதில் உங்களுக்கு இருக்கும் அபிப்பிராயத்தினைச் சொல்லுங்கள்.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channelலினில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!