posted 16th November 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- இதற்கு முன்னைய பதிவினில் குறிப்பிட்ட எல்லா ஆதாரங்களும் கிடைக்காமல் போனதற்கு மண்டபத்தின் CCTV வேலை செய்யாமல் போனதுதான். ஆனால், ஒரு CCTV Footage முன் கடையிலிருந்து கிடைத்தது.
- தமிழில் அம்மாளாச்சியே இறங்கிய உடலாகும். அந்தத் தாய் சும்மா இருப்பாளா இவர்களின் ஆட்டங்களைப் பார்த்துக் கொண்டு.
- எத்தனை வாகனங்களை மாற்றினாலும், இசையின் cubeஐ வைத்து ஆட்டத்தினை ஆரம்பித்த தெய்வம். இதற்குத்தான் புத்தி சுயாதீனம் குறைவான இசையிடம் அந்த cubeஇனை ஆரம்பத்திலேயே கொடுத்து தெய்வம் பாதையை மெருகாக்கியதோ?
- எல்லாரிலேயும் கை வைத்து கடைசியாக தனது பிள்ளையிலேயும் கை வைக்க வைத்து, எல்லாரையும், தாங்கள் செய்த பிழைகளினால் இந்தத் தண்டனை என்று நினைக்க வைத்து, கூட்டுக் களவாணிகள் எல்லாரையும் ஒன்றாக அகப்பட வைத்ததுதான் தெய்வத்தின் விளையாட்டு.
- எல்லா கூட்டுக் களவாணிகளின் சரித்திரமும் இனி வெட்டைக்கு வரும்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 14.11.2025
அயலியின் தலைமையில் இயங்கும் இந்த இரகசிய அதிரடிப் பிரிவானது தங்களது ஆட்டத்தினை உக்கிரமாக்கியது. பிறேமினது குடும்பத்தின் இரகசிய பக்கமானது இத்துடன் ஒரு முடிவிற்கு வரும் நேரம் நெருங்கியது. தமிழின் குடும்பத்தின் மேல் களங்கத்தினை ஏற்படுத்தி நடுறோட்டினிலே விட்டுச் சென்றது பிறேமின் குடும்பம். இவர்கள் போட்ட றோட்டானது, இப்போ தமிழின் காலடியில் வந்து நிற்கும் என்று பிறேமின் குடும்பம் எதிர் பார்க்கவில்லை, அதுவும் இவ்வளவு கெதியாக. இன்று தமிழின் காலடியில் பிறேமின் குடும்பம் அனைவருமே ஒன்றாக விழுந்து எங்களை மன்னித்து விடுங்கள் என்று சொல்லும் போது இவர்கள் உணருவார்கள் என்று நினைக்கலாமா?
இதுதான், தெய்வத்தின் ஆட்டம் என்பது. ஆனால், அதைத்தான் காலத்தின் கட்டாயம் என்றும், விதி என்றும் சொல்வார்கள்.
முதுகினை வளைத்து, கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து வாழாமல், மற்றவன் வியர்வை சிந்தி உழைத்த சொத்தினை அவ்வளவு இலகுவாக ஆட்டையைப் போட நினைக்கும் பிறேம், சம்யூத்தா குடும்பத்தினருக்கு தெய்வ ஆசீர் இருக்கும் என்றா நினைக்கத் தோன்றும்.
பூரண அறிவினை இசைக்கு அவளின் பிறப்பிலிருந்தே கடவுள் கொடுக்கவில்லைதான். ஆனால், அவளில், அந்தக் குழந்தையில் தெய்வம் இருக்கின்றது என்று இப்போது புரிந்து கொள்ள முடிகின்றதுதானே!
தமிழை அடித்து மயக்கம் போட வைத்தாலும், கடத்தல் காரர்கள் அவளை எங்குதான் ஒழித்துக் கொண்டு போனாலும், கடைசியாக தனது எல்லைக்குள்தானே, அந்தத் தெய்வம் வர வைத்திருக்கின்றது. இங்குதான் பிறேமினதும் அவனது கடத்தல் கும்பலினதும் அடக்கங்கள் அனைத்தும் இருக்கின்ற இடம் போலும். இனி இவர்கள் கூட்டோட கைலாயம்தான்.
இதிலிருந்து என்ன தெரிகின்றது என்றால், கடத்தல் காரர் தமிழைக் கடத்திக் கொண்டு போகவில்லை. மாறாக, தமிழில் உள்ள தெய்வம்தான், அம்மாளாச்சிதான், கடத்தல் காரரை தனது எல்லைக்குள் கொண்டு போய் உள்ளது.
இதுவரைக்கும், சிபீ தமிழைத் தேடுவதாகத் தெரியவில்லை. அவனுக்கோ கல்யாணத்திலும் உண்மையில்லை, கட்டுப்பாடான, கண்ணியமான வாழ்கையும் தேவையில்லை. அத்துடன், உண்மையுள்ளவர்களை இன்னமும் தெரியவில்லை, தெரிந்து கொள்ளச் சிந்திக்கவுமில்லை. இப்படியும் சில பேர் உள்ளார்கள், உணர்வுகளற்றவர்களாக.
அயிலியின் குளு கள்ளர் குகையினை அடைந்தார்கள். மேலதிக படைகளுக்குத் தகவல் சொல்லி அதுவும் வந்துவிடும். காரணங்கள், கதாபாத்திரம், இயக்குணர்கள் அனைவரும் அகப்படுவார்கள், ஆதாரங்களின் ஆதாரத்தினை வைத்து.
இங்கு உயிரைப் பணயம் வைத்து ஜனாம்மாவின் குடும்பத்தினையே காப்பாற்றுகின்றாள் தமிழ். இது ஜனாம்மாவுக்கு விளங்கும். ஆனால், சிபீக்கு என்னதான் விளங்கும். தன்னைத்தானே, பிழை செய்து விட்டேனே, தமிழுக்குத் துரோகம் செய்து விட்டேனே என்று தன்னைத்தானே அடித்துக் கொண்ட சிபீ இப்போ என்னதான் செய்யப் போகின்றான்? வெண்பா சொன்ன மாதிரி சம்யூத்தாவை இன்னும் மன்னிப்பானா?
அதெல்லாம், இனி தமிழிடம் நடக்காது. இது ஒரு கொலை முயற்சி. முயற்சி என்றில்லை, கொலை செய்ததற்குச் சமம். கொஞ்சம் miss பண்ணியிருந்தால் அவ்வளவும்தான். சட்டமும் விடாது, தமிழும் விடமாட்டாள், ஜனாம்மாவும் விடமாட்டா. இங்கு மன்னிப்பு என்ற வார்த்தைக்கு இடமில்லை. ஆனால், மன்னிக்க யாராவது சொல்லுவார்களாக இருந்தால், அவர்கள் இந்தக் குற்றங்களுக்கு ஆதரவு என்றுதான் கூற வேண்டிவரும்.
இப்போ, தாலியினை சம்யூத்தாவிற்குக் கட்டப் போன சிபீயின் கை என்ன செய்யும்? சம்யூத்தா சிபீயின் கையினை தனது கழுத்துக்கு இழுப்பாள், சிபீயின் தாலி தன் கழுத்தினில் விழட்டும் என்று. அதனை ஜனாம்மா வந்து தட்டி விடுவா.
இதில் உங்களுக்கு இருக்கும் அபிப்பிராயத்தினைச் சொல்லுங்கள்.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channelலினில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!