posted 14th November 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- உண்மைகள் வெளி வந்தன. எனது analysis பதிவின் ஆரம்பத்தில் கூறிய பிரகாரம், தமிழின் சொத்துக்களின் இழப்பிற்கு சம்யூத்தாவின் குடும்பம்தான் காரணம் என்றதும், சம்யூத்தாவின் குடும்பத்தின் தொழிலே பெரிய வசதி படைத்தவர்களை குறிவைத்து சொத்தினை ஆட்டையைப் போடுவதுதான் என்பதனைக் கூறிவிட்டேன். எனது analysis சரியாகியும் விட்டது.
- சம்யூத்தா குடும்பத்தின் திட்டங்களை தமிழ் கேட்டுவிட்டதனை கண்டு பிடித்த சாமும், பிறேமும் உடனே தமிழை அறையினுள்ளே இழுத்து அடித்ததுமல்லாமல், சம்யூத்தாவும், பிறேமும் தமிழைக் கொலை செய்ய அனுப்பி விட்டார்கள்.
- ஆனால், இங்கு மணமேடையானது களைகட்டுகின்றது. சிபீயோ தமிழினைப் பற்றி ஒன்றும் சிந்திக்கவில்லை. ஆனால், ஜனாம்மாவும், கேடீயும், சேதுவும் தமிழைக் காணாத துக்கத்தில் தேடத் தொடங்கினார்கள்.
- சாம்பல் வாகனம் ஒன்று வாசலில் நின்று போனதாகத் தகவல் தமிழின் தகப்பன் செல்வரத்தினம் சேதுவிடம் கூறினார்.
- ஜனாம்மாவின் மனதில் தமிழ் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற நினைவுகள் உதயமாகின. ரீச்சர் குளாமுடன் தொடர்பு கொண்டா ஜனாம்மா.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 13.11.2025
மயக்கத்திலிருந்த தமிழைக் கொல்லும்படியாகவும் அல்லது வெளிநாட்டிற்கு விற்று விடும்படியாகவும் சம்யூத்தா பிறேமிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க தமிழ் பொட்டலத்தில் கட்டப்பட்டு சாம்பல் நிற வானில் கடத்தல் காரர்களிடம் கையளிக்கப்பட்டாள்.
இந்தச் சம்பவத்தில் பல விஷயங்களை உன்னித்துப் பார்க்கலாம்.
- முதலாவது, தமிழைக் கடத்திக் கொண்டு போவதற்கு வான் ஒன்றினை கல்யாண மண்டபத்தின் வாசலில் நிற்பாட்டியது.
- இரண்டாவது, தமிழை கட்டிய பொட்டலத்தினை பிறேம் தூக்கிக் கொண்டு மண்டபத்தினிலிருந்து வானுக்குக் கொண்டு போனது.
- மூன்றாவது, மண்டப வாசலில் வைத்தே வானின் இலக்கத் தகட்டிற்கு பூச்சுப் பூசி, புது இலக்கம் எழுதியது.
- நான்காவது, மண்டப வாசலில் பிறேமுக்கும், கடத்தல் காரருக்கு இடையில் நடைபெற்ற பேச்சு வார்த்தை.
- ஐந்தாவது, சேது, பிறேமை மண்டப வாசலில் வைத்து கதைத்தது. அப்போது பிறேம் ஒரு பதட்டத்தில் இருந்தது.
- ஆறாவது, சேது பிறேமைக் கூட்டிக் கொண்டு மண்டபத்தினுள் போகையிலே கடத்தல் காரனுக்கு போகும்படி சமிக்ஞை காட்டியது.
- ஏழாவது, வானின் இலக்கத்தினை மாற்றிய போது வெள்ளைப் பெயின்ற் தரையினில் சிந்திய அடையாளம்.
- எட்டாவது, தமிழின் தகப்பன் கூறிய சந்தேகத்துக்கு இடமான முறையில் வேகமாகப் போன ஒரு சோப்பு டப்பா சாம்பல் கலர் கார்.
இவ்வளவு ஆதாரங்களும் அந்த கல்யாண மண்டப CCTV footageஜில் நிட்சயமாக இருக்குமென்பதும், எவ்வளவோ criminal வேலைகளைச் செய்த சம்யூத்தாவின் குடும்பம், ஆதாரங்களை அழித்து சட்டத்தினை ஏமாற்றிக் கொண்டிருக்கும் இவர்கள், இப்போ, தமிழின் விஷயத்தில் ஜனாம்மாவின் ரீச்சர் குளுவிடம் மாட்டுவார்கள். இந்த ஆதாரங்களுடன், CCTV Footageஐயும் சேர்த்து எல்லாவற்றினையும் சேது சேகரித்து உடனே ரீச்சரிடம் அனுப்புவான்.
தமிழுக்கு முழுமையான உண்மைகள் தெரிந்து விட்டன என்பதனைக் கண்டு பிடித்து விட்டனர், பிறேமும், சம்யூத்தாவும், தகப்பனாரும். எங்களை விட கணேஷ் என்ன அவ்வளவு பெரிய றௌடியா என்ற பெருமிதத்தில் பிறேமின் இறுமாப்பு ஒருபக்கம். இவர்களின் எல்லா criminal நடவடிக்கைகள் எல்லாம் இப்போது தமிழின் கடத்தலில் அம்பலமாகுவதற்காக இருக்கும் வாய்ப்புகள்.
எப்பவும் தீமைகளையே செய்வதுமல்லாமல், மனிதரிடமோ, சட்டத்திடமோ அகப்படாமல் அவ்வளவுக்குத் தெளிவாகச் செய்து கொண்டிருக்கும் தப்பானது ஒருநாளுக்குப் பிடிபடும் என்பதனை பலநாள் திருடன் என்று தொடங்கும் பழமொழியினால் அறிந்திருப்போம்.
எனது அனுபவத்திலுள்ளது, அப்படி அநியாயம் செய்பவர்கள் எல்லாரினதும் கண்ணில் தூசியினைத் தூவி விட்டு தப்பலாம். ஆனால், கடவுள், இப்படியானவர்களை ஒரு நாளுக்கு நல்லவர்களுக்கு அநியாயம் செய்ய வைப்பார், அகப்படவும் வைப்பார். அத்துடன், அந்தத் தவறிழைத்தமைக்காக கடுமையான தண்டனையினையும் கிடைக்க வைப்பார். இதனை நீங்கள் உங்கள் வாழ்க்கையிலே கண்டிருப்பீர்கள்.
தமிழைக் கடத்திக் கொண்டு போன கார் அகப்படும். தமிழ் மீட்கப்படுவாள். கல்யாண மண்டபத்திற்குக் கொண்டுவரப் படுவாள். பொலிஸார் வரவழைக்கப்படுவர். தாலி கட்ட சிபீ, சம்யூத்தாவின் கழுத்திற்குத் தாலியினைக் கொண்டு போகையிலே, ரீச்சரின் குழு தமிழுடன் மண்டபத்தினுள் நுளைவார்கள். கல்யாணம் நிறுத்தப்படும். தப்பியோட முயற்சித்த சம்யூத்தாவின் குடும்பம் பொலிஸினால் கைது செய்யப்படும்.
இதில் உங்களுக்கு இருக்கும் அபிப்பிராயத்தினைச் சொல்லுங்கள்.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channelலினில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!