posted 13th November 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- சிபீ தான் எப்படி வாழவேண்டும் என்பதனை விளக்கமாக கேடீக்குச் சொன்னான். வீணாய்ப் போன கேடீயின் அறிவுரை.
- காப்புக் கட்ட வேண்டும், மஞ்சள் பூசி, எண்ணை தேய்த்து குளிப்பாட்ட வேண்டும் என்பது மாமனார், மாமியாரின் வழக்கம். சம்யூத்தாவின் பெற்றாரைப் பேசித் துரத்தினான் சிபீ.
- காலத்தினை மறந்த செல்வரத்தினமும், அம்முவும் அவர்களை அறியாமல் சிபீக்கு காப்பு கட்டி, எண்ணை தேய்த்து விட்டதன் அர்த்தம்தான் என்ன?
- ஆரம்பத்திலிருந்து சம்யூத்தாவைப் பற்றி கூறியவை உண்மையென்று ஆதரித்தது அவளின் வார்த்தைகள்.
- கேட்டுக் கொண்டு நின்ற தமிழைத் தாக்கி மயக்கமுற வைத்த சம்யூத்தா.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 12.11.2025
சம்யூத்தாவின் தாக்குதலால் மயக்கமுற்றாள் தமிழ். இதனால் ஏற்படும் பிரச்சினைகளை ஒன்றும் சிந்திக்காமல் தமிழின் மேலே நடத்திய தாக்குதல். எல்லாம் சொத்தின் மீதான வாஞ்சைதான். இப்படியான மனநிலையில் இருப்பவர்களுக்கு அவர்களது மூளையானது நேர்த்தியாக வேலை செய்யாது. இதுதான், பிறேம் பிடிபட்டது, சம்யூத்தாவின் பெற்றார் அகப்பட்டது, இப்போ சம்யூத்தா.
சிபீயை எப்படியாவது வெண்பாவிற்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்பது முறையும், நியாயமும்தான். ஆனால், அந்த முயற்சியானது உண்மையாக வெண்பா, சிபீயுடன் வாழ வேண்டும் என்பதற்காக அல்லவே! மாறாக, அமுதாவினதும், கணேஷனினதும் நினைவுகள் முழுக்கவுமே ஜனாம்மாவின் சொத்தினைத் தாங்கள்தான் அனுபவிக்க வேண்டும் என்பதல்லவா. இது இவர்களின் நெடுங்காலத் திட்டமே! இப்படியான மனநிலையுடன் இருப்பவர்களுக்கு கடவுளின் ஆசீர் இருக்கும் என்று தப்பாகக் கணக்கும் போட்டு நிற்கும் கும்பல்தான் அதிகம்.
குறுக்கு வழிகளைத் தமதாக்கியும், கூடாத செயல்முறைகளைப் பாவித்தும் தமது காரியங்களைக் கட்சிதமாகச் செயல்படுத்துபவர்கள்தான் இப்போது உலகத்தில் இருக்கின்றார்கள். அதில் ஒருவர்தான், சம்யூத்தா. இவளுக்கும் சிபீக்கும் இடையில் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை, நட்பு ஒன்றைத் தவிர. அதுவும், பொய்யான நட்பு என்று இன்று விளங்கிவிட்டது.
சம்யூத்தா குடும்பத்துடன் அறையினுள் வைத்து சொன்னது சிபீயைப் பழி வாங்குவதற்கும், அத்துடன் அவனுக்கு வரவுள்ள அத்தனை சொத்துக்களையும் அபகரிக்கப் போவதாகவும்தான். அதற்குத்தான் சம்யூத்தா, சிபீக்கு இந்த தற்காலிக கல்யாண ஒழுங்கினைச் சொன்னாள். இதனை தனக்கு ஒத்து வரக்கூடிய வாழ்க்கை முறை என்று அவளின் ideaக்குத் தலை அசைத்தான். அதனை அழுங்குப் பிடியாகப் பிடித்துக் கொண்டாள் சம்யூத்தா.
சிபீ போகும் இடமெல்லாம், கணேஷனும், அமுதாவும், வெண்பாவும் பின் தொடர்ந்து கொண்டிருந்தனர். தன்னால், வெண்பாவுடன் சந்தோஷமாக வாழ முடியாது என்று திட்டவட்டமாக, எத்தனையோ தரம் சிபீ இவர்களுக்குக் கூறியும், முன்னும், பின்னும் திரிகின்றனர் என்றால், இவர்களுக்கும் வெண்பாவுக்கும் உண்மையான சந்தோஷமான வாழ்க்கையில் அக்கறை இல்லை என்றுதான் விளங்கக் கூடியதாக உள்ளது. மாறாக, இந்த சுகபோக வாழ்க்கை மட்டும் இருந்தால் போதும் தங்களுக்கு என்பதுதான்.
பிரகாஷை முடமாக்கியாச்சு. கணேஷன், தான் ஒரு வழியாக அமுதாவைக் கல்யாணம் பண்ணி உள்ளே வந்தாச்சு. இனி, சிபீயை வெண்பாவுக்குக் கல்யாணம் பண்ணி விட்டால் 100 வீதமான கட்டுப்பாடும் கணேஷனினதும், அமுதாவினதும் கையில்தான் வந்தே சேரும். மீனாவோ ஒரு வேலந்தியாதலால், அவளை சுலபமாக அடக்கி விடலாம் என்று நெடுங்காலத் திட்டத்தினை இவர்கள் கூட்டாகப் போட்டுள்ளார்கள்.
இதற்காக, கணேஷனோ வெண்பாவை வேண்டாம் என்று சிபீ சொன்ன அடுத்த கணம் காப்பையும் தூக்கிக் கொண்டு தான்தான் தாய் மாமன் என்று சொல்லிக் கொண்டு வழக்கத்தினை நனவாக்குவதற்கு சிபீயைத் தேடி அலைந்து, இறுதியில் அதில் தோல்வியும் கண்டான் கணேஷன்.
ஆனால், இந்த விஷயத்தில், சமையலுக்கு master ஆக வந்திருக்கும் தமிழின் அப்பா The Great செல்வரத்தினதினை ஏற்கனவே சிபீக்கு கோவிலிலே அறிமுகம் செய்து வைத்த தெய்வம், இப்போ அவரை வைத்தே அந்த காப்பினை சிபீயின் அனுமதியுடன் கட்ட வைத்தது.
அதுமட்டுமா, புத்தி சுயாதீனமற்ற இசையின் ரூபத்தில் தெய்வம் அவளை சிபீயின் அறைக்குக் கூட்டிச் சென்றது. அங்கு சிபீயைக் கண்ட அம்மு, சிபீக்கு எண்ணை தேய்த்து விடுகிறேன் என்றதும் சிபீயும் ஒத்துக் கொண்டான். கோரப்பாய் போல இருக்கும் சிபீயின் தலைமயிரினை விபரித்த அம்முவிடம் என்ன சொன்னீங்கள் aunty என்று கேட்ட சிபீயிடம் தான் யார் என்பதனை மறைத்து விட்டா அம்மு.
தமிழிடம் பரம்பரைச் சொத்தான வைர நெக்லஸ் உரிமையுடன் சென்றது. காப்பினைக் கட்டிய, பழையவற்றினை மறந்து போன தமிழின் அப்பா, புத்திசுயாதீனமில்லாத தமிழின் தங்கை மூலம் அம்முவை எண்ணை தேய்க்க வைத்து, இப்படியெல்லாம் நோகாமல் விஷயத்தினை நகர்த்தும் தெய்வம், விளையாட்டினை ஆடத் தொடங்கி விட்டதனை என்னென்று சொல்வது.
சம்யூத்தாவின் உண்மையான மனநிலையினை கேட்டாள் தமிழ். இதனை அவதானித்த பிறேமும், சம்யூத்தாவும் தமிழைப் பிடித்து அறையினுள் வைத்துத் தாக்கி அவளை நினைவிழக்க வைத்தனர்.
துஷ்டர்கள் மத்தியில் நல்லவர் நிமிர்ந்திருக்கக் கூடாது. மாறாக, கூனிக் குறுகி இருந்து தங்களது புத்தியினைப் பாவிக்க வேண்டும். இல்லாவிடில், தமிழை மாதிரி மயக்க நிலைக்குப் போக வேண்டியதுதான்.
தமிழோ, சம்யூத்தாவின் அறையினுள் வைத்து அடைக்கப்படுவாள். அல்லது வேறு ஒரு storeறினுள் அடைக்கப்படுவாள்.
சம்யூத்தாவிற்கும், சிபீக்குமான கல்யாண ஒழுங்குகள் செவ்வனே இடம்பெறும். மணமேடையில் சம்யூத்தா இருக்க, சிபீயும் இருந்து தமிழினைத் தேடுவான். தமிழ் கல்யாணத்தினைப் பார்க்க விரும்பாமல் அவளின் வீட்டிற்குப் போய் விட்டாளாக்கும் என்று சிபீ நினைத்திருக்க வாய்ப்புகள் உண்டு.
இல்லாவிடில், storeறினுள் அடைக்கப்பட்ட தமிழை, அவளின் தகப்பன் சமையலுக்குத் தேவையான பொருள் ஒன்று எடுப்பதற்குப் போய் அங்கு தனது மகள் தமிழ் என்ற விளங்காமல் தமிழைக் காப்பாற்ற வாய்ப்புகள் உண்டு.
அல்லாவிடில், தமிழின் phone தமிழிடம் இருந்தால் தமிழ் மயக்கம் தெளிந்ததும் அண்ணன் வெற்றிக்கு கோள் பண்ணி நடந்ததினைச் சொல்லுவாள். அத்துடன் தனக்கு நடந்ததையும் சொல்லுவாள். கல்யாணத்தினை உடனே நிறுத்துங்கள் அண்ணா என்று வெற்றியிடம் கூறுவாள்.
தமிழுக்கு, என்ன பிறேமினால் நடந்ததோ, அதே கதை இப்போது இங்கு சம்யூத்தாவுக்கு நடக்கும். சம்யூத்தாவின் குடும்பம் கலைக்கப்படும். ஆனால், தமிழ் கூறுவாள், ஏ! Hello! நில்லுங்கள் எனது கல்யாணத்தினைப் பார்த்து விட்டு, களைச்சுப் போயிருப்பீங்கள்தானே கள்ளத் திட்டம் போட்டு, கொஞ்சம் கொட்டி விட்டுப் போங்கள் என்று தமிழ் கூறுவாள், சம்யூத்தாவின் குடும்பத்திடம். இதில் தெரியும் தமிழின் அதிகாரத் தோறனை இப்போ. பெருமையுடன் தமிழைப் பார்க்கும் ஜனாம்மா.
இதில் உங்களுக்கு இருக்கும் அபிப்பிராயத்தினைச் சொல்லுங்கள்.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channelலினில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!