posted 11th November 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- போட்டோ எடுத்தவன் சிக்கினான். வெற்றி அதனைக் கண்டுபிடித்து வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். கேவலம் கெட்டுப் போனதுமல்லாமல் சிறையிலடைக்கப்பட்ட குறிஞ்சி.
- நாக்கின் மேல் பல்லை வைத்து அனைவரும் தழிழை கேவலமாக இகழ்ந்தனர். ஒரு சொல்லும் சொல்லாமல் தமிழ் அடங்கிப் போய் இருந்தாள். சிபீ்க்காகவும், ஜனாம்மாவின் குடும்பத்திற்காகவே எல்லாவற்றினையும் பொறுத்து நின்றாள் தமிழ். அதற்காக எல்லா வசைகளையும் தாங்கினாள், தமிழ்.
- சபையின் முன்னால் ஜனாம்மாவின் கேள்வி வந்தது, ஏலத்திற்கு. நீ தமிழை காதலிக்கின்றாயா? என்பதுதான். அதற்கு சிபீயிடம் பதில் இல்லை. ஆனால், அறையினுள் சிபீ, தமிழிடம் சொன்னது விரைவாக சிபீயின் வாயால் வெளியால்வரும்.
- இதுதான் சரியான நேரம் என்று அமுதா தமிழை வெளியேற்றி விடலாம் என்று கழுத்தினைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் எல்லார் முன்னிலையிலும் தள்ளி விட்டா.
- ஆனால், ஆதாரங்களோடே வந்த வெற்றி தமிழைத் தாங்கிப் பிடித்தார். எல்லா பாரத்தினையும் தானே ஏற்றுக் கொண்டு தமிழின் மனதினை இளக வைத்தார்.
- சிபீ, தான் ஏன் தமிழின் மேல் இவ்வளவிற்கு அக்கறை கொள்ளுகின்றான் என்று அவனுக்கே தெரியவில்லை. அதுதான், காதல் என்று இன்னமும் சில வினாடிகளில் தெரியும்.
- சம்யூத்தாவின் அப்பாவும், அம்மாவும் சிபீயின் தலைக்கு எண்ணை பூசி, மஞ்சள் பூசி, காப்பு கட்டணும் என்றதனை ஒதுக்கித் தள்ளி விட்டுச் சென்ற சிபீ, சுயநினைவு இல்லாமல் உள்ள தமிழின் அப்பா காப்பு கட்டவும், அம்மா மஞ்சள் பூசி, எண்ணை தேய்த்து குளிப்பாட்டவும் இடம் கொடுத்தான் – இதுதான் உண்மையான உறவென்பதா?
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 11.11.2025
தமிழை இழுத்துக் கொண்டு போய், கழுத்தைப் பிடித்துத் தள்ளிய அமுதா. ஒருதரும் இல்லை என்றால், இப்படித்தான் எல்லாப் பழிகளையும், குறிப்பாகப் பெண்களென்றால், அவர்கள் மேல் சுமத்தி பெயரைக் கெடுப்பதுதான் எம் சமூதாயம். அது மட்டுமல்லாமல் அப்படியான பழியானது உண்மையாக இருந்தால் அது அந்த பரம்பரைக்கே போகும் படி செய்வதுதான் எமது இந்த சமூகம்.
தமிழின் கை சிபீயின் மேலே பட்டது உண்மைதான், ஆனால் என்ன போட்டோவில சிபீ தமிழைப் பிடிக்காமலும், தமிழைத் தொட்டால் துடக்கு என்றும் சிபீ தனது கையினை ஆகாயத்திலா வைத்திருந்தான்? சிபீயும்தானே தமிழை கட்டிப் பிடித்திருந்தான். அதனை ஏன் ஒருதரும் கூறவில்லை. ஜனாம்மாதான் இதனை அவதானித்து அந்தக் கேள்வியினை சிபீயிடம் கேட்டா. ஆனால், ஒன்று, தமிழால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. சொல்லவுமில்லை. ஜனாம்மாவிற்காக எல்லாவற்றினையும் தாங்கனாள் தமிழ்.
ஆனால், தமிழால் இவர்களுக்குப் பதில் சொல்லுவதற்கு எத்தனை செக்கன்கள் ஆகும். ஆமாய்யா, நான் பிடித்தேன்தான், சிபீயும் என் கையினைப் பிடித்தார்தான். இப்ப என்ன வந்திற்று? என்று தமிழ் கேட்டிருந்தால் உரியிறதுகளை உரிந்து விட்டு உங்களால் போக முடியுமா? யோவ், உங்கட வண்ட வாளங்களை இப்ப ஒவ்வொன்றாக அவிட்டு விடவா இந்த சபையின் முன்னால, என்று தமிழ் வாயினைத் திறந்தால் உங்கள் நிலைமை என்னவாகும்? சொல்லவா? சொல்லவா?
யோவ், எனக்கு நல்ல விதமாகவும் பேசத் தெரியும், சம்யூத்தா மாதிரியும் அடிமட்டத்திற்கு இறங்கி அலசவும் தெரியும். என்னங்கடா, பொறுத்துப் பொறுத்துப் போனால் எகிறீங்கள் எல்லாரும். என்ன? என்ன என்று கையினை அசைத்துக் கொண்டு தமிழ் கதைத்திருந்தால், ஜனாம்மாவின் நடுவையும் தேவையில்லை, வெற்றியும் வர வேண்டிய அவசியமுமில்லை.
எனினும், வெற்றி இருந்தபடியினால், எல்லாவற்றினையும் அலைசி ஆராய்ந்ததினால் உண்மையான குள்ளனை, துரோகியை அடையாளம் காண முடிந்தது. குறிஞ்சியை என்ன செய்யலாம் என்றதற்கு, ஜனாம்மா முன்பெல்லாம் மன்னித்து விடுவா, ஆனால், தமிழ் சபையின் முன்னால் வைத்து, எங்க ஜனாம்மா மாதிரி மன்னிச்சு விட்டெல்லாம் போகமாட்டாள் இந்த தமிழ், அடித்துத் தூக்கிப் போட்டுவிட்டுப் போய்க் கொண்டே இருப்பாள், என்றதனை ஜனாம்மா நினைவு கூர்ந்தாவோ என்னவோ, கணேஷனைக் கூப்பிட்டு இவனைக் கொண்டுபோய் பொலிஸில் ஒப்படைக்கும் படிச் சொல்லி, வேலியை ஓணானிடம் ஒப்படைத்தா. இதுவும் ஒரு பிடி, கணேஷனைப் பிடிப்பதற்கு. ஆனால், கணேஷனுக்கோ இது விளங்கவில்லை.
புறப்பட்ட வெற்றிக்கு இன்னமும் வெளி வேலைகள் இருக்கின்றன, சிபீயினதும், தமிழினதும் கல்யாணம் நடந்தேறும் மட்டும். இதற்கு வெற்றி கன வேலைகளை நிறைவேற்ற இருக்கின்றது. தமிழுக்குப் போட்டியாக உள்ள கணேஷனின் மகள் வெண்பா, சம்யூத்தா இவர்கள் ஏன் சிபீ்க்குப் பொருத்தமில்லை என்பதனை சபையின் முன்னாலே நிரூபித்து விட்டு, தமிழ் ஏன் சிபீ்க்குப் பொருத்தம் என்பதும், அவள் ஏன் ஜனாம்மாவின் வீட்டின் மருமகள் என்பதனையும் பொருத்திக் காட்டவுமான வேலைகளானது மிகக் குறுகிய அவகாசத்தில் செய்து முடிக்க வேண்டிய கட்டாயத்தில் வெற்றி இருக்கின்றார்.
சம்யூத்தாவின் தகப்பனும், தாயும், சிபீயை அணுகி தாங்கள்தான் உங்களுக்கு காப்பு கட்டி, மஞ்சள் பூசி, எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்ட வேண்டும் என்று சொல்ல, சிபீ அதனை மறுத்து விட்டு, குசினிக்குப் போகையிலே நினைவிழந்திருக்கும் தமிழின் தகப்பனின் கையால் காப்பு கட்டிக் கொண்டான். அதுமட்டுமல்லாமல், தமிழின் அம்மா, அவதான் உண்மையான உறவான அத்தையின் கையால் எண்ணை தேய்த்து, அவவையே குளிப்பாட்டவும் இடமளித்தான் சிபீ.
இதெல்லாம் ஏன் நடைபெறுகின்றது? சிபீக்கோ இதெல்லாம் ஒன்றும் தெரியாது, புரியவும் மாட்டாது. ஆனால், எல்லாம் இனிதே நடைபெறுகின்றன.
இதெல்லாம் சிபீ தெரிந்தே செய்கின்றானா? அல்லது இதெல்லாம் தெய்வத்தின் திருவிளையாடல்களா? எல்லாவற்றினையும் ஒரு மயக்கத்தில் வைத்து நடத்திச் செல்வதற்கு?
இதில் உங்களுக்கு இருக்கும் அபிப்பிராயத்தினைச் சொல்லுங்கள்.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channelலினில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!