posted 17th March 2026
இன்றைய Serial Review & Analysisஆனது 11ஆம் திகதி தொடக்கம் 14ஆம் திகதி வரையிலான Serial Review & Analysisகளை உள்ளடக்கியுள்ளது.
இந்த Serial Review & Analysisஇனி்ல் நீங்கள் பார்க்கப்போவது;
- மீனாவின் அடக்கு முறையினால் நொருங்கிப் போனாள் தமிழ். தமிழுக்கு ஆதரவாக சிபீ அருகிருந்து ஆறுதல் சொல்னாலும், தான் தான் அவனின் மனைவி என்ற ஒரு வார்த்தையானது இன்னமும் சிபீயின் வாயால் வரவில்லாதது தமிழுக்கு ஆழ்ந்த கவலையினைக் கொடுத்தது.
- ஆசை ஆசையாக ஓடோடிச் சென்ற அம்முவிற்குக் காத்திருந்தது, தனது கணவன், செல்வரத்தினம் தலைமுழுகிவிட்டு வரும்படி அம்முவின் தாய் ஜனாம்மா. எதிர் பார்க்காத நிபந்தனை. இடி விழுந்தது.
- கணேஷனின் குடும்பத்தினால் வறுத்தெடுக்கப் பட்டுக் கொண்டிருக்கும் அம்முவின் குடும்பம் எப்படித்தான் நிம்மதியாக வாழ முடியும்?
- அம்முவிற்கு ஓடுகாலி என்ற ஒரு பட்டப் பெயரினை வைத்து அழைத்த ஜனாம்மா. ஓடியவள் அம்முவா? ஓட வைத்த நானா குற்றவாளி?
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Varisu - வாரிசு - 11 - 14.02.2026
அம்முவில் கோபம் கொண்ட அமுதா, கொம்பனியின் ஒரு பெண் அதிகாரியிடம் அம்முவை பாவித்த பாத்திரங்களைக் கழுவும் படி சொல்லி வேலையினை வாங்கும்படி அனுப்பினா. அவவும் போய் அம்முவைப் பாத்திரங்களைக் கழுவிச் சுத்தம் பண்ணும்படி கூறிவிட்டா. ஆனால், இதனைக் கண்ட ஜனாம்மாவிற்கு எப்படி இருந்திருக்கும்? தனது மருமகளாம் மீனாவைக் கூப்பிட்டு உடனே அம்முவைக் கூப்பிட்டு கழுவும் வேலையினை நிறுத்தும்படி கூறுகையில், மீனாவோ ஜனாம்மாவை எதிர்த்துக் கதைக்கத் தொடங்கினா.
இதற்கெல்லாம் காரணம், அமுதாவும், கணேஷனும் போட்ட sketchதான். இதனைக் கேட்டுக் கொண்டு விளித்துக் கொண்ட வேலாந்தி மீனா, ஜனாம்மாவைக் கேள்வி கேட்டதுமல்லாமல், அம்மு வேலைக்குத்தானே வந்தவ என்றும், பாத்திரங்களைக் கழுவினால் என்ன என்றும் ஜனாம்மாவையே கேள்வியும் கேட்கலானாள்.
அதுமட்டுமல்லாமல் மீனா இதுவரை காலமும் தனது மாமியாருக்கு எதிராக எதுவும் கதைக்காமல் மௌனமாகத்தான் இருந்து கொண்டிருந்தா. அதனையே உதாரணமாகத் தமிழின் விஷயத்தில் சுட்டிக் காட்டினா மீனா. எனவே தமிழும் மீனாவின் சொல்லுக்குக் கட்டுப்பட வேண்டும். அத்துடன், தமிழ் தான் சொல்வதனைக் கேட்டு தன் விருப்பத்திற்கு மாறாக எதுவும் செய்யக் கூடாது என்று மீனா ஜனாம்மாவிடம் பெரிய சத்தமாகக் கூறிவிட்டா. இப்படியெல்லாம் மீனா கதைக்கின்றா என்று கேட்டு அமைதியானா ஜனாம்மா.
மீனாவோ தனது கணவனை செல்வரத்தினம்தான் கொல்ல முயற்சித்து இந்தனை வருட காலங்களாக கோமாவிலேயே இருக்க வைத்தவன் என்று கேள்வி ஞானத்தினை வைத்துக் கொண்டு மீனா வானத்திற்கும், பூமிக்கும் குதித்துக் கொண்டிருக்கின்றா. ஆனால், இதனை வைத்தியசாலையில் வைத்துச் சொன்னது கணேஷன். அதனைக் கேட்டது ஜனாம்மா. அதுவும் றைவரைக் கொண்டு வந்து பொய்ச் சாட்சி சொல்ல வைத்த கணேஷனை நம்பி இவ்வளவு காலமும் அம்முவின் குடும்பத்தினைக் கரைத்துக் கொட்டுகின்றார்கள்.
ஆனால், பிரகாஷ் சொல்வதனை ஏன் என்று கூடக் கேட்காமல் தாங்கள் கேட்டதுதான் சரி என்று நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், பிரகாஷ் மீண்டும் உயிர் தப்பி வந்தார் என்பதனை தங்களுக்கு அறிவிக்கப்பட்ட முறைப்பாட்டினை விசாரிக்க வந்த பொலிஸ் குழாமை கணேஷன் ஏன் தடுக்க வேண்டும்? என்று ஒருவரும் சிந்திப்பதாக இல்லை.
கணேஷன், அமுதாவின் புருஷன், மீனாவின் அண்ணன், சொன்னதினை வைத்து நம்பும் இவர்கள், சரி பொலிஸும் ஒருபக்கம் ஆராயட்டுமே என்று பொலிஸினை விடாமல், இவர்கள் ஏன் முட்டுக்கட்டை போடுகின்றார்கள்? அதுவும் இந்த விஷயம் என்றதும் கணேஷன் ஏன் அவசரப் படுகின்றான் என்று கூட ஒரு கணம் ஒருவரும் சிந்திப்பதாவும் இல்லையே!
அம்முவிற்கு நடந்த அவமரியாதையினையிட்டு கவலையுடன் நின்று கெண்டிருந்த தமிழுக்கு பிரகாஷ் ஆறுதல் சொன்னதினைக் கேட்டுக் கொண்டிருந்தா ஜனாம்மா. கோபத்தில் பிரகாஷின் மேலே உக்கிரமாகப் பாய்ந்தா ஜனாம்மா. மீனாவோ, ஜனாம்மாவிற்கும், மகன் பிரகாஷிற்குமான சம்பாஷனைக்குள் குறுக்கிட்டா. அதனைக் கடிந்து கொண்டார் பிரகாஷ்.
தனது மகள் அம்முவை ஒரு ஓடுகாலி என்ற புனைபெயரில் ஜனாம்மா சொல்லிப் பிரகாஷுடன் கதைக்கையிலே, அம்மு ஒரு ஓடுகாலி என்றால், அவளை அனுப்பி வைத்த என்னை என்னென்று கூப்பிடுவது என்ற பிரகாஷின் கேள்வியானது எல்லோரையும் உறைந்து போக வைத்தது.
பிராகாஷின் வார்த்தையானது ஜனாம்மாவின் மனத்தில் ஒரு ஓரமாக குமுறிக் கொண்டிருக்கையிலே, முத்தம்மா தனது பக்கமாக உள்ள நியாயத்தினை ஜனாம்மாவிற்கு முன் சமர்ப்பித்தா. அதைவிட தமிழோ முத்தம்மாவிற்கு ஒருபடி மேலே போய் ஜனாம்மாவின் சிந்தனையினை மேலும் தூண்டி விட்டாள்.
இதற்குக் கிடைத்த வெகுமானம்தான் ஜனாம்மா அம்முவைச் சந்திப்பதற்கு தமிழை ஒழுங்கு படுத்தும்படி கூறியது. இதன் பிரகாரம் தமிழ் தனது அம்மா அம்முவையும், ஜனாம்மாவையும் சந்திப்பதற்கு ஒரு நாளையும், நேரத்தினையும் ஒதுக்கி, கோவிலிலே சந்திக்க வைத்தா. இதற்குச் சாட்சியாக பிரகாஷும், தமிழும் போனார்கள். ஜனாம்மாவோ அம்முவின் குற்றங்களையெல்லாம் மன்னித்து தனது மகளை ஏற்றுக் கொண்டாலும், ஜனாம்மாவிற்கு செல்வரத்தினம் செய்த துரோகமானது அவவின் மனதினுள் றணமாகக் கொதித்துக் கொண்டிருந்தது.
அம்முவையும், அவவின் பிள்ளைகளையும், ஜனாம்மா மீண்டும் ஏற்றுக் கொண்டதனை அங்கு சென்றவர்கள் அனைவரும் காதாரக் கேட்டு சந்தோஷத்தில் மிதக்க நினைக்கையிலே, ஜனாம்மா ஒரு கட்டுப் பாட்டினையும் முன் வைத்தா. அதுதான், அம்முவும், பிள்ளைகளும் மட்டும் வரலாம். ஆனால், அந்தத் துரோகி செல்வரத்தினம் மட்டும் வரவே கூடாது என்பதுதான். அவனைத் தலைமுழுகி விடு என்று தெட்டத் தெளிவாக ஜனாம்மா அம்முவிடம் கூறினா.
20 வருடங்களாக அம்மு அவளது புருஷனுடன் வாழ்ந்தவ, செல்வரத்தினத்தைக் காதலித்துக் கல்யாணமும் செய்தவ, தனது புருஷனைத் தலை முழுகுவதென்றால், அம்மு செல்வரத்தினத்துடன் வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தம்தான் என்ன? என்ற கேள்வியானது அம்முவிடம் இருந்து ஜனாம்மாவிடம் அம்முவால் கேட்கப்பட்டது. அந்த இடத்திலேயே ஜனாம்மா அம்முவை விட்டு விட்டச் சென்று விட்டா.
ஏற்றுக் கொள்ளுவா அம்மா என்று ஓடோடி வந்த அம்மு ஏமாற்றத்துடன் அடங்கிப் போய் அதே கோவிலிலே விழுந்தளுதா. அம்மாவா? கணவனா? எவர் வேண்டும் என்றால், எதைத்தான் அம்முவால் தேர்ந்தெடுக்க முடியும். வாழ்வைக் கொடுத்தவன் கணவன். வாழுவதற்கு உயிரைக் கொடுத்தது தாய். அதுமட்டுமல்லாமல், கணவன் கொடுத்த வாழ்க்கையினை தாயால் கொடுக்க முடியாது.
அதேபோலத்தான், தாய் கொடுத்து உயிரினை ஒரு புருஷனால் கொடுக்க முடியாது. எனவே, தாயையும் பிரிக்க முடியாது, கணவனைப் பிரிக்கவும் முடியாது. ஒருவர் ஒருவரை விட்டுப் பிரிக்கவும் முடியாது. ஒருவர் இல்லாமல் மற்றவரை ஒதுக்கவும் முடியாது.
தமிழுக்கு ஜனாம்மாவால் கொடுக்கப்பட்ட taskகானது எல்லாரையும் ஒன்றாக்கி ஒரே குடும்பமாக வாழ வைக்க வேண்டும் என்பதுதான். அதற்குத்தானே தமிழும் பாடுபடுகின்றாள். ஆனால், அம்முவின் விஷயத்தில் ஜனாம்மா பிடிவாதமாக இருப்பதற்குக் காரணம் கணேஷன் அந்த குறிப்பிட்ட நேரத்தில் அடித்துக் கூறிய பொய்தான். அந்தப் பொய்தான் இப்பவும் உண்மையாக இருக்கின்றது.
பொய்யிற்கு உண்மையினை விட வலிமை அதிகம். அப்படியாக அனைவரிடமும் பொய்யானது ஆதிக்கம் பெற்று விட்டால், அதனை உடைத்தெறிந்துவிடுதற்கு உண்மையினைக் கூறினாலும் அது எவரிடமும் எடுபடாது. அதுதான் இப்போது ஜனாம்மாவின் வீட்டினிலே நடைபெறுகின்றது.
அம்முவை தொழிற்சாலையில் வேலைக்கு சேர்த்தது, சேர்க்க வைத்ததும் பிரகாஷ்தான். அந்தப் பழியானது தமிழின் தலையில் விடிந்தது. இதனால், தமிழின் மாமி மீனாவானது தமிழின் மேலே தனது அதிகாரத்தினைப் பாவிக்கத் தொடங்கி விட்டா. அதுவும், தான் சொல்லவதைக் கேட்பதென்றால் இங்கு தனது குடும்பத்தில் தமிழ் தமது வாழ்க்கையினை தக்க வைக்கலாம். அப்படி இல்லாவிட்டால் தமிழ் தனது குடும்பத்தில் சீவிக்க முடியாது. இங்கும் அடுத்த கட்டுப்பாடனது, அம்மு இங்கு வருவாவாக இருக்குமானால் தமிழ் இருக்க முடியாது. அம்முவா அல்லது தமிழின் வாழ்க்கையா? எது வேண்டும் என்று தமிழை முடிவெடுக்கும் படி மீனா கூறிவிட்டுச் சென்றா.
தமிழ் மாமியாரின் வார்த்தைகளால் மனத்தினால் வெந்து போனாள். அறையினுள் தமிழ் அழுது கொண்டிருக்கையிலே சிபீ, தமிழைக் கண்டதும் ஆறாதலாக அருகிலிருந்து பேசத் தொடங்கினான். தமிழுக்கு ஆறுதலாக இருந்தாலும், சிபீ தான் உனக்காகத்தான் இருக்கின்றேன், ஏனென்றால், நீ எனது மனைவி என்று ஒரு வார்த்தை சிபீ சொல்ல மாட்டானா என்ற ஏக்கமானது தமிழின் முகத்தினில் பிரதிபலித்ததை உணரக்கூடியதாக இருந்தது.
எமது Reel Review channel லினைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்? உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!