posted 4th June 2026
Promotional Offer - உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement
இந்த Serial Review & Analysisஇனி்ல் நீங்கள் பார்க்கப்போவது;
- உயிராக இருக்குமா தமிழின் சத்தியம்
- தமிழின் வாழ்க்கையினை சீர்படுத்தாமல், தங்கையின் கல்யாணத்திற்குத் தடம் போடுவது என்னவாகும்
- கணேஷனின் ஆட்டத்தினை அடக்குவதற்கு தமிழ் பரிமளத்தினை அம்பலமாக்க வேண்டும்
- உண்மையினை விளங்க மாட்டேன் என்று நிற்கும் ஜனாம்மா அம்முவின் வாக்கு பலம் பெறுமா?
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Varisu - வாரிசு - 03.06.2026
தமிழின் நிலைமை இறுகிக் கொண்டே போகின்றது. ஒவ்வோரு முறையும் சிபீ தமிழை விபரீதமாகும் முன்பு உண்மையினை ஜனாம்மாவிடம் சொல்லிவிடு என்று கூறி தமிழ் போகையிலே ஜனாம்மா ஏதோ ஒன்றினைச் சொல்லி தமிழினை வேறு திசைக்கு மாற்றி விடுவதனால் இது வரைக்கும் தமிழால் உண்மையினை போட்டு உடைக்க முடியவில்லை.
செல்வரத்தினத்தினைக் கண்ட கணேஷனோ அவரின் பின்னாலேயே ஓடிச் சென்று அவரை இடைநடிவில் மடக்கினான். உண்மையாக, செல்வரத்தினத்தினத்திற்கு கணேஷனை அடையாளம் காண முடியவில்லை. ஆனால், செல்வரத்தினம் தனக்கு நடந்த விபத்தின் விபரத்தினை கணேஷனிடம் சொல்லி விட்டார்.
இந்த விஷயம் கணேஷனைப் பொறுத்தவரை ஒரு லொட்டறி கிடைத்தது போன்றதாகத் தெரிகின்றது. செல்வரத்தினத்திடம் பொய்யினைச் சொல்லி அவரை குறிஞ்சியின் வீட்டிற்கு கூட்டிச் சென்று அவனிடம் கையளித்து விட்டான் கணேஷன். கணேஷனோ துரோகத்திற்கு மேலே துரோகம், தமிழின் குடும்பத்திற்குச் செய்து கொண்டே இருக்கின்றான். இதனைத் தமிழ் அறிந்தால், ஆலந்தூர் பரிமளத்தின் கதையினை தமிழ் அவிழ்க்க வேண்டி வரலாம். இதனால் கணேஷன் இழக்கப் போவதோ மிகவும் பெரிது. அது மட்டுமல்லாமல், கணேஷனின் வாழ்க்கையும் நரகமாகலாம்.
இதற்கிடையில் தேனுவினதும், வினோத்தினதும் தம்பி அரவிந்தினுடைய கல்யாண ஒப்பந்தம் வெளிவந்துள்ளது. இந்த காதல் கதையானது ஜனாம்மாவின் காதினில் தற்செயலாக விழுந்ததினால், அந்தக் கல்யாணத்தினை நடத்துவதற்காக ஜனாம்மா, தமிழின் அம்மாவாக இப்போது உள்ள ஹசீனாவைக் கூப்பிட்டு, தட்டு மாற்றும்படி ஒழுங்குகளைச் செய்யத் தொடங்கி விட்டா.
ஆனால், தேனுவிற்கு கல்யாணத்தில் ஆசை இருந்தாலும், இப்போதைக்கு இந்தக் கல்யாணம வேண்டாம் என்று நினைப்பதில் நியாயம் இருப்பதாகத் தோன்றுகின்றது. யார் இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று சில கல்யாணங்கள் நடைபெறும் இந்நாட்களலே, தேனுவைப் போல ஒரு பெண் அமைவது என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது. இதனால்தான், பூமியும் ஒழுங்காகச் சுற்றுகின்றதாக்கும்.
தேனுவின் காதாலானது எந்த விதத்திலும் திசை மாறிவிடக்கூடாது என்பதில் தமிழ் மிகவும் கவனமாக இருக்கின்றாள். ஆனால், பிரபு, வர்ஷின் கல்யாண விஷயத்திலே பிரபுவை மிகவும் உறுதியாக அனைவரும் நம்புகின்றார்கள். அந்தளவிற்கு பிரபுவின் நடிப்பு அப்படி.
பிரபுவின் வருகையிலே உள்ள சந்தேகத்தினை, நான் பிரபு இந்த சிரியலிலே அறிமுகமாகையிலேயே எதிர்வு கூறிவிட்டேன். அது மட்டுமல்லாமல், பிரபு, வர்ஷியை கல்யாணம் பண்ணுவதற்குத் தூண்டில் போடுவான் என்பதனையும் ஏலவே கூறியிருந்தேன். ஆனால், சிபீக்கோ வர்ஷியின் கல்யாணத்தில், பிரபுவின் மேலே நல்ல அபிப்பராயம் இல்லவேயி்ல்லை.
வர்ஷியின் முன்னைய காதலன் தேர்வும் சொதப்பியது. வர்ஷியின் அந்த முதல் தெரிவினிலே அவள் மிகவும் கஷ்டப்பட்டாள். அது மட்டுமல்லாமல் இப்போது பிரவுவைத் தெரிவு செய்துள்ளாள். இதுவும் நல்லதாக இல்லையே! எப்போதுதான் பிரபுவைப்பற்றிய உண்மையானது வெளிவரப்போகின்றதோ! இதனை, சிபீதான் கண்டு பிடித்திருக்க வேண்டும்.
பிரபுவைப் பற்றி ஆரம்பத்திலே சிபீ விசாரிக்கும் போது எல்லோரும், ஒரே மாதிரியான பதில்களைத்தான் சொன்னார்கள். அதுவும், கல்யாணத்தினைப் பற்றி ஒன்றும் சிபீ கேட்காமல், பிரபுவைப் பற்றிக் கேட்கையிலே, அவர்கள் சொன்ன பதிலானது, நீங்கள் நம்பிப் பெண்ணைக் கொடுக்கலாம் என்று. இதிலிருந்து சிபீக்கு அந்தப் பொயின்றானது விளங்கவில்லையே!
கடைத்தெருவில் தமிழ் அவளது தகப்பனைக் கண்டாள். அவரும் தமிழைக் கண்டு ஓடுவது போல சும்மா ஆறுதலாகப் போனவர், மிகவும் விரைவாகப் போனது என்பது, ஏதோ செல்வரத்தினம் தமிழைக் கண்டு விட்டு பயத்தில் ஓடி ஒழிவது போன்று தோன்றிற்று.
தமிழும் தனக்குத் தெரிந்த பொலிஸிடம் சொல்லி வைத்துள்ளாள் தனது தகப்பனைக் கண்டுபிடித்துத் தரும்படி. ஆனால், ஒருதரம், அந்தப் பொலிஸ் தமிழிடம் அவளது தகப்பனைக் கண்டு கூறியதன் பின்பு ஒருவிதமான முயற்சிகளும் தமிழ் செய்ததாகத் தெரியவில்லை.
அதுமட்டுமல்லாமல், தமிழ், தகப்பனைக் கண்டேன் என்று வீட்டில் வந்து தனது குடும்பத்திடம் கூறிய போதும் வீட்டில் உள்ளவர்கள் ஒருவரும் செல்வரத்தினத்தைத் தேடுவதற்கான எந்தவிதமான முயற்சிகளும் எடுத்ததாக இல்லை. ஆனால், செல்வரத்தினம் கணேஷனின் கண்ணில் மட்டும்தான் தென்படுகின்றார். இதனைப் பார்க்கும் போது, கணேஷன் பிரச்சினைகளை உருவாக்குவதற்காக எடுக்கும் முயற்சிகளின் ஒரு வீதத்தினைத் தமிழோ அல்லது தமிழின் வீட்டாரோ எடுக்கவில்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகின்றது.
தேனுவின் கல்யாண விஷயத்தில், தமிழ் கொடுத்த வாக்கானது தமிழால் காப்பாற்றப்படுமா? இதைத்தான் சிபீயும் தமிழிடம் கேட்டான். இந்த வார்த்தைகளை தமிழ், தேனுவை சமாதானப் படுத்துவதற்காகச் சொல்ல முடியாது. இவை தமிழ் சத்தியம் பண்ணி சொன்ன வார்த்தைகள்.
தமிழ் தனது பெற்றாரை தேனுவின் கல்யாணத்திலே அறிமுகப் படுத்துவாளா?
எமது Reel Review channel லினைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்? உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!