posted 17th June 2026
Promotional Offer - உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement
இந்த Review & Analysisனில் கேட்கப்போவது;
- காவேரியுடனான சம்பாஷனையைத் தவிர்த்துக் கொள்ளும் விஜய். காரணம் கேட்டும் விளங்கம் கூறாத விஜய்
- அம்முவால் இரகசியத்தினை யாழினி முன்னிலையில் மறைக்க முடியாமல் வெளிப்படுத்தினாள்
- சிறு குழந்தையாக இருந்தாலும் யாழினி காவேரியின் நலனுக்காக வாயடக்கத் துணிந்தவளாய்
- தாயைக் கட்டி அணைத்தவளாய் அம்மு. காவேரியைத் தட்டி எழுப்பிய அம்முவின் ஸ்பரிசம்
Mahanadhi - மகாநதி - 16.06.2026
மகாநதி தமிழ் சீரியலிலே தாயைக் காணும் சேய் அடக்கமுடியாத அன்பினை சொல்லவும் முடியாமல், அடக்கவும் இயலாமல் நண்பர்களுடன் பகிரும் காட்சியானது நெஞ்சினை நெகிழ வைக்கின்றது. யாழினியின் பிடிவாதம் அம்முவிற்கு அம்மா யார் என்பதனை பிடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் வெளியாகியது. உறவுகள் அனைவருக்கும் வெளியாகியது இவ்வளவு நாட்களாக மறைக்கப்பட்ட உண்மை.
யாழினியின் பிடிவாதத்தினால் அம்முவிற்குத் தெரிந்த உண்மையானது அப்பாவிற்குக் கொடுத்த சத்தியத்தினைக் காப்பாற்ற முடியாமல் தெரிவிக்கப்பட்டது. யாழினிக்கோ பொறுமை இல்லை. அம்மு சொன்னதினை உடனடியாக காவேரிச் சித்தியிடம் சொல்வதற்காக விரைகையிலே, அம்மு தடுத்தும் யாழினி கேட்காததினால், யாழினிக்குக் காயம் ஏற்பட்டது. ஒருவாறாக யாழினியைச் சமாதானம் பண்ணி காவேரி அம்மாவிற்கு தான் சொன்ன உண்மையினைச் சொன்னால், சில சமயம் அம்மாவிற்கு உயிராபத்து வரலாம் என்று கூறி யாழினியைத் தடுத்துவிட்டாள் அம்மு.
சிநேகிதமான அம்முவும், யாழினியும், காவேரியின் முன்னால் களவெடுத்தவர்கள் போல் விளி பிதுங்கி நின்றனர். பாடசாலையிலே தனது தாயைக் கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அம்மு. அதனைத் தனது தகப்பன் விஜேயிடம் பகிர்ந்தும் கொண்டாள். என்னதான் விஜேயினால் அம்முவிற்கு உண்மையான தாய் ஸ்தானத்தினை கொடுப்பதற்கு செய்ய முடியும்? காவேரிதான் விஜேயுடனான கல்யாணத்திற்கு விருப்பம் சொல்லவில்லையே!
அம்மு அவளது வீட்டினிலே காவேரியுடன் கதைக்காமல் இருந்ததனையிட்டு மிகவும் துக்கத்தில் காவேரி அன்றைய நாளினைக் கடக்கையிலே, விஜேய் காவேரியை உதாசீனம் செய்து விட்டுப் போனதினை காவேரியால் தாங்க முடியவில்லை. இதனை, அம்மு, தனது அப்பாவிடமும் கேட்டுவிட்டாள். அதற்கான விளக்கத்தினை விஜேய் அம்முவிடம், அவள் விளங்கிக் கொள்ளும் விதத்தில் சொல்லி சமாதானப் படுத்தினான். ஆனால், காவேரிக்கு ஏன் இந்த மனப் புழுக்கம், அடிக்கடி தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது? இனம் தெரியாத மனப்பாரம், அவளது இதயத்தினை ரணமாக்கிக் கொண்டிருக்கின்றது. அதனை விட விஜேயின் மௌனம் காவேரியின் மனதின் பாரத்தினை வெகுவாக்குகின்றது.
அம்முவும், விஜேயும் பாடசாலையினை விட்டு வீட்டிற்கு வந்ததும், அம்மு இங்கு அவள் வீட்டினிலே வெறுமையினை உணர்ந்தாள். அதுதான் தாயின் பாசத்தினை வீட்டினிலே காணாததுதான் அவளுக்கு அந்த வெறுமையானதாக் தெரிகின்றது. அடம்பிடித்தாள் தனது அப்பாவிடம், தான் அம்மாவிடம் போக வேண்டுமென்று. எவ்வளவோ விளக்கங்களை அம்முவிற்குச் சொல்லிக் கழைத்தவனாய் அம்முவைக் கூட்டிக் கொண்டு சாரதாவின் வீட்டிற்குப் புறப்பட்டான்.
விஜேயும், அம்முவும் காவேரியின் வீட்டினை அடையும் முன்பு, யாழினி வீட்டிலுள்ளவர்களிடம் காவேரிதான் அம்முவின் அம்மா என்ற விஷயத்தினை வெளிப்படுத்தி விட்டாள்.
அம்முவைக் கண்டதும் காவேரி ஓடி வந்து கட்டி அணைத்தாள், முத்தம் கொடுத்தாள், உண்மையினைத் தெரிந்தவள் போல. ஆனால், இந்த ஓடிவந்த ஆர்வம், கட்டியணைப்பு எல்லாம் காவேரிக்குத் தெரியாத ஒரு இனம்புரியாத ஈர்ப்பு என்றுதான் உணர முடிகின்றது.
தனது சொந்தங்கள்தான் இவையென்று ஒவ்வொருவரையும் பார்த்து பூரிப்படைந்தாள் அம்மு. தனது அம்மாவைத் தெரிந்து கொண்டுதான் கட்டியணைத்தாள், முத்தமும் கொடுத்தாள். பாவம், காவேரிக்குத்தான் இவையெல்லாம் ஏன்தான் என்று புரியாமல், விளங்காமல் அவளையும் அறியாமல் அவளின் தசை ஆடுகின்றது. அதே போலத்தான், அனைவருடனும் இருந்து மிகவும் சந்தோஷமாக சம்பாஷித்துக் கொண்டிருந்த விஜேய், காவேரியைக் கண்டதும் அந்த இடத்தினை விட்டு வெளியே போனது காவேரியக்கு சுறுக்கென்று இருந்தது.
காவேரியின் குணமோ எதையும் மனதினிலே வைத்துக் கொள்ளாமல் உடனுக்குடன் கேட்பதுதான். உடனே விஜேயிடம் வீட்டிற்கு வெளியே போய் கேட்டும் விட்டாள். ஆனால், விஜேய் சொன்ன பதிலானது காவேரியின் மனதினை மேலும் தாக்கியது, வேதனைப் படுத்தியது. தான் இப்படியாகக் கூறியது, காவேரியைத் தாக்கும் என்று விஜேய் சொல்லி இருப்பானா? உண்மையான காதலுக்கிடையில் ஒருவர் ஒருவரின் மனத்தினை நோகடிக்க வாய்ப்பேயில்லை.
விஜேய் காவேரியை நோகப்படுத்தி கதைத்ததினை நெவீன் நியாயப்படுத்தியதினை சரியென்று கூறமுடியாது. காவேரிக்கு மறந்து போன உறவினை மீண்டும் உண்மையானதாக்க வேண்டும் என்றால், அதற்குக் காவேரி தனது சாதாரண நிலைக்கு வரவேண்டும். ஆனால், காவேரிக்குத்தான் உண்மையான வாழ்க்கைதான் மறந்து போன நிலையினில் விஜேயின் இப்படியான நடவடிக்கையானது மேலும் மேலும் காயப்படுத்துவதுடன், விஜேயுக்கு மேலே வெறுப்பினைத்தான் கூட்டுமே ஒழிய காதலினை உயிர்ப்பிக்கவுள்ள சந்தர்ப்பமானது அருகிக் கொண்டு போகலாம்.
இன்றைய சீரியலானது, மிகவும் உணர்வு பூர்வமானதுமல்லாமல், தாய்ப் பாசத்திற்காக ஏங்கும் ஒரு பிள்ளையின் ஏக்கத்தினைப் பிரதிபலிக்கின்றாக உள்ளது. தாயின் மேல் பட்ட பிள்ளையின் ஸ்பரிசமானது உண்மையான உணர்வுகளைத் தூண்டுமா? மறக்கப்பட்ட, நினைவுகள் இழக்கப்பட்ட வாழ்க்கைக்கு உயிரூட்டம் தருமா? இதற்கான வாய்ப்புகளானது மிகவும் விரைவில் வெளிவருவதற்கான சந்தர்ப்பங்கள் சாதகமாவதனையும் அவையெல்லாம் மிகவும் அண்மையில் தெரிவதனை உணர முடிக்கின்றது என்பதனை நினைக்கத் தோன்றுகின்றது.
எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!