posted 15th May 2026
இந்த Review & Analysisனில் கேட்கப்போவது;
- அம்முவின் தனிப் பயணம், பெரியவர்களின் மேலான நம்பிக்கையின்மையினால், அவளே தனது அம்மாவைத் தேடி வெளிக்கிட்டாள்.
- அம்மாவை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று பொடி நடையில், காலுக்கு செருப்பும் இல்லாமல் புறப்பட்டாள், அம்மு.
- காவேரி தனது வாழ்க்கைக்கு ஒரு துணையினை அவசர அவசரமாகத் தெரிந்தெடுத்தாள். பெண் பார்க்க வரும்படியும் அவளே பணித்தாள்.
- ஆடத்தொடங்கிய சாரதாவை அடக்கி வைத்தாள் கங்கா. ஆனால், என்னதான் செய்யலாம் என்று ஒருவிதமான துருப்புமின்றி திண்டாடும் நிலையினில் சாரதாவின் குடும்பம்.
- காவேரியின் மேலான காதலானது, அவன் காவேரியுடன் வாழ்ந்த அந்த குறுகிய காலக் காவியமானது உண்மையானது என்று நம்பிக்கையில் காத்திருக்கும் விஜய்.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Mahanadhi - மகாநதி - 13.05.2026
அம்மு தனது அம்மாவைத் தேடி அவளுக்கே தெரியாமலும், ஒருவருக்கும் சொல்லாமலும் பறப்பட்டாள். ஆனால், அவளாகப் போகவில்லை. மாறாக அவளின் தாய்ப்பாசம் அவளைக் கூட்டிச் சென்றது.
என்றாலும், அவளால் ஒரு கட்டத்திற்கு மேலே போக முடியவில்லை. பாதியில் தவித்து நின்றாள். அவளுக்கோ தனது வீட்டு விலாசமும் தெரியவில்லை, காவேரி மிஸ்ஸினது இடமும் சொல்லத் தெரியவில்லை. அதிஷ்டவசமாக அம்மு நெவீனின் கண்ணில் அகப்பட்டாள். இல்லாவிடில், அம்முவின் நிலைமை? இதுதான் தாயின் பாசத்தின் அணைக்கட்டு என்பது.
அம்மு வெளியில் தானாகப் புறப்பட்டதற்குக் காரணம், வீட்டின் பெரியவர்கள்தான் என்று ஒருபுறம் சிந்திக்கத் தோன்றுகின்றது. உண்மைதான். அதற்காகத்தான் எமது பெரியவர்கள் தாங்கள் ஒரு கதையினை அலசிக் கதைக்கும் போது சிறு பிள்ளைகளை அங்கே போய் விளையாடும்படி கடத்தி விடுவார்கள்.
ஏனென்றால், பெரியவர்களின் அரசியல் சிறுபிள்ளைகளுக்கு விளங்காது. அவர்களின் உலகமே மிகவும் சிறிது.
இப்படியாக அம்முவின் தாயைத் தேடி தனியே புறப்பட்டது நன்மையானதா? அல்லது தீமையானதா?, அம்முவைப் பொறுத்தமட்டில்.
தானாக குழந்தை காவேரி எடுத்த முடிவு பிழையாக இருக்கலாம். அதுமட்டுமல்லாமல், அவளுக்கு தனிமையாக வீட்டை விட்டு வெளியில் சென்றதன் விளைவுகளை உணராமல் இருக்கும் வயது அது. அவளுக்கு தனது அம்மா வேண்டும். அவ்வளவுதான். அம்மாவை யாருக்கும் அவளால் விட்டுக் கொடுக்க முடியாது என்பதுதான் அம்முவின் கணக்கு.
ஆனால், ஒரு குழந்தைக்கு, தனக்கு ஒன்று வேண்டுமென்றால், அதற்காக, அதன் உரிமையை, தனது சொத்தினை, அக் குழந்தை விட்டு விடலாம் என்கிறீர்களா?
அம்முவைக் கண்டதும் கட்டியணைத்துக் கொண்டு வீட்டிற்குக் கொண்டு வந்தான் விஜய். துடித்துப் போயிருந்த விஜேயின் குடும்பம் வாரி அணைத்துக் கொண்டார்கள் அம்முவை. அத்துடன், குழந்தைக்கு கட்டளையும் அன்பாகப் போடப்பட்டது.
சாரதாவின் குடும்பமும் அம்முவின் செய்தியினை நெவீன் மூலமாக அறிந்ததும் ஆடிப் போய் விட்டார்கள். பின்பு அவர்கள் ஒரு வகையில் ஆறுதலும் அடைந்தார்கள். இந்த விஷயத்தில் காவேரியின் மனமும் வேதனையினை அனுபவித்தது. ஆனால், அவளின் புது உறவினை விட்டுக் கொடுக்கக் காவேரி தயாராக இல்லை.
காவேரியினைப் பெண்பார்க்க வருவார்கள் என்று சொன்னதினைக் கேட்ட சாரதா கோபம் அடைந்தா. கொதித்துப் போனா. காவேரியின் சகோதரங்கள், நெவீன் அனைவரும் வியப்பில் விழி பிதுங்கி நின்றார்கள். காவேரி எடுத்து இந்த திடுதிப்பான முடிவிற்குக் காரணம், காவேரியின் வீட்டாரும், றாதா சித்தியும் காவேரியை விஜயுக்கு கல்யாணம் பண்ணும்படி கேட்டு நிர்ப்பந்தித்ததுதான்.
இதற்கான அடுத்த காரணம், காவேரிக்கு அவளது வாழ்க்கையின் உண்மையினை அனைவரும் சொல்லாமல் மறைத்து இருப்பதும்தான். இதற்கான காரணம், விஜேயிடம் காவேரிக்கு வைத்தியம் செய்த டாக்டரின் கூற்றுத்தான். இதனை விஜேயின் பக்கமிருந்து பார்த்தால், காவேரியின் உடல், உள ஆரோக்கியம்தான் எல்லாருக்கும் தேவையானதும், முக்கியமானதும் கூட.
அதுமட்டுமல்லாமல், காவேரிக்கு தானாகவே அவளின் பழைய வாழ்க்கையானது ஞாபகத்திற்கு வருவதற்கான எல்லாவிதமான முயற்சிகளையும் அவர்கள் செய்தாலும் காவேரிக்கோ ஒரு துளியும் பழைய ஞாபகங்கள் வருவதாகத் தெரியவில்லை.
வில்லர்களாக இருந்த பசுபதியின் குடும்ப ஆட்களையே காணவில்லை. அதுமட்டமல்லாமல், றாகாவ் செத்தும் போய்விட்டான். றாகினி இடைக்கிடை உளறித்தள்ளி பழிவாங்கும் characterஆக இருந்தும் அவளையும் காணவில்லை. பசு ஒழித்துக் கொண்டது. இப்படி இருக்கையிலே யார்தான் விஜேய், சாரதாவின் குடும்பங்களை விட இந்த உண்மையினைச் சொல்லுவார்கள்?
- காவேரியின் நண்பர்கள்?
- காவேரியின் டாக்டர்?
- ஏதாவது இறுக்கமான சூழ்நிலையில் சாரதா? அல்லது றாதா?
- அன்புவும் கொஞ்சம் வில்லன்தான். ஆனால், அவனும் திருந்தி விட்டானே!
எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!