posted 16th June 2026
Promotional Offer - உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Mahanadhi - மகாநதி - 12.06.2026
காவேரிதான் அம்மா என்று தெரிந்த முதல் நாள் அம்மு பாடசாலைக்கு மிகவும் சந்தோஷமாகவும், சுறுசுறுப்பாகவும் அப்பா விஜேயுடன் போவதனை விளங்கிக் கொள்ளலாம். இந்த உணர்வானது எல்லோருக்கும் வாழ்க்கையின் ஒரு காலப் பகுதியில் வந்திருக்க வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக யார் யாரெல்லாம் அம்மா அல்லது அப்பாவைக் காணாமல் அன்று முதன் முறையாகக் காணுகையில் இந்த உணர்வானது விளித்தெழும்பி இருக்கும்.
அம்முவின் தவிப்பு தனது அப்பாவுடனும், அம்மாவுடனும் ஒன்றாக பாடசாலையில் நிற்பதனை தான் காண வேண்டும் என்பதானது அவளின் ஒரு சிறிய ஆசையாக இருந்தது. ஆனால், காவேரி இன்று அம்மு பாடசாலைக்கு வருவா என்று ஊகித்துக் கொண்டுதான் வந்தாளொழிய, நிட்சயமாகத் தெரியாது.
அதனை அறிந்து கொள்வதற்காகவே காவேரி, காலையிலேயே விஜேயிடம் அம்முவின் சுகத்தினை விசாரித்தும், விஜேய் முன்னைய நாள் காவேரியிடம் எரிந்து விழுந்தது காவேரி்க்கு மிகவும் மனதினில் தாக்கத்தினை ஏற்படுத்தி இருந்தது.
ஒரு நாளும் இல்லாமல் ஏன் இந்த முறை தான் அம்முவைப் பாரத்துவிட்டு வந்த பின்பு ஏதோ மாதிரி தனது மனம் அடித்துக் கொண்டிருக்கின்றதே என்று மீண்டும் மீண்டும் தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள் காவேரி. பதிலோ அவளுக்கு அவளிடமும் இல்லை, சாரதாவிடமும் இல்லை. தூக்கத்தினை அன்றிரவு தொலைத்தவளாய்த்தான் காவேரி பாடசாலைக்கு யாழினியைக் கூட்டிக் கொண்டு வந்தாள்.
அம்முவை விஜேய் வழமையான நேரத்திற்குத்தான் பாடசாலைக்குக் கூட்டி வந்திருந்தாலும் அந்த நேரத்திற்கு காவேரி வராததனையிட்டு அம்முவும், விஜேயும் கவலை கொண்டு பாடசாலையின் வெளியே காத்துக் கொண்டு நின்றனர்.
வகுப்பினில், தனது அம்மா காவேரியைக் கண்டதும் அம்முவோ மிகவும் ஆச்சரியமாகவும், ஒருவிதமான தாய்ப் பாசத்துடனும் காவேரியை உற்று நோக்கிய வண்ணமாக இருந்தாள். ஆனால், அம்முவின் இந்த நடவடிக்கையினை காவேரி கவனிக்கவில்லை. தனது கொப்பியினைக் காவேரியிடம் காட்டும் போதும், அம்முவின் ஏக்கத்தினைக் காணக் கூடியதாக இருந்தது.
ஆனால் என்ன, அம்முவால் காவேரி மிஸ்ஸை அம்மா என்று கூப்பிட முடியாத சூழலுக்கு விஜேய் ஒரு கட்டினைப் போட்டுவிட்டானே. அதாவது, முன்னிரவு அம்முவைக் கூட்டிக் கொண்டு வெளியில் விஜய் போகையிலே, அதாவது, அம்முவின் moodடினை ஒருநிலைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் விஜேய் இருந்ததினால், விஜேய் அந்த சமயத்திலே அம்முவிடம் கூறியது காவேரிதான் உன்னுடைய அம்மா என்று சொல்ல வேண்டாம் என்று. இதனால், அம்மு தனது ஆசைகளை அடக்கிய வண்ணமாக வகுப்பில் இருந்தாள்.
ஆனால், அம்மு சும்மா இருப்பாளா? தனது நெருங்கிய நண்பர்களுக்கு அம்மு சொல்லி விட்டாள், தனது அம்மா உயிருடன்தான் இருக்கின்றா என்றும், ஆனால், இப்போது அது யார் என்றும், எங்கு இருக்கின்றா என்றும் தான் சொல்ல மாட்டேன் என்றும், தன்னிடம் நீங்கள் கேட்கக் கூடாதென்றும் கூறிவிட்டாள். ஆனால், இந்த விஷயம் யாழினிக்கு அதிர்ச்சியினைக் கொடுத்தது. இனி யாழினியால், அங்கு சாரதா வீட்டில் அவர்களின் தலை உருளப் போகின்றதே!
எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!