posted 13th May 2026
இந்த Review & Analysisனில் கேட்கப்போவது;
- காதலும், பாசமும் காவேரியின் விருப்பிற்கு எதிராக நிற்கின்றது.
- கல்யாணத்திற்கு அதுவும் காவேரிக்கு விருப்பமில்லாமல் இருக்கும் விஜேயுடனான மண ஒப்பந்தத்திற்கு ஒத்துக் கொள்ளாமல் காவேரி எடுத்த திடுதிப்பென்ற முடிவு.
- பெரியவர்களின் பேச்சு வார்த்தைகளை உன்னிப்பாக அவதானித்த அம்மு தனக்கான ஒரு முடிவினை விரைவாக எடுக்க வேண்டிய கட்டாயத்தில்.
- பதிலை எதிர்பார்த்த அம்முவிற்கு, அம்முவின் கேள்விகளே அவளுக்குப் பதில்களாக வந்து நின்றன.
- தாய்க்கு தனது பிள்ளைதான் அம்மு என்பதும் தெரியாத மன நிலையினில் காவேரி, உண்மையினைத் தெரிந்து கொள்ளாமல் தன் தாய்க்காக மனதினுள் போராடும் அம்மு.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Mahanadhi - மகாநதி - 12.05.2026
காவேரியைத் தொடர்ச்சியாக விஜேயைக் கல்யாணம் பண்ணும்படி கட்டாயப் படுத்தலானது எல்லாத் திசைகளிலுமிருந்து காவேரியை நோக்கி வரத் தொடங்கிவிட்டது.
இதனால், காவேரியின் மனமானது எந்தத் திசையினில் பயணம் செய்கின்றது என்பதனை அவள் matrimonyயில் தேடிய வாழ்க்கைத் துணையிலிருந்து தெரிகின்றது.
ஆனால், விஜேயின் ஊகமோ காவேரி அப்படியெல்லாம் போகக் கூடியவள் இல்லை என்பதுதான். ஏனென்றால், காவேரி அப்படியெல்லாம் மனத்தினை அங்கலாய்க்க மாட்டாள் என்பது விஜேய் காவேரியுடன் வாழ்ந்த வாழ்க்கை அவனுக்கு இயம்புகின்றது. அத்துடன், காவேரியின் மேலுள்ள அன்பும், அவள் மீதான நம்பிக்கையும்தான் முக்கிய காரணமாக இருக்கின்றது.
விஜேயின் பக்கமாக இருந்து கவனித்தால், எவ்வளவோ பிரச்சினைகளைத் தாண்டி வாழ்ந்தவர்கள் விஜேயும், காவேரியும். அதுமட்டுமல்லாமல், வாழ்க்கை இருவருக்கும் படிப்பித்த பாடம் இருக்கே அதன் மகத்துவமானது, இப்போது விஜேய் நல்ல மனநிலையினில் இருப்பதினால் அவனால் ஊகிக்க முடிகின்றது. ஆனால், பழைய நினைவுகளை இழந்தவளாய் இருக்கும் காவேரிக்குத்தான், அவளது கடந்த கால வாழ்க்கையான மறந்திருக்கையிலே, அவளின் பிறப்பில் உள்ள குணங்கள் மாறிவிடுமா என்ன?
அதே கோவிலில் வைத்துத்தான் கல்யாணிப்பாட்டி காவேரியைத் திட்டித் தள்ளினா. விஜேயை விட்டு விலகும்படியும் கூறினா. அதே தெய்வத்தின் முன்னால் வைத்துத்தான் காவேரி புதிய உறவுடன் வாழ்க்கையினைத் தொடங்குவதாக அத்திவாரத்தினைப் போடுகின்றா. இதெல்லாவற்றிற்கும் அந்தத் தெய்வம்தானே சாட்சி. அந்த கண்கண்ட தெய்வமானது இப்படியா காவேரியின் பாதையினை அங்கீகரிக்கும்?
தான் எடுத்த முடிவினை காவேரி வீட்டில் அனைவருக்கும் கூறி விட்டா. ஆனால், தாத்தாவும், றாதாவும் கதைத்துக் கொண்டிருந்ததினைக் கேட்ட அம்மு சும்மா இருப்பாளா? ஏங்கி்ப் போயிருந்த அம்மு தனக்கு உரிமையான அவளது தாயை அதாவது காவேரியை விட்டு விடுவாளா? சாரதா பாட்டி வீட்டிற்குப் போய் தன் பக்கமான நியாயத்தினைக் காவேரி அம்மாவிடம் கேட்க மாட்டாள் என்றா நினைக்கத் தோன்றும்?
வேதனையில் வாடினாள் அம்மு. அவளின் உண்மையான மனநிலையினை உணராமல் தனது கல்யாணத்திற்கு தனிப்பட்ட விதத்தில் முடிவெடுக்கும் காவேரி.
காவேரியின் மனநிலையினை கருத்தில் கொண்டு ஒருவரும் உண்மையினை காவேரியிடம் சொல்வதாக இல்லை. அது விஜேயின் பக்கமோ சரி, காவேரியின் பக்கமோ சரி மிகவும் நிதானமாகவே இந்த விஷயத்தினைக் கையாளுகின்றார்கள்.
றாதா சித்தி தனக்கு மனதினில் பட்டதினை நேரடியாக காவேரியிடம் கேட்கின்றா, விஜேயைக் கல்யாணம் பண்ணும்படியாக. ஆனால், இதில் எந்த விதமான கலக்கமும் இல்லாமல் விஜய் இருப்பது, விஜேய், காவேரியின் மேலே வைத்த அன்பா அல்லது கல்யாணம் பண்ணுவது அவரவரின் விருப்பம் என்ற வேதாந்தமா?
ஆனால், காவேரி தனது உரிமைச் சொத்து என்றும், தனது மகள் அம்முவின் தாய் என்பதனையுமா விஜேயால் விட்டுக் கொடுக்க முடியும்?
காவேரியோ தனக்கு விரும்பமான ஒருவனைத் தானே தெரிவு செய்கின்றாள். அவனைக் கோவிலிலே சந்தித்து தனது காதலைச் சொல்கின்றாள். அவனும் அதனை ஏற்றுக் கொள்கின்றான். ஆனால், இத்துடன் காவேரி விடவில்லை உடனே மறுநாளே தனது வீட்டிற்கு பெண் கேட்டு வரும்படியாகவும் கேட்டுக் கொண்டு அதனை உறுதிப்படுத்துகின்றாள்.
காவேரியின் பிரச்சினையோ விஜயுக்கு தான் இரண்டாம் தாரம் என்ற ஒரு வெறுப்புணர்வுதான். ஆனால், அவளுக்குத் தெரியாது தான்தான் விஜேயுக்கு முதல்தாரமும், இரண்டாம் தாரமும் என்று.
இந்த ஒரு முக்கியமான உண்மையினை யார்தான் உடைப்பார்கள்? அதற்கான சந்தர்ப்பம் ஒரு உச்சக்கட்டத்திலேதான் வெளிப்படும். அதாவது, கல்யாணம் எனும் போது, அதுவும், அம்முவின் முன்னால் எதுவுமே பதில் சொல்ல முடியாமல் போகும் போது இருக்கலாம்.
இதில், விஜேயின் காதலின் சக்தியா? அல்லது அம்முவின் தாய் பாசமா? அல்லது இருண்டு சக்திகளும் சேர்ந்தா காவேரியின் பிடிவாதத்தினை உடைத்தெறியும்.
இதில் ஒன்றுடன் ஒன்றை குறைவாக எடை போட்டிட முடியாது. இரண்டு சக்திகளும் மிகவும் சக்தி வாய்ந்தவை. ஆனால், இங்கு அம்முவினதும், விஜயினதும் சக்திகளும் ஒன்றாகச் சேர்ந்தல்லவா இருக்கின்றன.
விஜேயின் காதலானது தடக்கி விழுந்தாலும், அம்முவின் தாய் – பிள்ளைப் பாசமானது எந்தவொரு சக்தியாலும் அசைத்துப் பார்கவே முடியாது.
எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!