posted 7th June 2026
Promotional Offer - உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement
இந்த Review & Analysisனில் கேட்கப்போவது;
- பாடசாலையில் அம்மு காவேரியைக் கண்டதும், அல்லது பின்னால் போகையிலே விஜேயுக்குத் தெரியாமல் அம்மா என்று கூப்பிடுவா
- றாதா உண்மையினை அம்முவிடம் கூறிவிட்டதாக வீட்டினிலே தனது அப்பா, தாத்தாவிடம் சொல்லுவா
- சாரதா வீட்டினிலே யாழினி அம்முவின் அம்மாவாக இருப்பது காவேரி சித்தி
- இதனால் காவேரியின் உடல் நிலை என்னவாக மாறப் போகின்றது.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Mahanadhi - மகாநதி - 05.06.2026
அம்மு தனது மனதினில் யாழினியால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டும் என்பதற்காக பாடசாலை போகாமல் வீட்டில் நிற்க விரும்பினாளா?
தனது அப்பாவிடம் கேட்டு விடையினை அறிய முடியாது என்றும், படத்தினைப் பார்க்க முனைகையிலே அப்பாவுக்கு தன்மேலே ஏற்பட்ட கோபமானது தன்னை வருத்தியதனையும் உணர்ந்தவளாய், பாடசாலைக்கு லீவு போட்டாளா? அல்லது, அம்முவிற்கு யாழினி சொன்னது அவளின் மனதினை தாயின் நினைவினை உருவாக்கி வாட்டியதா?
எது எந்தக் காரணமாக இருந்தாலும், சிறிய பிள்ளை அம்மு, அதுவும் பிறந்ததிலிருந்து தனது தாயினைக் காணாதவளும், தாயின் அணைப்பு இல்லாதவளாக இத்தனை வருடங்களாக வளர்ந்தவளாயும், தாயின் பாசத்தினைப் பெறாதவளும், இப்போது, தனது தாயும், காவேரி மிஸ்ஸும் ஒரே மாதிரியாக இருக்கின்றார்கள் என்பதனை யாழினி நம்பாததும், அந்தக் கேள்விக்கு விடை தெரியாமல் கலங்கிப் போன நிலையினில் அம்மு இன்று இருக்கின்றாள்.
விஜேயுக்கு அம்முவிற்கு ஒரு சாட்டு வந்து விட்டது இன்றைக்கு பாடசாலைக்குப் போகக் கூடாதென்று, அதுவும் என்ன என்று தெரியாமல் குழம்பிய நிலையில் விஜேய். ஆனால், அம்மு பாடசாலைக்கும் போகாமல் கட் அடிச்சது, விஜேயுக்கு புதுமையாகவும் இருந்துமல்லாமல், காவேரி மிஸ்ஸைப் பார்க்காமல் அம்மு வீட்டில் முடங்க மாட்டாளே என்ற சந்தேகத்திற்கு விடை தெரியாமல் வீட்டினை விட்டு யாழினியைக் கூட்டிக் கொண்டு சாரதா அத்தையின் வீட்டிற்குப் புறப்பட்டான்.
அங்கு போனாலும், அம்மு காய்ச்சல் என்று கூறியதும், உடம்பெல்லாம் வலிக்கின்றது என்று கூறியதும், விஜேயுக்கு மிகவும் அசௌகரியமாக இருந்தது. சாரதாவின் வீட்டிலோ கேள்விக்கு மேல் கேள்வி இன்றைக்கென்று சாரதா கேட்கையிலே, விஜேயினால் மறைக்க முடியவில்லை. விஜேயும், அம்மு தன்னிடம் என்ன சொன்னாவோ அதனையே சாரதா வீட்டிலும் சொல்கையிலே, காவேரிக்கு மிகவும் அதனைக் கேட்டதும் கஷ்டமாக இருந்ததனை அனைவரும் உற்று நோக்கினார்கள்.
அங்கு அம்மு வாடி இருக்கின்றாள். இங்கு அம்முவிற்கு சுகவீனம் என்றதைக் கேட்கையிலே காவேரியும் துடிதுடித்துப் போனாள். பதட்டப்பட்டாள் காவேரி. அவளின் மனதினிலே ஒருவிதமான பதட்டம் உருவாகியது. தானாடாமல் ஆடும் தசை என்பது இதுதானா?
அம்மு தாத்தாவிடம் தனது ஆதங்கத்தினையும், மனதினில் உள்ள கேள்வியினையும் கேட்டாள். தாத்தாவால் உண்மையினைச் சொல்ல முடியவில்லை. காரணம், காவேரியின் சுகாதார நிலைமையினைக் கருத்தினில் கொண்டு அதனைக் கூற முடியவும் இயலவில்லை. ஆனால், அம்முவிற்கோ தாத்தாவிடம் இருந்து உண்மையானதும், அவள் எதிர் பார்த்த விடையானது கிடைக்காத ஏமாற்றத்தினால், அந்தச் சிறிய உள்ளம் கவலையுடன் அடுத்தவரான றாதா பாட்டியிடம் போனாள் தன் கேள்விக்கு விடையினைத் தெரிந்து கொள்வதற்கு.
றாதா பாட்டி மழுப்புவதனை அம்மு உணர்ந்தவளாய், றாதா பாட்டியை அம்மு விடை அவளுக்குத் தெரியும் மட்டும் றாதா பாட்டியை விட்டபாடாக இல்லை. ஏனென்றால், றாதா பாட்டியினை விட்டால் வீட்டில் அம்மு தனது விடையினை அறிவதற்கு வேறு ஒருவரும் இல்லை என்று உணர்ந்தவளாய், மேலும் மேலும் இடைஞ்சலை ஏற்படுத்தினாள். அம்முவின் இரங்கலான வார்த்தைகள் றாதாவின் மனதினை நெகிழ வைத்தது. இறுதியில் றாதா உண்மையினைச் சொன்னா.
உன்னைப் பெத்தவள் காவேரி மிஸ்தான். காவேரி மிஸ்ஸும், உனது அம்மாவும் ஒருவர்தான். வேறுவேறு ஆட்கள் இல்லை என்று கூறியதனைக் கேட்டதும் ஆச்சரியத்தில், வியந்து போய் நின்றாள் அம்மு.
அப்பவும் அம்மு றாதாவை விட்ட பாடாக இல்லை. மேலும் துருவித் துருவிக் கேட்டாள், தனது மனதினில் எழுந்துள்ள மற்ற கேள்விகளுக்கு விடைகளைக் கேட்டுக் கொண்டாள்.
விஜேயும் காவேரியின் வீட்டிலிருந்து கிளம்பினான். காவேரியின் வீட்டில் யாழினியின் மனதில் உள்ள குழப்பமானது என்னென்று வெளிவரப் போகின்றது?
யாழினி நேராகவே காவேரியிடம் சொல்லுவாளா? அதுமட்டுமல்லாமல், அம்மு காவேரியின் போட்டோ ஒன்றுனை தனது school bagகினுள் ஒழித்து வைத்தாளே! இதனை அம்மு பாடசாலையில் காவேரியிடம் காட்டுவாளா? காவேரியிடம் றாதா சித்தி சொன்னதினை காவேரியிடம் சொல்லுவாளா, அம்மு?
காவேரியை, மிஸ் என்று கூப்பிடாமல், நேராகவே அம்மா என்று அம்மு கூப்பிடுவாளா? அதன் பின்பு காவேரியிடம் தனது அம்மா என்று கூறப்பட்டிருக்கும் அந்த போட்டோவைக் காட்டுவாளா அம்மு?
இதைக் கேட்டதும் காவேரிக்கு என்ன நடக்கும்? ஏதாவது, வில்லங்கள் ஏற்படுமா?
எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!