Salangai Oli - சலங்கை ஒலி - 06 - 07 .02 . 2026

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இன்றைய Serial Review & Analysis ஆனது 06ஆம், 07ஆம் திகதிகளை உள்ளடக்கிய Serial Review & Analysisகளை உள்ளடக்கியுள்ளது.

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!

எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.

ஷாரதாவிற்கோ என்ன செய்வதென்றே தெரியாத ஒரு அப்பாவியாக முழுமையாக கிறிஷ்ணபிரஷாத்தினை நம்பி வாழ்ந்தவ, குழந்தைகளுடன் நடு றோட்டினிலே விடப்பட்டு தவிக்கவிடப்பட்ட பாவப்பட்ட ஜென்மமாக இங்கு இருக்கும் ஷாரதாவால் என்னென்று தன் மகன் ககனைக் காப்பாற்ற முடியும்?

ஒடோடிச் சென்றா தனது கணவனாம் கிறிஷ்ணபிரஷாத்தின் உதவியுடன் ககனைக் காப்பாற்றுவதற்காக. ஆனால், அது நடந்ததா? ஒருவிதமான விளக்கத்தினை கொண்டிராமல் வாழும் இப்போதைய மனைவிதான் மீரா. மீராவை நன்றாக brain wash பண்ணி ஷாரதாவிற்கும், பூமிக்கும், ககனுக்கும் எதிராக ஆயத்தப்படுத்தி விட்டாள் அபூர்வா.

Salangai Oli - சலங்கை ஒலி - 06 - 07 .02 . 2026

ககனைக் காப்பாற்ற தன் பணத்தினை எடுக்கும் அளவிற்கு அபூர்வா ஒருவிதமான உரிமையும் பூமிக்கு அபூர்வால் கொடுக்கப்படவில்லை. அதற்கு ஒத்தோதுகின்றாள் அபூர்வாவின் சித்தி, மருதாணி.

அபூர்வாவின் உரு ஏறியவளாய் மீரா பூமியை அறையினுள் அடைத்து வைத்தா. மீராவிற்கோ ஆகக் குறைந்த அளவிற்கான ஆரம்ப பொது அறிவு கூட இல்லாமல் ஜீவிக்கும் அடுத்த அப்பிராணி மீரா.
எல்லாவற்றையும் நம்பும் மீரா. தெய்வமாக அபூர்வாவை நினைக்கும் மீரா, என்றுதான் சிந்திக்கப் போகின்றாவோ தெரியாது. தன் புருஷன் கிறிஷ்ணபிரஷாத் சொன்னாலும் எதையுமே நம்பாமல், அபூர்வா சொல்லிவிட்டால் அது வேத வாக்காக நம்பித் தொலைக்கும் மீரா.

கிறிஷ்ணபிரஷாத் ACP நயனிக்குச் சொன்ன வார்த்தை வலித்ததா? அல்லது சிந்திக் வைத்ததா? என்னென்று ACP நயனிக்கு அபூர்வாவின் மேலே ஒரு ஐமிச்சம் வந்தது? அதாவது, ஷரத்சந்திராவின் கொலை முயற்சியில் அபூர்வாவிற்கும் சம்பந்தம் இருக்கின்றதா என்ற சந்தேகம்தான்.

கிறிஷ்ணபிரஷாத், தான்தான் ஷரத்சந்திராவைக் கொலை செய்ய முயற்சி செய்தனான் என்று, தன்னில் குற்றத்தினைச் சுமத்தி ககனை விடுவிக்க பார்த்த ககனின் அப்பா கிறிஷ்ணபிரஷாத்தினை எதிர்த்து நின்ற ககனின் நேர்மையினை கணக்கில் வைத்த ACP நயனிக்கு இந்த சந்தேகக் கேள்வியானது உதயமாகியது?

கண்டு பிடிப்பது எல்லாம் எங்களுடைய வேலை என்று ACP நயனி உரத்து கிறிஷ்ணபிரஷாத்திடம் சொன்னாவோ, அடுத்த நிமிடம், அந்த கணத்தினை, நடந்த சம்பவத்தினை அலசி ஆராய்ந்தது போலத் தோன்றுகின்றது.

சந்தோஷத்தில் மிதந்த அபூர்வாவிற்கும், மருதாணிக்கும் ஆப்பு வைத்த சிறையிலிருந்து ஜாமீனில் வெளியில் வந்த ககனின் தொலைபேசி அழைப்பு. திமிரில் வசனம் கதைத்த அபூர்வாவின் மூச்சு களையிழந்து போயிற்று. தனது styleலில் உன்னை வைத்துச் செய்வேன் என்று கூறிய ககனின் நினைவுகள் என்னவாக இருக்கும் என்று தலையினைப் பிய்த்துக் கொண்டிருக்கம் அபூர்வாவிற்கு ஆறுதல் சொல்வார் யார்?

சட்டத்தினைக் கையில் ககன் எடுத்ததுதான் பிழை என்று ACP நயனியால் தண்டிக்கப்பட்டான் ககன். தான் செய்தது பிழை என்ற ககனுக்கும் தெரியும். அதைத்தான் ACP நயனி மேல் கோபமாக இருந்த பூமியிடம் ககன் விளங்கப்படுத்திச் சொன்னான். இதற்குக் காரணம் ACP நயனிக்கு ககனின் மேலே ஒரு நம்பிக்கை இருந்ததினால்தான். ஏனென்றால், ககனுக்கு எதிராக பொய்சாட்சி killer றாஜரத்தினம் சொல்லி இருக்கின்றான் என்று ACP நயனிக்குச் சந்தேகம் வந்திருக்கின்றது என்பதனால்தான்.

அதுமட்டுமல்லாமல், எப்படி ககனின் மேலே நம்பிக்கை கொண்டு ககனைத் திறந்து விட்ட ACP நயனிக்கு நம்பிக்கைப் பாத்திரமாக இருந்த பொலிஸ் அதிகாரி றாஜேந்தரை விட, வேறொரு நம்பிக்கைக்குரிய ஒரு பொலிஸ் அதிகாரி ACP நயனிக்கு இருக்க மாட்டார்களா? அந்த அதிகாரி மூலம் ACP நயனி, தான் இல்லாத சமயம் அபூர்வா பொலிஸ் நிலையத்திற்கு வந்ததையும், ககனை வெருட்டியதையும், killer றாஜரத்தினம் தனது ஆள் என்று சொன்னதையும் ACP நயனிக்குச் சொல்லி இருக்க மாட்டாரா? சொல்லியிருக்க வாய்ப்புகள் உண்டு. இதனை அடிப்படையாக வைத்துத்தான் ACP நயனி பூமியைத் தனிப்பட்ட விஷயமாக சந்திக்க வேண்டும், அதுவும் பிரத்தியேக இடத்தில், வேறு ஒருவரும் இல்லாத இடத்தில் என்பதானது எமக்குள்ள சந்தேகத்தினை கொஞ்சமாகத் தெளிவாகின்றதல்லவா!

இப்போது ACP நயனி அபூர்வாவிற்கு வலை வீசியுள்ளா, அதற்கு பூமியை துப்பறியவும், ஆதாரங்களைத் திரட்டவும் பயன் படுத்துகின்றா. இதற்கு ACP நயனி, பூமியுடன் போட்ட ஒப்பந்தமானது, கோட்டினில், killer றாஜரத்தினம், ககனை மீண்டும் கை காட்டினால், ககனால் தப்பிக்க முடியாது என்பதனால், பூமியின் உதவியினை நாடினா ACP நயனி. ஆனால், பூமி இதனை நிதானமாகக் கையாள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டாள்.

இனி அபூர்வாவின் அச்சாணியானது பூமியின் கையிலே கொடுக்கப்பட்டுள்ளது. எப்போது அபூர்வாவின் ஆணியை இழுத்தெடுப்பாள் பூமி என்று தெரியாது. ஆனால், எடுப்பாள் பூமி.

நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.

மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)