posted 26th January 2026
இன்றைய Serial Review & Analysis ஆனது 22ஆம், 23ஆம் திகதிகளை உள்ளடக்கிய Serial Review & Analysisகளை உள்ளடக்கியுள்ளது.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- அபூர்வா DNA Test உயர் அதிகாரியின் குடும்பத்தினை றௌடிகளை வைத்து வெறுட்டி DNA Test முடிவினை நெகட்டிவ் ஆக்கினாள்.
- கோட்டிற்கு வந்து நின்ற ஷாரதாவின் குடும்பம் பூமியுடன் நிற்கையிலே கிறிஷ்ணபிரஷாத் அங்கு வந்தவராய் இந்த மாற்றத்தினைச் சொன்னார்.
- ககன் அதனை உடனே மாற்ற வைத்தான். இது எவருக்கும் தெரியாது. அபூர்வாவின் சட்டத்தரணி உட்பட.
- இறுதியான செய்தி தெரியாத அபூர்வா திமிரில் கோட்டினுள் நுழைந்தாள். சட்டத்தரணியும் விளாசித் தள்ளினார், அபூர்வாவின் மீதான நம்பிக்கையில்.
- நீதிபதி, பூமி, ஷரத்சந்திராவின் மகள் என்று அறிவித்தார். ஆனால், பூமியை நிரந்தரமாக கேசினில் இருந்து விடுவிக்கவில்லை. அதற்காக பொலிஸ் விஷேட officer, நயனி நியமிக்கப்பட்டா.
Salangai Oli - சலங்கை ஒலி - 22, 23 .01 . 2026
- விசாரணை ஆரம்பிக்கப்பட்டதோ ஷரத்சந்திரா வீட்டினிலே, அதுவும், Cheryயிடம் இருந்து.
- வம்சியின் முன்னாள் காதலி தீபா வம்சியின் வீட்டிற்கே வந்தாள். கேட்ட பணத்தினை விட கொஞ்சம் அதிகமாகக் கேட்டாள். ஆனால், வம்சிக்கும், தீபாவிற்குமான தொடர்பில் சந்தேகம் கொண்டனர் அவனின் பெற்றோர். ஆனால், இந்துவுக்கோ அப்படி ஐமிச்சம் இல்லை வம்சியின் மேலே.
- பூமி தனது சொந்த வீட்டிற்குப் போவாளா? அல்லது இனி வாழப் போகும் வீட்டிற்குப் போவாளா? அவளுக்கோ இரண்டு வீடுகளும் தேவைதானே. இரண்டு வீடுகளிலும் அவளுக்கு உரிமை உண்டு. அவள் எந்த வீட்டினுள்ளும் எப்பவும் நுழையலாம். ஒருவரும் தடுக்க முடியாது.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
ககன் பூமியின் மேலே ஒரு கோபமும் இல்லை, ஆனால், கொஞ்சம் அவள் மேலே மனவருத்தம். அதைத்தான் கோட்டிற்குப் போகும் முன்பு அறையினுள் வைத்து தனது அம்மா ஷாரதாவிடம் சொன்னானே. அதாவது, எங்கே, தான், இப்படியே வாழ்க்கை பூராவும் நோவுடன் இருந்திடுவேனோ என்று பயமாக இருக்கின்றது என்பதுதான்.
அப்போ ககன் பூமியை விடமாட்டான். அவனின் அம்மா பூமிக்குக் கூறியது, ககன் உன்னில் கோபமாக இருந்தால் உன்னை இங்கு வீட்டிற்குக் கூட்டி வந்திருக்க மாட்டானே. அவனுக்கு உனது அப்பா ஷரத்சந்திரா கொடுத்த கசப்பான வாழ்கையினால் அவரின் மேலேதான் கோபமே ஒழிய உன்னில் இல்லை என்பதுதான்.
கோட்டில் தீர்ப்பு வந்தது, ஷரத்சந்திராதான் பூமியின் அப்பா என்பது DNA Reportடிலிருந்து நிரூபணமாகிவிட்டது. ஆனாலோ, பூமியைப் பூரணமாக கேசிலிருந்து விடுவிக்க முடியாது. ஏனென்றால், கொலை முயற்சியானது யாரினால் என்பது நிரூபணமாகி விடும் மட்டும். அதற்காக, பொலீஸ் திணைக்களம் விஷேட பொலிஸ் அதிகாரியாக நயனி நியமிக்கப்பட்டா.
விசாரணையானது நயனியிடம் பொறுப்புக் கொடுக்கப்பட்டுள்ளது என்று தீபாவால், வம்சியிடம் சொல்லப்பட்டது. இதனால், வம்சி பூமி விடுதலை செய்யப்பட்ட அதிர்ச்சியினை விட, நயனி அதிகாரியாக வந்த செய்தி அவனை நிலைகுலைய வைத்தது.
வாழ்க்கையில் செய்யும் நன்மை, தீமை எல்லாம் தொடர்ந்து அவரவர் வாழ்க்கையிலே வரும்.
மீரா, கிறிஷ்ணபிரஷாத்தின் மனைவி, தனது அண்ணன் ஷரத்சந்திராவின் கொலை முயற்சியில் பூமிதான் குற்றவாளி என்று சொல்லப்பட்டதினால், அவளைத் திட்டித் தள்ளினா. சாபமும் இட்டா. ஆனால், இதற்கு பூமியிடமிருந்து பதில் ஒன்றும் இல்லை. அமைதியாக நிற்கதியாக நின்றாள்.
கோட்டினாலே பூமியினதும், ஷரத்சந்திராவினதும் sampleகள் DNA Testற்கிற்காக அனுப்பும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அபூர்வா நினைக்கு முன்பு, உஷாரானாள் பூமி. அபூர்வாவோ, DNA Test உயர் அதிகாரி ஜெயவர்தனைச் சந்தித்தாள். அனுதாபமாகவும், அக்கறையோடும் நடித்தாள். ஆனாலும், நேரடியாக அந்த சோதனையின் முடிவினை அபூர்வாவிக்கு அவர் சொல்லவில்லை. கோபமடைந்தாள் அபூர்வா. அடியாட்களை அனுப்பினாள். கொலை மிரட்டலை விடவைத்தாள். நடத்தி முடித்த சந்தோஷத்தின் மிகுதியால் கோட்டிற்கு வீறுநடை போட்டு வந்தவ, அடங்கி ஒடுங்கிப் போகும் சூழ்நிலை காத்திருந்தது.
பூமிக்கு ஷரத்சந்திரா அப்பாவாக இருக்கக் கூடாதென்று என்று நினைக்கும் ககன், ஏன் அந்த DNA Test உயர் அதிகாரியினைக் காப்பாற்றி சரியான resultடினைக் கொடுக்க வைத்தான்? அது ககன் பூமியில் மேல் வைத்த உண்மையான காதல்தான் என்பதும் புலனாகின்றது.
கோட்டின் முடிவும் வந்தது. பூமிக்கும் சந்தோஷம், ஷாரதாவுக்கும் சந்தோஷம். ஆனால், ககனுக்கோ அப்படி இல்லை. மீரா சித்தி, Chery பூமியின் படத்தினை வைத்து பார்த்துக் கொண்டிருந்ததினைக் கண்டதும் மிகவும் கோபம் கொண்டா. Cheryயின் கேள்விக்கு மீரா, Cheryயின் அம்மா, அப்படி, பூமி, அண்ணனின் உண்மையான மகள் என்றால், அவளை உனக்கு மணம் முடித்துத் தருவேன் என்றா. இதனைக் கேட்ட Chery மிகவும் சந்தோஷமாடைந்தான்.
ஆனால், Cheryக்குத் தெரியும், பூமியை அண்ணா ககனும், ககனைப் பூமியும் காதலிக்கின்றார்கள் என்று. அப்படி இருந்தால், Chery மனம் மாறி ககனுக்குத் துரோகம் செய்யத் துணிவானா? ஏனென்றால், பூமியை கோட்டினிலே சந்திக்கையில், Chery, பூமிக்குச் சொன்னது, இரண்டு விடயங்கள், ஒன்று, தான் பூமிக்கு ஒரு உண்மையான நண்பன், இரண்டு, தான் உனக்கு முறை மாமன் என்பது. அது உண்மைதான், ஆனால், ஏன் Chery அப்படி ஒரு அறிமுகத்தினை பூமிக்குக் கொடுக்க வேண்டும் என்பதில்தான் உதைக்கின்றது.
கோட்டு முடிந்ததும், ஷாரதா சொன்னது தனக்குத் தெரியும் பூமி உன்னால் ஒரு எறும்புக்கும் துன்பம் செய்ய முடியாதென்று. ஆனால், Cheryயின் அம்மா, மீரா சொன்னதிலோ எந்த விதமான நம்பிக்கையே இருக்கவில்லயே! இதுதான், ககன் கூறியது போல, ஷரத்சந்திராவுக்கும், ஷாரதாவுக்கும் உள்ள வித்தியாசம்.
இப்போது ஷரத்சந்திராவைத் தவிர மற்ற எல்லாருக்கும் தெரியும் பூமிதான் அவரின் உண்மையான மகள் என்பது. இனி பூமி ஷரத்சந்திராவை நெருங்குவதனை அபூர்வால் தடுக்க முடியாது. ஆனால், அபூர்வா தடுக்கலாம். ஏனென்றால், பூமியின் மேலுள்ள கொலை முயற்சிப் பழியானது இன்னமும் நிரூபிக்கப்படவில்லை என்பதனால்தான்.
இப்போது பூமி, தனது பெற்றார் வீடான ஷரத்சந்திராவின் வீட்டிற்குப் போவது அவ்வளவிற்கு புத்தியில்லை. ஏனென்றால், பூமி இப்பவும் ஜாமீனில் தான் வெளியில் வந்துள்ளா. எனவே, அபூர்வா ஏதாவது செய்து குற்றமொன்றிற்குள் பூமியை மாட்டி விட எத்தனிக்கக் கூடும்.
கோட்டின் முடிவிலே பூமிக்கு எந்த வீட்டிற்குப் போக வேண்டும் என்றிருக்கையிலே, பூமி, ஷாரதாவின் வீட்டிற்குத்தான் தான் போவேன் என்று சொன்னது ஷாரதாவிற்கும், ககனுக்கும் சந்தோஷம்தான். ஷாரதா தனது சந்தோஷத்தினை வெளியில் காட்டினா. ஆனால், ககன் உள்ளுக்குள்ளேயே வைத்திருக்கின்றான் போலும்.
DNA Test உயர் அதிகாரி ஜெயவர்தனைச் சந்தித்து நன்றி சொல்ல வந்த பூமிக்குக் கிடைத்த பதில், உங்கள் சந்தோஷத்திற்குக் காரணம் தான் அல்ல, ஆனால், ககன்தான் என்று கூறியது பூமியால் நம்ப முடியவில்லை. இதை அறிந்ததும் சந்தோஷத்தில் பூமி இருந்தாலும், அவளுக்கோ போய் என்னென்று நன்றியினை ககனுக்குச் சொல்லலாம் என்று சிந்தித்துக் கொண்டிருக்கையிலேதான், பூமியை கொல்லுவதற்காக வந்த ஊமையான அல்லது வாய் பேச முடியாமல் நடிக்கும் அடியாட்களிடம் இருந்து இந்தக் கொலைக் கேசிற்காக நியமிக்கப்பட்ட உயர் அதிகாரி நயனியினால் பூமி காப்பற்றப்பட்டாள்.
கேசின் உக்கிரகத்தினை ஆரம்பத்திலிருந்து தொடங்கினா, நயனி, ஷரத்சந்திராவின் வீட்டிலிருந்து அதுவும் Cheryயடமிருந்து.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!