posted 8th January 2026
இன்றைய Serial Review & Analysis ஆனது 01ஆம் திகதி தொடக்கம் 06ஆம் திகதி Serial Review & Analysisகளை உள்ளடக்கியுள்ளது.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
சலங்கை ஒலி - Salangai Oli - 01 - 06 .01 . 2026
Boomi (பூமி)யைத் தன் மகளாகத் தத்தெடுப்பதற்கு ஷரத்சந்திரா முடிவெடுத்திருக்கையில், Gaganனுக்கும், அபூர்வா, நட்சத்திரா, மருதாணிச் சித்திக்கும் இடையில் திண்டாடும் Boomi. கிறிஷ்ணபிரஷாத்தின் அறிவுரையின்படி Boomiக்கு, வாழ்க்கைத் துணையாக வரவுள்ள Gaganனும் வேண்டும், உண்மையான தந்தையாகவுள்ள ஷரத்சந்திராவும் வேண்டும். இருவரையும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லாமல் இருக்கும் Boomi.
தனது வாழ்க்கைக்கு இப்போது போட்டியாக உள்ளவள்தான் நட்சத்திரா. இவள் எல்லாப் பக்கத்தினாலும் Gaganஐ நெருங்க விடாமல் வழிகளை Boomiக்கு அடைத்துக் கொண்டிருக்கின்றாள். தாய் அபூர்வாவையே வெருட்டி தனது ஆசையினை நிறைவேற்றுவதற்காக குறுக்கு வழிகளை தனாகச் செய்வதுமல்லாமல், மருதாணிச் சித்தியையும் கைக்குள் போட்டுக் கொண்டு Gaganஐ நோக்கி fast ஆக நெருங்கிக் கொண்டிருக்கின்றாள். நட்சத்திராவின் பிடியானது, தான் தவறுதலாக கால் வழுக்கி விழுந்ததனை, மற்றவர்களின் கருத்துப்படி, அதாவது, Gaganனுக்காக தற்கொலை செய்ய முடிவெடுத்து விட்டாள் என்ற கதையினை உண்மையாக்கி விட்டாள்.
மாமன், கிறிஷ்ணபிரஷாத்தினதும், ஷாரதா அன்ரியினதும் திட்டங்களை, அதாவது, எப்படியாவது Boomiஐ Gaganக்கு கல்யாணம் பண்ணி வைத்து தங்களது மருமகளாக்க வேண்டும் என்பதுதனை விளங்கிக் கொள்ளாமல் இருக்கும் Boomiஐத் தூண்டி விட்டு, அவளாக Gaganஐ விரும்புகின்றேன் என்றும், அவரைத்தான் கல்யாணம் பண்ணப் போகின்றேன் என்றுமான முடிவினை எடுக்க வைப்பதற்காகன திட்டத்தினை சரியாக பயன்படுத்துகின்றார்கள் கிறிஷ்ணபிரஷாத்தும், ஷாரதாவும்.
இதனால், Boomiக்கு உதவி செய்ய முடியாமல் இருக்கின்றது என்று சொல்லாமல், உதவியும் செய்யாமல், அதெல்லாம் Boomiயாகவே எடுக்க வேண்டும் என்ற சிந்தனையை Boomiக்குத் தூண்டுவதே இவர்கள் இருவரினதும் முழு நேர வேலையாக இப்போது வைத்துள்ளார்கள் கிறிஷ்ணபிரஷாத்தும், ஷாரதாவும்.
ஷரத்சந்திரா தனது மூத்த மகளாக Boomiஐயும், தனக்கும், ஷோபச் சந்திராவுக்கும் பிறந்த குழந்தையானது இரண்டாவது குழந்தையாகவும் தான் வாழ்கையில் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், இங்கு அவர் முன்னால் நிற்கும் Boomiதான் தனது மூத்த பிள்ளை என்று இன்னமும் தெரியாத நிலையினில், அந்த பிள்ளையினைத் தேடி ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில், ஷரச்சந்திரா திண்டாடிக் கொண்டிருக்கின்றார்.
இதற்கிடையில், நட்சத்திரா, பொய் நஞ்சினை Boomi மூலம் பாலிலோ அல்லது காப்பியிலோ கலந்து கொடுத்து, அபூர்வாவை கொலை செய்ய நினைத்தாள் Boomiஎன்று, Boomiஐப் பொலிஸில் மாட்டி விட்டு இந்த தத்தெடுக்கும் நிகழ்ச்சியினை நிறுத்திவிடுவதற்கு தாயை விட மோசமான திட்டத்தினை தாய் அபூர்வாவிடமும், மருதாணிச் சித்தியிடமும் சொல்லுகையில், நட்சத்திரா ஏதோ உயரிய பட்டம் உலகத்திலே பெற்றுவிட்டாள் என்று சந்தோஷத்தில் மித்ந்த அபூர்பாவும், மருதாணிச் சித்தியும்.
இதற்கு உதவியாக மருதாணிச் சித்தியைக் கைக்குள் போட்டுக் கொண்டு அந்த போலி நஞ்சானது கலக்கப்பட்டு தலையிடி என்று சொன்ன அபூர்வாவிற்கு Boomiயால் காப்பி ஊற்றப்பட்டு கொடுக்கப்படுகின்றது.
மாமன், மாமியாரால் கோவிலில் இருந்து துரத்தப்பட்ட இந்துவைத் தேடி Cheryயும், Gaganனும் எல்லா இடங்களிலும் அலைந்து இறுதியாக இந்துவை Roudyயிடமிருந்து காப்பாற்றினார்கள். ஏன் இந்து இந்த இடத்திற்கு வந்தாள் என்பதுவும், அதற்குக் காரணம் யார் யாரென்றும் அறிந்து கொண்டனர், Cheryயும், Gaganனும்.
டாக்டர் வரவளைக்கப்பட்டார். அவரும் நட்சத்திரா சொன்னபடி வந்தார். அவருக்கு என்னதான் நட்சத்திராவால் சொல்லப்பட்டதோ அதையினையே அவர் சொல்லியும், செய்தும் காட்டினார் அவள கொடுக்கும் சொற்பக் காசிற்காக. இறுதியில் சொல்லியும் விட்டார். டாக்டரின் சொல்லினை வீட்டில் உள்ள அனைவரும் நம்பினார்கள். Boomiயின் மேல் பழியினைப் போட்டார்கள். ஆனால், கிறிஷ்னபிரஷாத்தும், ஷரத்சந்திராவும் இதனை நம்பவில்லை. பொலிஸும் அங்கு நட்சத்திராவால் வரவளைக்கப்பட்டார்கள், Boomiஐக் கைது செய்து கொண்டு போவதற்காக.
அந்த சமயம்தான் Boomiக்கு ஏதோ ஒரு அறிவொன்று தோன்றியது. தன் அப்பா ஷரத்சந்திராவிடம் ஒரு 20 நிமிடங்கள் பொலிஸிடம் அனுமதி வாங்கித் தரும்படி Boomi கேட்டுக் கொண்டாள். ஷரத்சந்திராவும் அதனைச் செய்தார். காரணம், காப்பியினைக் குடித்து அபூர்வா 20 நிமிடங்கள் வரைக்கும் நல்ல ஆரோக்கியமாகத்தான் இருந்தா என்றும், 20 நிமிடங்கள் மட்டும் டாக்டர் வரவில்லை என்றும் Boomi காரணங்களை ஆதாரங்களாக முன்வைத்தாள். இதனால், இந்த 20 நிமிடங்களில் மிகுதியாக உள்ள இந்த காப்பியினைத் தான் குடிக்கப் போகின்றேன் என்றும், அப்படி நான் இதில் நஞ்சினைக் கலந்திருந்தால் எனக்கு சாவு நடக்க வேண்டும் என்றும், ஜெயிலுக்குப் போவதனை விட இங்கு உயிரினை விடுவதே மேல் என்று உறுதியாகச் சொன்னாள் Boomi, விஷம் கலந்த காப்பியினைக் அனைவரின் முன்னாலே குடித்து விட்டாள்.
அனைவரும் வியந்தனர், ஆளாளுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் விளித்தனர். டாக்டர் எதிர்ப்பு மருந்து கொடுக்க வேண்டும் என்று கூறியும், Boomi 20வது நிமிடங்கள் பொறுக்கும் படியும், அதற்குப் பிறகு தனக்கு ஏதாவது நேர்ந்தால் தனக்கு வைத்தியம் பார்க்கும் படியும் இடைமறித்தாள்.
ஒன்றும் நடக்கவில்லை என்று தெரிந்ததும், Boomi மீண்டும் சத்தியம் பண்ணினாள், இந்தக் கோப்பியில் ஒரு விஷமும் கலக்கவில்லை என்று. அதற்கு டாக்டரும் ஒத்துக் கொண்டார். என்ன நடந்ததென்பதனை டாக்டரே ஒத்துக் கொண்டு உண்மையினைச் சொல்லி விட்டார்.
நட்சத்திராவின் இந்த அசிங்கமான வேலைக்கு ஷரத்சந்திராவை வெட்கப்பட வைத்த Inspector. நட்சத்திராவால் அனைவர் முன்னாலும் தலை குனிந்த ஷரத்சந்திரா.
அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும், சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதுதான் Boomiயின் நிலைப்பாடு. இதனால் ஒருவரும் கவலை கொள்ள வேண்டாம் என்று தனது தகப்பன் ஷரத்சந்திராவிடம் தன்னை அனைவரின் விருப்பத்துடனும் தத்தெடுங்கள் என்று கூறி, இந்த வைபவத்தினையே நிறுத்தி விட்டாள், Boomi.
Gaganனின் secretaryயாக இருக்கும் Boomi, தானே தத்தெடுக்கும் வைபவத்தினை நிற்பாட்டி விட்டேன் என்று மீண்டும் வேலைக்குச் சென்று விட்டாள் Boomi.
Corporate Companyயில் வேலை செய்வதென்றால் அதற்குரிய dressஇல்தான் இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு Boomi மிக்குரிய dressஇனையும் வாங்கி வந்தான் Gagan. அத்துடன் அதனை உடுத்திக் கொண்டு வரும்படியும் கூறினான்.
Boomiஐ அந்த dressஇல் கண்ட Gagan ஆச்சரியத்தில் ஆழ்ந்தான். அவளுக்கு, தனது officeற்குள்ளேயே நடைபழக்கி, Boomiஐ conferenceற்குக் கூட்டிச் சென்றான். அங்கு வந்த அனைவரும் Boomiஐப் பார்த்து வியந்தனர். அத்துடன், Gagan காட்டிய building layoutடினைக் காட்டிய நிலையில், Boomi தனது அபிப்பராயத்தினைச் சொன்னாள். இதனால் Gaganனும், மற்றவர்களும் வியந்ததுமல்லாமல், Gagan முதலாவதாக Boomiஐப் பாராட்டினான். ஆனால், அங்கு வந்தவர்களின் ஒருவன் ஆரம்பத்திலிருந்து Boomiயில் ஒரு கண்ணை வைத்தான். இதனை அவதானித்துக் கொண்டிருந்த Gagan அவனை அடித்து விட்டு அவனுடனான contractரினை ரத்துச் செய்ததுமல்லாமல், Boomiயின் கையினைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் விட்டான்.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!