
posted 22nd August 2021

வாழ்க்கையில் உயரத்தில் இருந்தேன் ஒரு நாள்
கீழே தள்ளினர் பூமியை முகர்ந்து வீழ்ந்தேன்
கிடந்த என்னை மிதித்துப் புதைத்தனர்
துளிர்விட்டு வளர்ந்தேன், அரும்பாய் எழுந்தேன்
அடியோடு என்னைக் கிள்ளிப் போட்டனர்
காற்றின் வேகமும் மணலின் விரைவும்
மீண்டும் மண்ணில் புதைந்தே போனேன்
பலகால்கள் என்னை மேலும் மிதித்தே அழுத்தின
புதைந்ததால் என்னவோ மூச்சு திணறிற்று
மீண்டும் தளிர்த்தேன், விண்ணையும் கண்டேன்
உலகை எட்டி மெதுவாயும் பார்த்தேன்
கூப்பிடு தொலைவில் யாரும் இல்லை
குளிர்ந்த வாடை மெதுவாய் முகர்ந்தேன்
சட்டென நினைவு சரளமாய் வந்தது
வளர்ந்தால் அதுவும் தெரிந்தால்
அவணியில் என் கதை முழுதாய் முற்றும்
கழுகள் என்னைச் சுற்றியே உள்ளன
கவரந்திட்டுச் செல்ல ஆவலாய் உள்ளன
கண்ணியுடன் கயவன் காத்திருக்கின்றானே
வெளியில் வருவதா? மீண்டும் புதைவதா?
புதைந்தது போல அமர்ந்து கிடப்பாதா?
பலப்பல வினாக்கள் ஒருகணம் வந்தன
பாதியில் அவையோ விடையிலா மறைந்தன
தனியாய் நின்றேன் தலை கால் தெரிந்தன
தனியாய் சிரிக்க ஆண்டவன் விடல்ல
ஆனால் பேயன் என்று பெரும் பெயர் சூட்டினர்
நானோ,
காலத்தை மறந்தேன், கனவினில் வாழ்ந்தேன்
உணர்வுகள் இல்லா நடைப்பிணமானேன்
உறவுகள், நட்புகள் எல்லாம் விலகியே சென்றன
எதிரிகள் நல்லாய் முளைத்தெனை மூடின
நானெப்போ சாவேன் என்றவர் நினைத்து
கங்கணம் கட்டி கனிவாய் நடித்தனர்
நெடுக காலையும் வாரி கவிட்டுத்தான் பார்த்தனர்
நானோ விழவில்லை இப்போ சாயவுமில்லை
என்னிரு வச்சிரத் தூண்கள் என்னைத் தாங்கியே பிடித்ததால்....
- நான்தான் -