
posted 26th February 2024
உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு

மீளப்பிறந்த வாழ்க்கை
உறவுகள் பிரிந்தன, உரிமைகள் கரைந்தன
ஊமையான உணர்வும், உடலும் உயிரற்றுப் போயின
வார்த்தைகள் கனத்தன வாதங்கள் மௌனமாகின
வழியின் காட்டிகள் வாய் பொத்தி நின்றன
மனங்கள் நொருங்கின முனகல்கள் வற்றின
எல்லாம் ஒன்றாய் என்னையும் வெறுத்தன
உதவிய கரங்கள் செயலற்றுப் போயின
உதவிட்ட கால்கள் தளர்ந்து சோர்ந்தன
நெஞ்சினுள் இதயம் வலியால் துடித்தது
உறவுகள் காணாக் குருடராய் நடித்தனர்
சகாப்தங்கள் பலவாய் வாழ்வினை அழித்தனர்
பலரும் கூடி ஏதேதோ செய்தனர்
அழிந்திடுவேனோ நானென சபதமொன்றெடுத்தேன்
ஜெகத்தில் ஜெயிக்க மீண்டும் பிறந்தேன்