
posted 28th March 2022
இலங்கை வாழ் தமிழர்களின் நிலைநோக்கி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் தாப்பாத்தி தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் ம. அருள்ராஜ் என்பவரால் வடிவமைக்கப்பட்ட கவிதை இது.
கடந்த காலம் கண்முன் தெரிவது போல் இன்றைய நிகழ்காலம்
கைக்குழந்தையாக உப்புக்காத்தில் உடல் காத்து உயிர்பிடித்து ஓடிவந்த துயரத்தின் துடிப்பை
கால் நூற்றாண்டுக்குப்பின் காலம் மீண்டும் கண்முன் காட்டுகிறது
இது நாங்கள் காண விரும்பாத காட்சி
ஏன் தொடர்கிறது இன்னும் இந்த துயரத்தின் நீட்சி
போரில் மரபோடு நின்றோம்
கொத்துக்கொத்தாய் மாண்டோம்
உழவும் தொழிலும் உலகிற்கு உரைத்தோம் இன்று
உணவிற்கு தவிக்கிறோம்
ஆண்டவன் தவறா?
ஆண்டவன் தவறா?
அன்னம் இன்றி அன்னை
பால் சுரக்கா மார்புகளை
சுவைத்து களைத்த குழந்தை
கத்தும் கடலின் பேரிரைச்சல் கரைவந்து சேரும்வரை குழந்தையை உசுப்பவே இல்லை பசி மயக்கம்
நெஞ்சம் கனத்து பதறுகிறது
கல்லும் கரைந்து உருகுகிறது
வரமாய் ஒரு மாற்றம் வர மறுக்கிறது
இடம் மாற்றம் மட்டும் சாபமாக வந்திறங்குகிறது
என்ன செய்வோம்
என்னதான் செய்தோம் கேள்விகளுக்கு பதில் யாரிடமும் இல்லை
அலைமேல் அங்கும் இங்கும் அலைக்கழிகிறோம்.
இலங்கையின் வடக்கில்தான் தமிழகம்
ஆனாலும் எமது நம்பிக்கை விடியல் எப்போதும் எழுவது தமிழகத்தில்தான்
சட்டங்கள் அன்னியன் ஆக்கும்
விதிகள் சட்ட விரோதக் குடியேரியாக்கும்
ஆனாலும் தமிழகம் ஆளும் அணையாச் சூரியன் அரவணைத்து காக்கும் என்ற நம்பிக்கையில்
உயிரைப்பணையம் வைத்து ஒரு வாழ்க்கைப்பயணம்
வயிற்றுப்பசியோடு
வருவது நமது தொப்புள்கொடிகள்.
முதலில் நம்பிக்கையாக ஒரு அரவணைப்பு
அதன் பிறகு கொடுங்கள் பசித்த வயிற்றுக்கு உபசரிப்பு.
ம. அருள்ராஜ்
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்இ தாப்பாத்தி, தூத்துக்குடி மாவட்டம்.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House