இது ஒரு உயிரின் உதயம்
இது ஒரு உயிரின் உதயம்

இது ஒரு உயிரின் உதயம்

அகிலத்தில் அவதரித்து ஆதாரமற்று
ஆகாயம் பூமியை ஆக்கியவனை நம்பியவனாய்
பாதியிலும் போகாது பாதிப்புகள் பலதைத்தாண்டி
பள்ளம் பிட்டியெல்லாம்
சமதரையெனக் கால் வைத்து
காலத்தை எண்ணாமல்
எண்ணியதைக் கணக்கெடாமல்
ஆரம்பமே இப்போதென
நினைவிலே நிஜமாக நீச்சலடித்து
நித்தியத்திற்கும் அவன் கதியில் அடைக்கலமாய்
நம்பியதன் ஆசீரைச் சொல்வதெனில்
ஒளிபாலிக்கும் அந்த கோளத்தின் மேலே
வைத்தென்னை அளகுபார்க்கும்
ஆண்டவனைக் கரம்கூப்பி
இதை எழுதித் தொடங்கும்.......

- நான்தான் -