திரு முருகமூர்த்தி பழனிதுரை

Place

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், பிரான்ஸ்

Anniversary

50வது மாத நினைவு தினம்

Information

நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை இரைமீட்ட வேளையிலே
திடீரெனச் சுருக்கம் ஏற்பட்டதை உணர்ந்தேன்
பிரிவின் துக்கம் தனிமையின் தாக்கம்
வாழ்க்கையோ விம்பமெனத் தெரிந்து கொண்டேன்
ஆனால், ஆதரவு இல்லை என்ற ஏக்கமில்லாமல்
உங்கள் உறவுகள் அனைத்தும் என்னை அணைத்தன
உங்களை அவர்களில் கண்டேன் ஆறுதல் கொண்டேன்
ஆனாலும் அடிக்கடி மலைபோல் சுமை என் தலைமேல் உள்ளதை உணர்வேன்
ஒன்றாய்த் திரிந்த சென்ற இடங்கள் உங்களைக்
கேட்பது போலப் பிரமை, ஆனாலும் உண்மை
எப்படிச் சொல்வேன்? யாரிடம் கூறுவேன்
என் அடிமனதின் கேள்விகள் துக்கத்தால் வந்தவற்றை?

உங்கள் மெல்லிய இதழ்நோகா சிரிப்போ
சொல்லும் அர்த்தம் புரியும், அது எனக்கு ஆசீர்
வழங்குவதை உணர்வேன் - எந்தன் அயலில்
என்னைப் பார்த்துக் கொண்டிருப்பது எனக்குத் தெரியுது
காவல் காப்பதும் கடவுளிடம் இறைஞ்சுவதும் புரிகிறது
நானோ புலம்புகிறேன், உங்களைப் பார்த்துக் கும்பிடுகிறேன் -
கடவுள் இவ்வுலகில் எனக்குத் தந்த தெய்வமாக
காத்திடுங்கள் இவ்வுலகில் என்னை உங்கள் கண்ணிமையினுள்ளே

துயரத்தால் துயருறும் உங்கள் மனைவி, கௌறி

Leave a message below…