திரு பெர்னான்டோ யேசுதாசன்

Place

மன்னார்

Anniversary

11ஆவது ஆண்டு அஞ்சலி - 18.01.2025

Information

தாய் - தந்தை ஸ்தானத்தில் உச்சம் என் பப்பா

வார்த்தைகளோ மௌனமாயின
உங்கள் மரணத்தில் அதுவும் உண்மையாயின
புன்னகையும் வாடியது பூமுகம் அமைதியாகியது
திடீரென்ற இம்மாற்றம் வடுவில்லா காயமாயிற்று
பறந்தது வருடங்கள் பதினொன்று
‘பறக்கப் போறேன்’ என்று அடிக்கடி பப்பா நீங்கள் சொல்வது
உண்மையுமாயிற்றே
தாயைப் பிரிந்து தவித்த தவிப்புகள், அனுபவித்த றணங்கள் நம்மைத் தாக்கா தாங்கிக் கொண்டவர் நீங்கள்தானே
அத்துயரெல்லாம் மறக்க வைத்து, நாம் பார்க்கா அழுதுகொண்டு
எமக்கு கல்வியினை தினமும் புகட்டி உணவினை ஊட்டி
கலங்கரை விளக்காய்த் திகழவைத்தீங்களே பப்பா!
அதில் உங்கள் மன உறுதியினைக் கண்டுகொண்டேன்
வாழ்க்கை இதுதான் என்று உங்கள் வாழ்க்கையால் உணரவைத்து
உங்கள் நல் பாதையிலே எம்மையும் நடைபழக்கி
விழவிடாமல் தாங்கிச் சென்று கரைசேர்த்தீங்களே!
தற்காலிக இவ்வுலகில் எம்மைத் தவிக்கவிட்டது நீங்களாக அல்ல
அது உங்கள் விருப்பமுல் இல்லை
அது, காலத்தின் கட்டாயமோ? இல்லை அது கடவுளின் தீர்ப்பேதான்
என்றாலும்,
நீங்கள் கனவிலும் தோன்றுவது, செய்தி ஒன்று சொல்லவா?
உங்கள் நினைவுநாளை நினைவூட்டவா?
எப்போ நான் மறந்தேன், என் குடும்பம்தான் மறந்தது உங்களின் நினைவுகளையோ, நிஜத்தின் நிழல்களைப் புதுப்பிக்க
நீங்கள் தந்தையாய் மட்டுமாய் வாழ்ந்தீர்கள்?
அம்மாவைப் பிரிந்தோம் எம்மை அரவணைத்து துயர் தீர்த்தீர்கள்
தாயாகவும் எம்மை அரவணைத்து வாழ்ந்தீர்கள்
தந்தையர்களில் தாய் - தந்தை ஸ்தானத்தில் உச்சம் நீங்கள்
நீங்கள் தங்கியிருப்பது இறைவனின் வாசஸ்தலம், அங்கு
இறைவனைப் புகழ்ந்து கொண்டும்,
எமக்கும் வேண்டிக்கொண்டும், வாழ்த்திக் கொண்டும்
நித்தியத்திற்கும் சந்தோஷமாய் மகிழ்ந்திருக்க
உங்களுக்காய் மன்றாடும்...

அன்பும், பாசமும் நிறைந்த
மகள் - பெரிய தங்கச்சி (மேரி ஜோசப்பின்), மருமகன், பேத்தி


களிப்புடன் என்றும் கதைபேசும் என் பப்பா

விலை மதிப்பில்லா சொத்தொன்று
விண்ணேறிச் சென்ற நாள்
விரைவாய்க் கடந்ததையா
விடியலின் நாட்கள் பல

எங்கள் உணர்வோடு கலந்து
எங்கள் நினைவில் வாழுகின்ற
அன்பு பப்பா உங்கள் முகம் மறைந்து
பதினோராண்டுகள் ஆகி விட்டதே!

களிப்புடனே கதைகள் பல பேசி
எங்களை மகிழ்வித்தேரே
பாசத்தைப் பரிவுடன் ஊட்டி
பாரினில் சிறக்க வளர்த்தீரே
எம்மைப் பரிதவிக்க விட்டு விட்டு
கல்லறைக்குள் ஓடி ஒழிந்ததேனோ?

உமது ஆன்மா சாந்தி அடைய
இறைவனை வேண்டுகின்றோம்.

“மரணங்கள் மறக்க முடியாதவை
மன ரணங்கள் ஆற்ற முடியாதவை”

உங்கள் துயரால் பிரிவுறும்

மகள் - தங்கா (மேரி மெற்றில்டா) குடும்பம், பேரப்பிள்ளைகளும் குடும்பங்களும், பூட்டப்பிள்ளைகள்



எனது கணவரின் தந்தையின் 11 ஆவது வருட நினைவு தினத்தில் அவரின் தந்தையின் நிகழ்வுகள்களின் அன்புப் பதிவு 🥲🙏🏻❤

உயிர் தந்த பப்பாவின்
உயிர் பிரிந்த பத்தாண்டு
கண்ணீரில் கண்கள்
இன்னும் கரைந்தோடுதே
உன்னோடு வாழ்ந்த வாழ்வு
கனவாகிப் போனதே

தூண் போல் இருந்த உறவு
துண்டித்துப் போனதே
நீ விட்டுச் சென்ற நன்மை
நல்லபடி நடத்தி செல்லுதே
பப்பா என்ற வார்த்தை
ஆயிரம் கதை சொல்லுதே

நீ இருக்கும் வரை பப்பா
உனதன்பில் நான் நனைந்தேன்
நீ மறைந்தபின் உன் அன்புக்காய் ஏங்கினேன்

கோபத்தை அதிகமாய்
காட்டிடா அன்புருவம் நீ
தோளுக்கு மிஞ்சினால் தோளனென்று தட்டிக்கொடுத்த என் பப்பா நீ
சிறகடித்து பறந்தபோது
கல்வியே சிறந்ததென
கண்டிப்போடு சொன்னவன் நீ

பிறிட்டிஸ் அரண்மணையில்
இளவரசர் கையினால்
தங்கப்பதக்கமதை உன் பேத்தி
பெற்றதனை பார்க்காமல் போயிட்டியே
நீ மட்டும்இருந்திருந்தால் மார்தட்டி மகிழ்ந்துருப்பாய்
என் மனம் வெம்பியதை
என்னவென்று சொல்வேன் பப்பா.

வீட்டிற்கும் ஊருக்கும்
கல்வியிலும் பண்பிலும்
உதாரண குடும்பமாய்
விளங்கிட செய்தவன் நீ
படித்த குடும்பமடா
என்றுரைக்க மகிழ்ந்தவன் நீ
நீ தந்த கல்வியில் தலைமுறை
நிமிர்ந்து நிற்கிறது
கண்ணீரோடு நன்றி பப்பா

யார் கண் பட்டதோ
காலனவன் பிரித்திட்டான்
நாட்கள் மாதங்களாகி
வருடங்கள் ஓடினாலும்
மறக்காது உன் உருவம்

இறைவன் காலடியில்
அன்பாக நீ உறங்கு
எப்போதும் உனக்காக
இறைவனிடம வேண்டுகிறேன்…

அன்பு மகன் நிர்மலன், மருமகள், பேத்தி, பேரன்


ஒருபோதும் மறவேன் என் பெரியப்பாவை

மண்ணோடு உங்கள் பூவுடல் மறைந்து பதினொரு வருடங்கள் சென்றுவிட்டாலும் உங்கள் நினைவுகள் எங்கள் இதயத்தில் இருந்து ஒருபோதும் மறைவதில்லை.
உங்கள் நினைவுகளுடன்

பெறாமகள் - நிலானி, மருமகன், பேரப்பிள்ளைகள்

Leave a message below…