
posted 21st August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வேலு குமார், திகாம்பரம் எம். பிக்கள் கைகலப்பு
பாராளுமன்ற உறுப்பினர்களான வேலு குமார், திகாம்பரம் ஆகியோர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கைகலப்பில் ஈடுபட்டனர்.
கொழும்பை தளமாகக்கொண்டு நேற்றிரவு ஒளிபரப்பான தொலைக்காட்சி அலைவரிசையின் விவாத நிகழ்வில் வேலு குமார், பழனி திகாம்பரம் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
ஒரு கட்டத்தில் இவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, இருவரும் கைகலப்பில் ஈடுபட்டனர். இருவரையும் அங்கிருந்தவர்கள் சமரசம் செய்து வைத்தனர்.
இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் மூலமாக பாராளுமன்றத்துக்கு தெரிவாகியிருந்தனர். எனினும், நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வேலு குமார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)