வெள்ளத்தினால் மக்கள் பாடசாலைகளில் தஞ்சம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

வெள்ளத்தினால் மக்கள் பாடசாலைகளில் தஞ்சம்

கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில், கண்டாவளை பிரதேசத்தில் 321 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 96 குடும்பங்கள் பாடசாலையில் தஞ்சமடைந்துள்ளன.

அவர்களுக்கான சமைத்த உணவுகள், அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. உப தபாலகம் உள்ளிட்ட பொது மக்கள் சேவை நிலையங்களும் வெள்ளத்தில் சிக்கியுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிய சீரற்ற வானிலையால் 1661 குடும்பங்களை சேர்ந்த 5204 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 21 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று (18) காலை 08.30 க்கு வெளியிடப்பட்ட புள்ளி விபரத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகளிலேயே இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கரைச்சி பிரதேச செயலாளர்பிரிவில், 445 குடும்பங்களை சேர்ந்த 1452 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 05 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

கண்டாவளை பிரதேச செயலாள் பிரிவில், 1216 குடும்பங்களை சேர்ந்த 3752 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 16 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அப்புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளம் வடிந்து வரும் நிலையில், தொடர்ந்தும் புள்ளி விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. இதேவேளை, பாதிக்கப்பட்டவர்கள் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

தொடர்ந்தும் மக்கான எதிர்வு கூறல் உள்ளமையால், மக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தினால் மக்கள் பாடசாலைகளில் தஞ்சம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)