
posted 18th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வெளியேறிய மருத்துவர்கள் மீள நாடு திரும்புகின்றனர் - சுகாதார அமைச்சர்
பொருளாதார நெருக்கடியால் நாட்டிலிருந்து ஆயிரத்து 300 மருத்துவர்கள் வெளியேறினர். இவ்வாறு வெளியேறியவர்களில் 10 முதல் 15 வரையான மருத்துவர்கள் நாட்டுக்கு மீளவும் வந்துள்ளனர். அவர்கள் மருத்துவ பணியில் ஈடுபட்டுள்ளனர். இது எமக்கு நல்ல ஆரோக்கியமான விடயம் - என்று சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
நேற்று (17) புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தபோதே சுகாதார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது, அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் ஆயிரத்து 300 மருத்துவர்களும் 500இற்கு மேற்பட்ட தாதியர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். நாட்டில் தற்போது 24 ஆயிரம் அரச மருத்துவர்கள் இருக்கிறார்கள். வெகுவிரைவில் 3 ஆயிரத்து 500 பேர் மருத்துவர்களாக வெளியேறவுள்ள நிலையில் அவர்களுக்கான நியமனங்கள் விரைவில் வழங்கப்படும். ஒவ்வோர் ஆண்டும் 3 ஆயிரம் பேர் மருத்துவர்களாகின்றனர். இதனால் அரச மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர் வெற்றிடங்களை நிரப்பக்கூடியதாக இருக்கின்றது.
தற்போது 24 ஆயிரம் மருத்துவர்கள் பணிபுரிகின்றபோதிலும் துறைசார்ந்த மருத்துவ நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறியமை பெரும் பிரச்சினையாக உள்ளது. துறைசார்ந்த மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறையால் நாட்டின் சில இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனினும், கடந்த சில மாதங்களில் நாட்டை விட்டு வெளியேறிய 10 முதல் 15 வரையான மருத்துவர்கள் நாட்டுக்கு நாட்டுக்கு மீளவும் வந்துள்ளனர். அவர்கள் மருத்துவ பணியில் ஈடுபட்டுள்ளனர். இது எமக்கு நல்ல ஆரோக்கியமான விடயம் என்றார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)