வெளிநாட்டு கனவில் இருக்கும் இளைஞர்களிடம் பணம் மோசடி

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

வெளிநாட்டு கனவில் இருக்கும் இளைஞர்களிடம் பணம் மோசடி

கிளிநொச்சி, தர்மபுரத்தைச் சேர்ந்த ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து நூதனமாக முறையில் ரூ.52 இலட்சம் ரூபா பணத்தை திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.65 இலட்சம் ரூபா பணத்தை திருடிய கும்பலே இந்த திருட்டிலும் ஈடுபட்டுள்ளது. இந்த குழுவினர் வடக்கிலுள்ள பலரது வங்கிக் கணக்கிலிருந்து பல கோடி ரூபா பணத்தை திருடியுள்ளமை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வெளிநாடு செல்வதற்கு முயற்சித்தார். இதற்காக முகவர்களை அணுகியபோது, அவர்கள் பிரித்தானியாவிலுள்ள ஒருவரை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அவரது வங்கிக்கணக்கில் ஒரு தொகைப்பணத்தை வைப்பிலிட்டு, அதன் விவரத்தை தமக்கு அனுப்பி வைக்குமாறு பிரித்தானிய நபர் கூறியுள்ளனர்.

அந்த இளைஞன், ஒரு தொகைப்பணத்தை வங்கியில் வைப்பிலிட்டு, அதன் விவரத்தையும், மின்னஞ்சல் முகவரியையும் அனுப்பி வைத்துள்ளார்.

பின்னர், தர்மபுரம் இளைஞனை தொடர்பு கொண்ட பிரித்தானிய நபர், அவரது கையடக்க தொலைபேசிக்கு வரும் இலக்கத்தை அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார். இதன்படி, அந்த இளைஞனும் கையடக்க தொலைபேசிக்கு வந்த இலக்கத்தை அனுப்பி வைத்துள்ளார்.

அதன்பின்னர் அந்த இளைஞனுக்கு கையடக்க தொலைபேசிக்கு பணப்பரிமாற்ற குறுந்தகவல்கள் வரவில்லை.

பின்னர், சில நாட்களின் பின்னர் வங்கிக் கணக்கை பரிசீலித்த போது, அதில் 52 இலட்சம் ரூபா பணம் காணாமல் போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பில் அவர் கிளிநொச்சி, இரணைமடுவிலுள்ள பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், அந்த இளைஞனின் வங்கிக் கணக்கில் இருந்த பணம், அந்த இளைஞனை தொடர்பு கொண்டவர்களில் ஒருவரான புதுக்குடியிருப்பைச் சேர்ந்த முகவர் ஒருவரின் வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள இளைஞனின் தம்பியான யாழ்ப்பாணம், கோப்பாயைச் சேர்ந்த கணினி மென்பொறியியலாளரான இளைஞன் ஒருவர் புதுக்குடியிருப்புக்கு சென்று பணத்தை வாங்கியுள்ளார்.

பின்னர், ஒரு தொகைப் பணத்தை தனக்கு எடுத்துக்கொண்டு பெரும்பகுதிப் பணத்தை நெல்லியடியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் ஊடாக உண்டியல் முறையில் சகோதரனுக்கு அனுப்பியுள்ளார்.

பருத்தித்துறை, புதுக்குடியிருப்பை சேர்ந்த இரண்டு முகவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் புதுக்குடியிருப்பு, வள்ளிபுனத்தை சேர்ந்த முகவர், தன்னை முன்னாள் போராளியென அடையாளப்படுத்திக் கொண்டு, மாவீரர் தினம், முள்ளிவாய்க்கால் நினைவு தினங்களில் முன்னணியில் செயற்படுபவர். இலங்கை தமிழ் அரசு கட்சியிலும் செயற்பட்டார். பின்னர், இராணுவத்துடன் அவர் சேர்ந்தியங்கும் தொலைபேசி உரையாடல் பதிவு வெளியானதையடுத்து, கட்சிக்குள் அழைக்கப்படுவதில்லை.

இதேபோல, சில நாட்களின் முன்னர் யாழ்ப்பாணம், குருநகரை சேர்ந்த ஒரு இளைஞன் வெளிநாடு செல்ல முயன்றார். அவரும் இதே மோசடிக் கும்பலிடம் சிக்கி, 65 இலட்சம் ரூபா பணத்தை இழந்துள்ளார்.

பிரித்தானியாவிலுள்ள ஒருவர், யாழ்ப்பாணம், கச்சேரியடியிலுள்ள பெண் ஒருவருடன் தொலைபேசியில் அறிமுகமாகி, நெருக்கமாக பேசி வந்துள்ளனர்.

அந்த பெண்ணை அவசரமாக வங்கியொன்றில் கணக்கை திறக்க வைத்து, அந்த பெண்ணின் வங்கிக் கணக்கிற்கு இளைஞனின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.65 இலட்சம் மாற்றப்பட்டது.

இளைஞனின் சிம் அட்டை செயலிழக்க செய்யப்பட்டு, ஈ- சிம் அட்டை பெற்று, இளைஞனின் வங்கி குறுந்தகவல் சேவை கிடைக்காமல் செய்தனர்.

அந்த இளைஞனின் வங்கியிலிருந்து திருடப்பட்ட பணம், கச்சேரியடி பெண்ணின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டது. அந்த பெண்ணிடம் சென்று, கோப்பாய் இளைஞன் பணத்தை பெற்றார். ரூ.25 இலட்சத்தை தனக்கு எடுத்துக்கொண்டு, ரூ.40 இலட்சத்தை நெல்லியடியில் உள்ள நிறுவனம் ஒன்றின் ஊடாக உண்டியல் முறையில் பிரித்தானியாவிலுள்ளவருக்கு அனுப்பியிருந்தார்.

அந்த இளைஞனும், அவருக்கு உடந்தையாக செயற்பட்ட ஒரு இளைஞனும், கச்சேரியடி பெண்ணும் யாழ்ப்பாணம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மோசடியின் சூத்திரதாரியான பிரித்தானிய நபரை சர்வதேச பொலிசார் ஊடாக கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

வெளிநாட்டு கனவில் இருக்கும் இளைஞர்களிடம் பணம் மோசடி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)