
posted 13th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வெளிநாட்டிலிருந்து யாழ். திரும்பியவர் விபத்தில் பலி
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த ஹைஏஸ் வாகனம் முன்னால் சென்று கொண்டிருந்த லொறியை மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
வியாழக்கிழமை 11ஆம் திகதி அதிகாலை ஏ - 9 வீதியில் திருமுறிகண்டியில் இந்த விபத்து இடம்பெற்றது. இதில் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவரே உயிரிழந்தார். படுகாயமடைந்த மூவரும் கிளிநொச்சி பொது மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பு தெரிவித்தது.
ஹைஏஸ் வாகன சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்துக்குக் காரணம் என்று பொலிஸார் கூறினர்.
விபத்து தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் நடத்தி வருகின்றனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)