
posted 13th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வெல்வோம் சிறிலங்கா நடமாடும் சேவை
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் வெல்வோம் சிறிலங்கா நடமாடும் சேவை நேற்று (12) வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் ஆரம்பமானது.
கிளிநொச்சி மத்தியக்கல்லூரி மைதானத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள மண்டபத்தில் குறித்த நடமாடும் சேவை நேற்று ஆரம்பமாகி இன்றுடன் (13) நிறைவடையவுள்ளது.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலைமையில் இடம்பெறும் குறித்த நிகழ்வில் திணைக்கள செயலாளர், உதவி செயலாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)