
posted 28th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
விபத்தில் சிக்கிய சுமந்திரன் எம்.பி. பயணித்த வாகனம்
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பயணித்த வாகனம் கிளிநொச்சியில் விபத்துக்குள்ளாகியது.
நேற்று (27) சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் கிளிநொச்சி ஏ-9 வீதி 155 கட்டைப் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது.
யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சுமந்திரனின் சொகுசு வாகனம் எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.
இதனால் வாகனத்துக்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயினும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)