
posted 6th October 2021
மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தால் நடாத்தப்பட்டு வருகின்ற தேசியமட்ட வினாடி வினா அரையிறுதி போட்டியில் மன்னார் நானாட்டான் டிலாசால் வித்தியாலய பத்தாம் தர மாணவி ஹென்றி ஆன் ஷிபோனியா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
05.10.2021 அன்று காலை நடைபெற்ற இப் போட்டியில் வட மாகாணத்திலிருந்து பலர் கலந்து கொண்டிருந்த பொழுதும் வடமாகாணத்திலிருந்து இம் மாணவி மட்டுமே தெரிவு செய்யப்படடிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதைத் தொடர்ந்து தேசிய மட்டத்திலான இப் போட்டியானது 06.10.2021 அன்று புதன்கிழமை நடைபெறுமெனவும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக அரையிறுதி போட்டிக்கு தெரிவாகிச் செல்லும் மாணவி ஆன் ஷிபோனியா தெரிவிக்கையில், இப் போட்டிக்கான ஆயத்தங்களை மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம் கடந்த ஒரு மாத காலமாக எங்களுக்கு 'சூம்' ஊடாக ஆயத்த வகுப்பக்களை நடாத்தினார்கள்.
இதைத் தொடர்ந்தே செவ்வாய் கிழமை (05.10.2021) காலை இன்று இதற்கான போட்டி இடம்பெற்றது.
இதில் அரை இறுதிப் போட்டியில் மூவர் தெரிவு செய்யப்பட்டதாகவும் பின் எங்கள் மூவருக்குமிடையே நடைபெற்ற இந்த போட்டியில் எனக்கு வெற்றி கிடைத்ததாகவும் இதைத் தொடர்ந்தே தேசிய மட்டத்திலான போட்டி புதன்கிழமை (06.10.2021) தொடர்ந்து நடைபெற உள்ளது கின்றது என தெரிவித்தார்.
எங்கள் பாடசாலை அதிபர் ஆசிரியர்களே இப் போட்டிக்கான வழிகாட்டிகளாக இருந்து தனக்கு பெருமை ஈட்டுவதற்கான மூலகர்த்தாக்கள் என இவர்களுக்கு பெருமை பாராட்டினாள் மாணவி ஷிபோனியா.

வாஸ் கூஞ்ஞ