விக்கி கூறும் 2ம், 3ம் வாக்குகள் அந்த வாக்களிப்பை பலவீனப்படுத்தும் - மனோ கணேசன்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

விக்கி கூறும் 2ம், 3ம் வாக்குகள் அந்த வாக்களிப்பை பலவீனப்படுத்தும் - மனோ கணேசன்

விக்னேஸ்வரன் கூறும் தமிழ் வேட்பாளர் தெரிவு சிறந்தது எனவும் 2ம், 3ம் வாக்குகளானது அந்த வாக்களிப்பை பலவீனப்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று 1ஆம்திகதி புதன்கிழமை இடம் பெற்ற தமிழ்த் தேசிய மேநாள் நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்:

சி வி விக்னேஸ்வரன், வாசுதேவ இருவரும் குடும்ப ரீதியாக சம்பந்திகள்.
சோசலிச வம்ச பாரம்பரியத்திலிருந்து வந்த இலங்கையில் இடதுசாரி இயக்கத்தின் பிதாவான சம்பத்தியே வாசுதேவ அவர்கள். சிங்கள தனிச் சட்டத்தின்போது ஒரு மொழி என்றால் இரு நாடு. இரு மொழி என்றால் இரு நாடு என்று கூறியவர்தான் வாசுதேவ.

இந்த நாட்டில் சிங்கள இடதுசாரி கட்சிகள் செய்த துரோகம்தான் சிங்கள பெளத்த பேரினவாதத்துக்கு காரணமானது. பொது வேட்பாளர் தொடர்பில் உரையாற்றியிருந்தார். அந்த உரையில் பெரும் பகுதியை ஏற்றுக் கொள்கிறேன். நான் இங்கு வந்தது சஜித்துக்கு வாக்கு எடுத்து செல்வதற்கு அல்ல.

சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் நல்லாட்சியில் எல்லா விடயத்திலும் நம்பி நடந்தார்கள். இப்போது ஜனாதிபதியாக உள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமராக இருந்த போது ஆதரவளித்தார்கள்.

அப்போது அமைச்சராக இருந்தும் அரசியலமைப்பு வராது என்றேன். ஆனால் எதிர்க் கட்சி தலைவராக இருந்து கொண்டு வரும் என்றார்கள். இறுதிவரை இன்றும் வரவில்லை.

ஆனால் அன்றும், இன்றும் சரியானதை சொல்ல தயங்கவில்லை. அந்த அரசில் அமைச்சராக இருந்து கொண்டு வராது என்றேன். ஆதரவாக இருந்து கொண்டு வரும் என்று நம்பினார்கள்.

தமிழ் பொது வேட்பாளர் விடயத்தை நானும் வரவேற்கிறேன். அந்த தேர்தலை வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் பொது வாக்கெடுப்பாக நடந்த வேண்டும் என்று நாம் சொன்னதை இன்று விக்னேஸ்வரன் சொல்கிறார்.

இந்த தேர்தலானது வாக்கெடுப்பாக செய்யலாம். அதற்கான வாய்ப்பாக இந்த சூழல் அமைந்துள்ளது.

அவ்வாறு தேர்தல் ஒன்று நடத்தினால் தமிழ் வேட்பாளரை நிறுத்துங்கள். ஆனால் 2ம், 3ம் வாக்குகள் வேண்டாம். அது அந்த வாக்களிப்பை பலவீனப்படுத்தும்.

இன்னுமொரு சாரார், வேட்பாளருடன் எழுத்து மூலமாக பெற்று ஆதரிப்போம் எனவும் கூறுகின்றனர். அதனால் இங்கு 1000 வாக்குகள் கொடுத்தால், அங்கு 10,000 வாக்குகள் போய்விடும் எனவும் குறிப்பிட்டார்.

இங்கு தமிழ் வேட்பாளர் வாக்களிப்பை மலையகத்தில் காட்ட முடியாது. அங்கு உரிமைக் குரல் கொடுக்கும் நான் இங்குள்ள மக்களுக்காக உறவுக்கரம் கொடுப்பேன். அது போல் அங்குள்ள மக்களுக்கும் உரிமைக் குரல் கொடுக்க வேண்டும்.

தமிழ் வேட்பாளருக்கா அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாணசபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து பேரவையை கூட்டி அங்கு முடிவெடுங்கள்.

முடியவிட்டால் தமிழ் மக்களுக்கு தரக்கூடிய தீர்வை தருபவர்களுக்கு கை கொடுங்கள். பகிரங்கமாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறினால் மட்டும் ஆதரவு கொடுங்கள்.

சஜித் வடக்கு, கிழக்கு மக்களிற்கு 13ம் திருத்தத்தம் வழங்குவதற்கு உறுதி வழங்கியிருந்தார். தேர்தல் விஞ்ஞாபனத்தில் பதிவதாகவும் கூறியிருந்தார்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் இங்கு வந்து குடியேறிய மலையக தமிழர்கள்தான் தமிழர்களின் இருப்பு தக்கவைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தமிழரசுக் கட்சியின் நிலை குறித்து கவலை அடைவதாகவும் தெரிவித்த அவர், அனைத்துக் கட்சிகளும் பலமாக இருக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

விக்கி கூறும் 2ம், 3ம் வாக்குகள் அந்த வாக்களிப்பை பலவீனப்படுத்தும் - மனோ கணேசன்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi மகாநதி 26.08.2025

Mahanadhi மகாநதி 26.08.2025

Read More
Varisu - வாரிசு - 26.08.2025

Varisu - வாரிசு - 26.08.2025

Read More
Mahanadhi மகாநதி 25.08.2025

Mahanadhi மகாநதி 25.08.2025

Read More
Varisu - வாரிசு - 25.08.2025

Varisu - வாரிசு - 25.08.2025

Read More