
posted 7th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வவுனியா பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் கறுப்புக்கொடி போராட்டம்
வவுனியா பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் நேற்று (06) கறுப்பு உடை அணிந்தும் கறுப்புக் கொடிகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் சத்யாகிரக போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
வவுனியா பல்கலைக்கழகத்தில் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வரும் நிலையில் துணை வேந்தர்கள் தமது கோரிக்கைகள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவுக்கு எவ்வித தகவல்களையும் தமது சார்பில் வெளியிடவில்லை என்பதை கண்டித்து நேற்றைய தினம் கறுப்புக் கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா பல்கலைக்ககழத்தின் வீதியோரங்களிலும் கறுப்புக் கொடிகளை பறக்கவிட்டு தமது எதிர்ப்பை அவர்கள் தெரிவித்தனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)