
posted 20th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற சட்டம் தேவை
தேர்தல் காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கோரி நேற்று (19) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் கையெழுத்து போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக பொது மக்களிடம் கையெழுத்து பெறும் போராட்டம் நடத்தப்பட்டது.
தேர்தல் காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வழங்கும் வாக்குறுதிகள் வழக்கமாக நிறைவேற்றப்படுவதில்லை. அவ்வாறான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் இயற்றப்பட வேண்டும் என்று கோரியே மக்களிடம் கையொப்பங்கள் பெறப்பட்டன.
இந்த கையொப்பம் பெறும் போராட்டம் நேற்று 17 மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)