வலி மிகுந்த அகதி வாழ்வின் 32 ஆண்டு நிறைவை இறை வழிபாட்டுடன் நினைவுகூர்ந்த மக்கள். | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

யாழ். வலிகாமம் வடக்கு மக்களின் துயர் நிறைந்த 32 வருடகால அகதி வாழ்க்கை நிறைவை ஒட்டி தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது.

இதன்போது வலிவடக்கு பகுதிகள் முழுவதும் விடுவிக்ககோரி வழிபாடுகள் இடம்பெற்றதுடன் வழிபாட்டின் நிறைவில் சிதறுதேங்காய் அடிக்கப்பட்டது.

இந்த வழிபாடுகளில் வலி. வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வுச் சங்கத்தின் தலைவர் அ. குணபாலசிங்கம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உட்பட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி வலிகாமம் வடக்கிலிருந்து அங்கிருந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டதன் 32 வருடங்கள் நேற்று நிறைவு செய்தமை குறிப்பிடத்தக்கது

வலி மிகுந்த அகதி வாழ்வின் 32 ஆண்டு நிறைவை இறை வழிபாட்டுடன் நினைவுகூர்ந்த மக்கள். | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY