
posted 22nd July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வயலில் எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டது
திருகோணமலை, தம்பலகாமம் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டது. தம்பலகாமம், கூட்டாம்புளி பகுதியில் சடலம் ஒன்று காணப்படுவதாக அந்தப் பகுதி விவசாயிகளால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் பேரில் நேற்று முன்தினம் (19) மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டது.
சடலத்துக்கு அருகே அடையாள அட்டை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் உயிரிழந்த நபர் தம்பலகாமத்தைச் சேர்ந்த அன்புவழி புரத்தில் திருமணம் முடித்தவர் எனத் தெரியவந்தது. இவர் அண்மைக் காலமாக பிரான்ஸில் வசித்து வந்தவர் என்றும் திருமண நிகழ்வொன்றுக்காக சில நாட்களுக்கு முன்னர் சொந்த மண்ணுக்கு வந்திருந்த நிலையிலேயே உயிரிழந்தார் என்றும் தெரியவந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளில் தம்பலகாமம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)