வன்முறைகளுக்கு முகங்கொடுக்கும் சிறுவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

வன்முறைகளுக்கு முகங்கொடுக்கும் சிறுவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்

வன்முறைகளில் இருந்து சிறுவர்களைப் பாதுகாப்பதும், வன்முறைக்குள்ளான சிறுவர்களைப் பராமரித்து அவர்களுக்கான சேவைகளை திறம்பட வழங்குவதற்கும் துறைசார்ந்த அதிகாரிகள் முன்வர வேண்டும். இவ்வாறு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி சகிலா இஸ்ஸடீன் வலியுறுத்தியுள்ளார்.

கல்முனை பிராந்தியத்தில் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் வன்முறைகளில் இருந்து அவர்களைப் பாதுகாத்து, பராமரிப்பது தொடர்பில் துறைசார்ந்தவர்களுடனான உயர்மட்ட கலந்துரையாடல் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,

சிறுவர்களுடைய பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பில் பொறுப்பு வாய்ந்த நிறுவனங்கள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். வன்முறைகளில் இருந்து சிறுவர்களைப் பாதுகாப்பதும் வன்முறைக்குள்ளான சிறுவர்களைப் பராமரித்து அவர்களுக்கான சேவைகளை திறம்பட வழங்குவதற்கும் துறைசார்ந்த அதிகாரிகள் முன்வர வேண்டும். அது அவர்களின் கடமையும், பொறுப்புமாகும்.

அந்த வகையில் சகல நிறுவனங்களும் ஒன்றுபட்டு செயல்படும்போது மாத்திரமே சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைக் குறைக்க முடியும். அத்துடன், பாதிக்கப்படுகின்ற சிறுவர்களையும் பராமரித்து அவர்களுக்கு சிறந்த ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்க முடியும் என்றார்.

எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

வன்முறைகளுக்கு முகங்கொடுக்கும் சிறுவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)