
posted 3rd August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வடக்கில் குடிநீர் விநியோகம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றபோது வடக்கில் குடிநீர் விநியோகம் 4 சதவீதமாகக் காணப்பட்டது. தாளையடி குடிநீர் திட்டத்தின் மூலம் இது இன்று முதல் நாற்பது சதவீதமாக உயர்வடையும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் நம்பிக்கை வெளியிட்டார்.
யாழ்ப்பாணம் - கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்தின் தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தைதன திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
குடிநீர் அடிப்படை உரிமையாகும். அதை மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது, செலவு அதிகமாக இருந்ததால் சிக்கல் ஏற்பட்டது. ஆனால், மக்களின் குடிநீர் தேவையை உறுதிப்படுத்த இந்த சவாலை ஏற்றுக்கொண்டோம்.இந்தத் திட்டத்துக்கு பல கிராமங்கள் காணிகளை கொடுக்க விரும்பவில்லை. இருப்பினும் இந்தக் காணியை வழங்கிய தாளையடி கிராம மக்களுக்கு நன்றி- என்றார்
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)