வடக்கிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு- செயற்கை அவயவம் பொருத்தும் இலவச முகாம்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

வடக்கிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு- செயற்கை அவயவம் பொருத்தும் இலவச முகாம்

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இந்தியாவின் ஜெய்பூரிலுள்ள பகவான் மகாவீர் விக்லாங் சஹாயட்ட சமித்தியினுடைய தொழில்நுட்ப உதவியுடன் இம் மாகாணத்தில் இரண்டாவது தடவையாக செயற்கை அவயவம் பொருத்தும் இலவச முகாம் இம்மாதம் 4ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பழைய பூங்கா வீதி, சுண்டிக்குளியிலுள்ள யாழ். மாவட்ட திறன் விருத்தி நிலையத்தில் நடைபெற்று வருகின்றது.

இந்தியத் தூதரகத்தின் அனுசரணையுடன் யாழ். இந்தியத் துணைத் தூதரகமும் வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகம் மற்றும் மகளிர் விவகார சமூக சேவைகள் அமைச்சு, யாழ். மாவட்ட செயலகம், மாகாண சமூக சேவைகள் திணைக்களம் என்பன இணைந்து இந்த இலவச முகாமை ஏற்பாடு செய்துள்ளன. இந்திய வெளிவிவகார அமைச்சு இதற்கான அனுசரணையை வழங்கியுள்ளது.

இதற்கமைய சமூக சேவைகள் திணைக்களத்தின் ஒருங்கிணைப்புடன் ஏற்கனவே பயனாளிகள் தெரிவு இடம்பெற்றுள்ளன. தங்கள் அவயவங்களை துரதிஷ்டவசமாக இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கான கௌரவமான சமுதாய வாழ்வை மீளக் கொடுக்கும் முகமாகவும் அதேநேரம் அவர்களைப் பொருளாதார ரீதியாக வலுப்பெறச் செய்யும் நோக்கோடும் இம் முகாம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இம் முறை 350 பயனாளிகள் நன்மையடைவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், இம் முறை இந்திய ஜெய்பூர் தொழில்நுட்பவியலாளர்களுடன் புதிய நுட்ப பரீட்சயத்துக்காக யாழ். ஜெய்பூர் மாற்றுத்திறனாளிகளுக்கான புனர்வாழ்வு நிலைய தொழில்நுட்பவியலாளர்களும் இணைந்துள்ளனர்.

வடக்கிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு- செயற்கை அவயவம் பொருத்தும் இலவச முகாம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi மகாநதி 26.08.2025

Mahanadhi மகாநதி 26.08.2025

Read More
Varisu - வாரிசு - 26.08.2025

Varisu - வாரிசு - 26.08.2025

Read More
Mahanadhi மகாநதி 25.08.2025

Mahanadhi மகாநதி 25.08.2025

Read More
Varisu - வாரிசு - 25.08.2025

Varisu - வாரிசு - 25.08.2025

Read More